கட்சி செய்திகள்

புதுவையில் பள்ளிவாசலை சேதப்படுத்திய ஃபாசிசவாதிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;
முஸ்லிம்களின் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க அரசை கண்டித்தும், ஜெருசலத்தை ஃபாலஸ்தீனத்துக்கே திருப்பிக் கொடு என்ற முழக்கத்தோடும் டெல்லியில் #SDPI கட்சியின் சார்பில் மாபெரும் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இப்போராட்டத்தில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்கும், அந்த பழங்கால நகருக்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றி அதிபர் டிரம்ப் அறிவித்து இருப்பதற்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்கள் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
1992ம் ஆண்டு டிசம்பர் 06 அன்று ஒட்டுமொத்த உலகமே விழித்திருந்த நேரத்தில், முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் சங்கபரிவார சக்திகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தரைமட்டமாக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டுமல்ல.தேசத்தின் ஜனநாயகமும்,வழிபாட்டு உரிமையும்,மதசார்பின்மையும்,சிறுபான்மையினரின் நலன்களும் பாதுகாப்பும் சேர்ந்தே இடிக்கப்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும், இடித்த குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும், உச்ச நீதி மன்றம் சட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நியாமான தீர்ப்பு வழங்க வேண்டும், நீதிக்காக தேசத்தின் அபிமானிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று (டிச. 06) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை, சேப்பாக்கத்தில் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி தலைமையில் நடைபெற்ற நீதிக்கான ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவாரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி கூறியதாவது; உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை பெற்றுத்தத்தந்த பாபரி மஸ்ஜித் இடிப்பு நடைபெற்று இன்றோடு 25 ஆண்டுகாலம் கடந்துவிட்டது. இருந்தும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றவாளிகளாக நீதிபதி லிபர்ஹான் கமிஷனால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் சட்டப்படி தண்டிக்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் மஸ்ஜித் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்த அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில்“இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை மிக்க ,சோசலிஷ ,மதசார்பற்ற ,ஜனநாயக, குடியரசாக கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளோம்.” பாபரி பள்ளி இடிப்பு என்பது அரசியல் சாசன முகப்புரையில் கூறப்பட்டுள்ள அத்தனை அம்சங்களையும் தகர்த்த செயலாகும். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் பல்வேறு அதிகாரம் மிகுந்த பதவிகளில் அமர்ந்திருப்பது மாபெரும் அநீதி, நாட்டிற்கே இது அவமானம். இத்தனை ஆண்டுகளாக முஸ்லிம் சமூகமும்,தேசத்தின் நல விரும்பிகளும் ஒருமித்த குரலில் பாபரி மஸ்ஜித்தின் நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்த முக்கிய கட்டத்தில், சங் பரிவார அமைப்புகள் தங்களின் முகவர்களை மத்தியஸ்தர்களாக கொண்டு வந்து, முஸ்லிம் சமூகத்தில் விலைபோனவர்களை தங்கள் பக்கம் இழுத்து, குழப்பங்களை ஏற்படுத்தி நீதித்துறையை புறந்தள்ள முயற்சி செய்து வருகின்றனர். சங்பரிவார்களின் இந்த செயல் திட்டம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்கள் நீதித்துறையின் இறுதித் தீர்ப்பிற்காக காத்திருக்கும் இந்த சூழலில் எந்த சமரச முயற்சிகளையும் முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள். நீதிக்காக முஸ்லிம்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும். பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்ட தகர்ப்பாகும். அதனை மீண்டும் கட்டுவதுதான் தேசத்தின் உயிர்ப்பாகும். பாபர் பள்ளியை மீண்டும் கட்ட வேண்டும், இடித்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இப்போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, பொதுச்செயலாளர் ஹுசைன், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சலீம், பொதுச்செயலாளர் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், பொதுச்செயலாளர் புஸ்பராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நீதிக்கான கண்டன முழக்கமிட்டனர்.
சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தின் இன்று (நவ.03) பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறுவிசயங்கள் குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலைப்பாடு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஒருவருடங்கள் கழித்து இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் தொடார்பான எஸ்.டி.பி.ஐ. கட்சியின்நிலைப்பாடு குறித்து மதுரையில் நேற்று முன்தினம் (நவ.01) நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிபோட்டியிட வேண்டாம் எனவும், மேலும் எந்த கட்சிக்கும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவர்களின்மனசாட்சி பிரகாரம் வாக்களிக்கலாம் எனவும் முடிவுசெய்யப்பட்டது. ஆகவே, ஆர்.கே.நகர் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பாபரி மஸ்ஜித் இடிப்பு 25 ஆண்டுகால தேசிய அவமானம்: 1992ம் ஆண்டு டிசம்பர் 06 அன்று ஒட்டுமொத்த உலகமே விழித்திருந்த நேரத்தில், முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் சங்கபரிவார சக்திகளால் இடித்து தடைமட்டமாக்கப்பட்டது. உலகஅரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை பெற்றுத்தத்தந்த அந்த நிகழ்வு நடைபெற்று 25 ஆண்டுகாலம் கடந்த பிறகும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றவாளிகளாக நீதிபதிலிபர்ஹான் கமிஷனால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் சட்டப்படி தண்டிக்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்துமீண்டும் அதே இடத்தில் மஸ்ஜித் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்த அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்ட தகர்ப்பாகும். அதனை மீண்டும் கட்டுவதுதான் தேசத்தின் உயிர்ப்பாகும். ஆகவே, எதிர்வரும் டிசம்பர் 06 அன்று இந்தியா முழுவதும்எஸ்.டி.பி.ஐ. கட்சி 500க்கும் மேற்பட்ட இடங்களில் நீதிகோரி ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. தமிழகத்திலும் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டஇடங்களில் நீதிகோரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, சங்க்பரிவார்சக்திகளால் தகர்க்கப்பட்ட பாபரி மஸ்ஜித் விவகாரத்திற்கு நீதிகோரி, அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஓகி புயல் பாதிப்பு - மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது: ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தின் 80 சதவீத பகுதிகள் ஓகி புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளன. மேலும், மின் கம்பங்களும் சரிந்துவிழுந்துள்ளன. இதனால் சாலை போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர். 2004ம் ஆண்டு சுனாமியின் போது போதுமான எச்சரிக்கை விடுக்கப்படாதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன என குற்றம் சாட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து புயல், மழை வெள்ளம் போன்றவை ஏற்படுவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த வேளையில், ஓகி புயல் குறித்து போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகளைமத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறப்போகிறது என்ற எச்சரிக்கை மீனவர்களிடம் கொண்டு சேர்க்கப்படாததன்காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று ஓகியின் பிடியில்சிக்கியுள்ளனர். இதற்கு மத்திய,மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். கேரளாவில் ஓகி புயல் பாதிப்பு தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அம்மாநில அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், தமிழக அரசு மெத்தனமாகவே இருக்கிறது. தமிழக முதல்வர் இன்னும்பாதிக்கப்பட்ட இடங்களை காண முன்வராதது வருத்தமளிக்கிறது. சென்னையை புரட்டிய வர்தா புயல் பாதிப்பின் போது காட்டிய அக்கறையை, குமரியை தாக்கிய ஓகி புயல் பாதிப்பில் தமிழக அரசுகாட்டவில்லை. குமரி மாவட்டத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் இன்னும் பாதிக்கப்பட்ட இடங்களை கூட பார்வையிடாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே, ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதிகளாக அறிவிக்கவேண்டும். காணாமல் போன மீனவர்களை ஹெலிகாப்டர்களை கொண்டு தேடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களை முதல் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு, மக்களின்இயல்பு வாழ்க்கை திரும்ப நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், புயலால் உயிரிழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகஅரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வர்தா புயலின் போது மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டியது போன்று இல்லாமல், ஓகி புயல் நிவாரண நிதியை மத்தியஅரசிடமிருந்து விரைவாக பெற்று குமரி மாவட்டத்தை புனரமைக்க அதிக அக்கறை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் …
தமிழக அரசு குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கவும், காணாமல் போன மீனவர்களை உடனே கண்டுபிடித்திடவும், நெல்லை மற்றும் குமரியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் உட்பட அனைவருக்கும் உடனே நிவாரணம் வழங்கிடவும் SDPI கட்சியின் சார்பாக சென்னையில் இன்று (டிச.03) மாபெரும் சாலை மறியல் போராட்டம் மாநில செயலாளர் எஸ். அமீர் ஹம்ஸா தலைமையில் நடைபெற்றது.
தமிழக வேலைவாய்ப்புகளை வடநாட்டினருக்கு தாரை வார்க்கும் அறிவுப்புகளை வெளியிட்ட தமிழ்நாடு தேர்வாணையத்தை கண்டித்து திராவிட விடுதலைக் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டிச.02 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தமிழ்நாடு தேர்வாணையத்தின் துரோக செயலை விவரித்து உரையாற்றினார்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தின் 80 சதவீத பகுதிகள் ஓகி புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளன. மேலும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளதால் குமரி மாவட்டம் கடந்த மூன்று நாட்களாக இருளில் தத்தளிகின்றது. கனமழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர். மெழுகுவர்த்தி கூட போதிய அளவில் கிடைக்கப்பெறாத ஒரு சூழல் அங்கு நிலவுகின்றது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள பெரிய பள்ளிவாசல் வெளியில் செல்லும் கால்வாய் நகராட்சியால் தூர்வாரப்பட்டது. தூர்வாரப்பட்ட கால்வாய் சரியான முறையில் மூடப்பட்டு பாதை அமைத்து தராததால் கடந்த நான்கு நாட்களாக பள்ளிவாசலுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த கள்ளக்குறிச்சி நகர SDPI கட்சியினர் பள்ளிவாசலுக்கு செல்லும் வழியை மீண்டும் ஒரு முறை சுத்தம் செய்து வழி அமைத்து கொடுத்தனர்.
குமரி அருகே மையம் கொண்டுள்ள ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை