கட்சி செய்திகள்

காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவிற்கு நீதிக்கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக துணைத் தலைவர் குணங்குடி ஹனீஃபா மற்றும் SDPI கட்சியின் தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீயுஸ் எக்ஸ் ஆங்கில தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நேற்று(ஏப்ரல்.20) அன்று கலந்து கொண்டார். அதில் "தமிழர்கள் பொய்யர்கள், பிரிவினைவாதிகள், நடிப்பவர்கள் என்று மிகவும் கொச்சைபடுத்தி அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மார்வாடிகளை விட்டும் பேச வைத்திருக்கிறார். அந்த தொலைகாட்சியின் தொகுப்பாளர். ஆனால் இதற்கு மறுப்பு சொல்ல திருமுருகன் காந்திக்கு வாய்ப்பு கொடுக்காததோடு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பேசநேரமே கொடுக்காமல் தமிழின விரோதத்தோடு நியூஸ் எக்ஸ் ஆங்கில தொலைகாட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து இரவு திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே17 இயக்க தோழர்கள் தொலைகாட்சி வாயில் முன் தமிழர்களை இழிவுபடுத்திய நிகழ்ச்சி நெறியாளர் பகிரங்கமாக தொலைகாட்சியில் தமிழர்கள் இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தோழர் திருமுகன் காந்தியுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சி தோழர்கள், மே பதினேழு இயக்க தோழர்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தோழமை அமைப்புகளின் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் இன்று(ஏப்.19) காலை 10 மணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் 127வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் சானாவாஷ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்கும் வகையிலான தொலைலைபேசி உரையாடல் வெளியில் கசிந்து அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மாணவர்களுக்குக் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியரே மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி தவறான பாதைக்கு வழிகாட்டுவது என்பது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் நதி நீர் பாராளுமன்ற அமைப்பு சார்பில் 17.04.2018 அன்று பாபநாசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் SDPI கட்சியின் நெல்லை ஏர்வாடி நகர தலைவர் மர்ஹபா சேக் முஹம்மது, மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது மற்றும் தொகுதி செயற்குழு உறுப்பினர் சலீம் ஆகியோர் கலந்து கொண்டு தாமிரபரணி மீட்பு களத்தில் தேவையான உதவிகளை மேற்கொள்வோம் என உறுதி அளித்தனர்.
தலித்கள் மீதான தொடர் தாக்குதல்கள், கிறிஸ்தவ ஆலயங்களுக்கான தடை, ஜெபக்கூட்டங்களுக்கான தடை, புனித நூல் எரிப்பு ஆகிய வன்முறை வெறியாட்டங்களை நடத்தும் பாஸிச பயங்கரவாத கும்பலை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் களியக்காவிளையில் கடந்த 12.04.2018 வியாழன் அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் குமரி மாவட்ட தலைவர் சுல்ஃபீகர் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்திய குடியரசு கட்சியின் சார்பில் 14.04.2018 சனிக்கிழமை அன்று நெல்லை கிழக்கு மாவட்டம் ஏர்வாடியில் டாக்டர் பாபா ஷாஹேப் அம்பேத்கர் அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்யில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் நாங்குனேரி தொகுதி தலைவர் இஞ்சினியர் இம்ரான் அலி, நகர செயலாளர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் கிறிஸ்த்தவ கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்த்தவ வழிபாட்டு தளங்கள் மற்றும் போதகர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பைபிள் தீக்கிரையாக்கப்படுவதை கண்டித்தும் சிம்னி ஹோட்டல் எதிரில் மாபெறும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஹசன் அலி, மாவட்ட செயலாளர் லுக்மானுல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா, SDPI கட்சியின் மாவட்ட பொருளாளர் குறிஞ்சி பாஷா, கிழக்கு தொகுதி தலைவர் மன்சூர், துணைத்தலைவர் இலியாஸ், மேற்கு தொகுதி தலைவர் மஸ்தான் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம்! - தமிழர்களின் போராட்ட உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - எஸ்.டி.பி.ஐ காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தொடர் துரோகத்தை கண்டித்து பிரதமர் மோடி வருகையின் போது கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும் கருப்பு தோரணம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை