கட்சி செய்திகள்

கடந்த ஐந்து மாதங்களாக இரண்டாம் கட்ட புத்தகங்கள் மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்களின் நிலை கேள்விக்குரியாகி உள்ளது, மாணவர்களுக்கு கழிவரை இருந்தும் பயன்படுத்த முடியா அவல நிலை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஆர்.கே.நகர். தொகுதி, கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர். பகுதியில் உள்ள ஏ.இ.எம். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் வட சென்னை மாவட்ட SDPI கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பள்ளியின் அவல நிலைகள் எடுத்துரைத்து தங்களின் சார்பில் பள்ளியை அரசு எடுத்து நடத்த கோரிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஏ.இ.எம்.மெட்ரிகுலேஷன் பள்ளியை அரசு எடுத்து நடத்திட வேண்டும் என மாவட்ட பொதுச்செயலாளர் புஸ்பராஜ் தலைமையில் உதவி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். துறை சார்ந்து உரியை நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதியளித்தார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி 35-வது வார்டில் மக்களின் அன்றாட தேவையான குடிநீரில் கழிவுநீர் கழந்து வருகிறது. இதனை கண்டித்து SDPI கட்சியுடன் பொதுமக்கள் இணைந்து கடந்த வியாழன் (அக்டோபர் 19, 2017) அன்று மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தொடர் இரண்டு நாட்களாக மாநாகராட்சி வேலையை துரிதப்படுத்தி குடிரீல் கழிவுநீர் கழந்து வருவதை சரி செய்து வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் தேவிட்டினத்தில் தூய்மை மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் (PDO) மற்றும் தேவிபட்டினம் அரசு மருத்துவமைனை தலைமை மருத்துவர் டாக்டர் முனீஸ்வரி ஆகியோர் தேவிபட்டினத்தின் குப்பைகள் நிறைந்த பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.
SDPI கட்சியின் மாநில ஊடக நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் மதுரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் உட்பட பல்வேறு மாவட்ட ஊடக நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
SDPI கட்சியின் மாநில மக்கள் தொடர்புத்துறை(PRO) நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் மதுரையில் இன்று(20.10.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் உட்பட பல்வேறு மாவட்ட மக்கள் தொடர்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி 35-வது வார்டில் மக்களின் அன்றாட தேவையான குடிநீரில் கழிவுநீர் கழந்து வருகிறது. இதனை கண்டித்து SDPI கட்சியுடன் பொதுமக்கள் இணைந்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி 28-வது வார்டு சார்பாக கிளை நிர்வாகிகள் தலைமையில் ஜாமிஆ பள்ளிவாசல் வெளியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகரம் சார்பாக நகர தலைவர் T.J.மாப்பிள்ளை தம்பி தலைமையில் மார்க்கெட் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மருத்துவ அலுவலவர் டாக்டர். பா. விஜயகுமார் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அரவக்குறிச்சி தொகுதி தலைவர் A. ஜாபர் சாதிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.முஹம்மது மிர்ஸா, பள்ளபட்டி நகர செயலாளர் S.காஜாமொய்தீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் T.S.சேக் பரித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
மராட்டிய மாநிலம் மும்பையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி P.B. சாவந்த், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் துணைத்தலைவர் மௌலானா சஜ்ஜாஜ் நுஃமானி மற்றும் முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சா பட்டேல் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட தேசிய அளவிலான Alliance for Peace and Justice (அமைதி மற்றும் நீதிக்கான கூட்டமைப்பு)ன் கலந்தாய்வு கூட்டம் 15.10.2017 மற்றும் 16.10.2017 ஆகிய இரு தேதிகளில் மும்பை போர்ட் ஆஜாத் மைதான் அருகாமையிலுள்ள, மும்பை மராத்தி பத்ரகார் சங்க் என்ற இடத்தில் நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை