கட்சி செய்திகள்

கடந்த ஏழு வருடங்களாக மக்கள் பணியில் சேவையாற்றி வந்த இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் M.A.பைரோஸ் பாபா அவர்கள் SDPI கட்சியின் கொள்கை மற்றும் செயல்வீரர்களின் துடிப்பான செயல்பாடுகளை கண்டு இன்று (24.09.2017) சென்னை மண்ணடியில் உள்ள தலைமையகத்தில் அவ்வமைப்பை கலைத்து SDPI கட்சியுடன் இணைத்தார். அவருடன் அவ்வமைப்பை சேர்ந்த மாநில அமைப்பாளர் இம்ரான், மாநில ஒருங்கிணைப்பாளர் ரஃபீக், மாநில பொருளாளர் முஹம்மது ஈஸா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் மணிகண்டன், தென் சென்னை மாவட்ட தலைவர் காதர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நபர்கள் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டனர்.
மத்திய பா.ஜ.க தொடர் மக்கள் விரோத போக்கை கண்டித்து SDPI கட்சியின் சார்பில் 23.09.2017 சனிக்கிழமை மாலை 5:00 மணியளவில் நெல்லை மாவட்டம் பாளை ஜவஹர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகர SDPI கட்சியின் சார்பில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நகர தலைவர் முகமது ரபீக் தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு வருடங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையோரங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் பொதுமக்கள் அப்பகுதியே செல்வதற்கு துண்புறுகிறார்கள். மக்களின் துன்பத்தில் பங்கெடுத்த சிதம்பரம் நகர SDPI கட்சி நகர தலைவர் அப்துல் கபூர் தலைமையில் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து பாதாள சாக்கைடைக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுமாறு மனு கொடுத்தனர்.
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், இனப்படுகொலையை உலக நாடுகள் தடுத்து நிறுத்தக்கோரியும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இந்தியா அபயம் அளிக்கவும், மியான்மர் மீது உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளந்தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகா சாம்ராஜ்நகர் நகராட்சி தலைவர் தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்க மதசார்பற்ற ஜனதாதளம், வாட்டாள் கட்சி ஆகியன பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததோடு, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் கட்சி தாவினார். இதனால் மிக இக்கட்டான சூழலில் SDPI கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து ஒர் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதுவையை சேர்ந்த பிற அரசியல் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் S.L.M.லியாகத் அலி, தொகுதி செயலாளர் K.சர்தார் மற்றும் முஹம்மது ஹயாத் ஆகியோர் இன்று (21.09.2017) SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி அவர்களை சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் சந்தித்து தேசிய அரசியல் பேரியக்கத்தில் தங்களை இணைத்து கொண்டு வாழ்த்து பெற்றனர். இச்சிறப்புமிகு சந்திப்பில் கட்சியின் புதுவை மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் உடனிருந்தார்.
தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகர SDPI கட்சி சார்பாக இன்று (20.09.2017) காலை 9.30 மணிக்கு மதுக்கூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மதுக்கூர் நகர தலைவர் TJ.மாப்பிளை தம்பி தலைமை நடைபெற்றது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஈழப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த மே 29 அன்று தமிழக காவல்துறை சிறையிலடைத்தது. தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு நடைமுறையில் இருந்தும், தொடர்ச்சியாக நிலத்தடி நீரை சட்டவிரோதமாக தனியார் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லும் கொள்ளையர்களை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதனை தடுக்காமல் துணை போகும் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது நல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து SDPI கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை