கட்சி செய்திகள்

நாகை வடக்கு மாவட்டம் நீடுரில் நடைபெறும் SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்களை, நீடூர் ஜாமியா மிஸ்பாஹூல் ஹூதா அரபிக் கல்லூரி முதல்வர் மெளலானா முகமது இஸ்மாயில் ஹஜரத் அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.
நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நீடுரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (11.10.2017) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள நீடூருக்கு வருகை தந்த மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி அவர்கள் நீடூர் கிளையில் கொடியேற்றிவைத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.
பரவி வரும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் வகையில் SDPI கட்சி வட சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதி 68-வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்குகளை மக்கள் மன்றத்தில் எடுத்துறைப்பதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் நிகழ்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மதுரை மற்றும் சென்னையில் உரிமை முழக்க மாநாடுகளை நடத்தியது. மதுரை: அக்டோபர் 7 சனிக்கிழமை அன்று மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி எதிரில் உள்ள மருதநாயகம் திடலில் ‘நாங்கள் சொல்வது என்ன?’ என்ற தலைப்பில் பெருந்திரள் மாநாடு நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் மாநாட்டிற்கு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தனது உரையில், “வளர்ச்சி, ஊழல், கருப்புபணம் என்ற வார்த்தை பிரயோகங்களோடு, மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை மோடி அரசு கட்டுப்படுத்த தவறியதால் சாமானிய மக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் பொருளாதார ஆய்வாளர்களின் எச்சரிக்கையை மீறி கொண்டுவரப்பட்ட டிமானிடைசேஷன் மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவை மோடி அரசின் ஏமாற்றுவேலை என்பது தெளிவாகியுள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்களே மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையால் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இந்தியாவின் அடிப்படை கொள்கையான மதசார்பற்ற தன்மையை மாற்றி இந்து ராஷ்டிரத்தை அமைக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸூம் முயற்சித்து வருகின்றன. பாஜக அமைச்சர்கள், முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் பேச்சுக்கள் நாட்டில் பதட்டமான சூழலை உருவாக்கி வருகின்றன. வகுப்புவாத சிந்தனைகளோடு மாட்டின் பெயரால் அப்பாவிகளை கும்பலாக தாக்கி கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் அவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் அச்சாரமான சகிப்புத்தன்மையும், மதச்சார்பின்மையும் அசைக்க முடியாதவை. அவற்றைக் கொண்டு இந்தியாவின் வலுவான பொருளாதாரத்தை உருவாக்காமல், அதன் அடித்தளத்தை வலுவிலக்கச் செய்யும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு துணைபோவதை மத்திய மோடி அரசு கைவிட வேண்டும். சாமனிய மக்களை பாதிக்கும் வகையில் அதேநேரம் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகளையும் மோடி அரசு கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார். பாசிசத்தை எதிர்கொள்வதில் மற்ற கட்சிகள் முன்வராவிட்டாலும் பாப்புலர் ஃப்ரண்டுடன் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியும் பாசிசத்தை எதிர்க்கும், உறுதுணையாக இருக்கும் என சூளுரைத்தார். மேலும், இம்மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான உ.தனியரசு, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், சி.பி.ஐ. நிர்வாக குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குணசேகரன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்ட் தேசிய துணை தலைவர் பாத்திமா ஆலிமா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொது செயலாளர் சம்சுல் இக்பால் தாவூதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். முன்னதாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தேசிய தலைவர் எ.சயீத் அவர்களின் உரையை மொழிபெயர்த்து விளக்க உரையாற்றினார். மேலும் இம்மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக், பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சென்னை: இதேபோன்று சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் அக்-08 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட உரிமை முழக்க மாநாடு நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உரை நிகழ்த்தினார். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு கொண்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு தலித் சமூகம், இஸ்லாமிய சமூகம், முற்போக்கு சிந்தனையாளர்கள் உட்பட பலரின் ஆதரவு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும், ஏனென்றால் சமூக பிரச்சினைகளுக்காகவும், பாசிச அரசுக்கு எதிராகவும், நசுக்கப்படும் விளிம்பு நிலை மக்களுக்காகவும் இந்திய அளவில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து போராடும் மாபெரும் பேரியக்கமாக இந்தியாவில் இருந்து வருகிறது. அது மட்டுமின்றி இந்திய அளவில் இயற்கை பேரிடர் மீட்பு குழுவாகவும் ஜாதி, மதம் பாராமல் தன்னலமற்ற பரந்த சேவையாற்றி வருகிறது பாப்புலர் ஃப்ரண்ட். தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. (NIA), மக்கள் சேவையாற்றி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்பது பல தருணங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் இந்திய மக்களுக்கு செய்து வரும் சேவைகளை முடக்கிட வேண்டும் என்ற முழு மூச்சோடு செயல்பட்டு வரும் பாசிச அரசுக்கு துணையாக நிற்கும் என்.ஐ.ஏ.வின் குற்றச்சாட்டுகளை, பாப்புலர் ஃப்ரண்ட் ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டு முறியடிக்கும். இச்செயலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு துணை நிற்கும் என…
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உரிமை முழக்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (அக்.07) மதுரை வருகை தந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மதுரை மாவட்ட தலைவர் ஜாஃபர் சுல்தான், பொதுச்செயலாளர் பிலால்தீன், மாவட்ட செயலாளர்கள் கமால் பாஷா, சிக்கந்தர், ஷாகுல் ஹமீது, மாவட்ட துணைத் தலைவர் ஜி.எஸ்.சிக்கந்தர் பாட்ஷா, மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஊடக தொடர்பாளர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
பரவி வரும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் வகையில் SDPI கட்சி காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் பிரைட் ஃபியூட்சர் ஆங்கிலப்பள்ளியில் பள்ளிக்குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா, மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாநில தலைவர் தஞ்சை முஹம்மது ஃபாரூக், மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட தலைவர்கள் தமிழக உள்துறை செயலாளர் திரு. டாக்டர். நிரஞ்சன் மார்ட்டி அவர்களையும், தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. முனைவர். சைலேந்திர பாபு அவர்களையும் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்கு மே 17 இயக்கம் சார்பில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒன்றினைந்து சென்னை மெரினாவில் அஞ்சலி செலுத்த வருகை தந்ததற்காகதிருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கைதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் உள்ள சிறைவாசிகளில் நன்னடத்தை மிகுந்த 776 சிறைவாசிகள், தண்டனை முடியும் முன்னரே விடுதலையாக உள்ளனர் என சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்திருப்பதை எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்கிறது. சிறைக்கூடம் என்பது திருந்துவதற்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை வதை செய்யும் இடமாக மாறிவிடக்கூடாது என்பதை உணர்த்துகின்ற வகையில் இந்த அறிவிப்பு இருப்பதாக கருதுகிறோம். அந்த வகையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவித்திருப்பது சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது.
பரவி வரும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் வகையில் பசுமை மேலப்பாளைய இயக்கம் மற்றும் நெல்லை மாவட்ட SDPI இணைந்து ஜின்னா திடல், ஹாமிம்புரம், ஞானியார் அப்பா நகர், அத்தியடி கிழத்தெரு, அக்பர் தெரு, புஹாரி தங்கள் தைக்கா தெரு, கருப்பட்டி தெரு, செய்ஹுல் அக்பர் தெரு, தைக்கா தெரு, வெள்ளை கலீஃபா சாஹிப் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை