கட்சி செய்திகள்

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பை தொகுதி மேலசெவல் கிராமத்தில் அம்பை தொகுதி துணை செயலாளர் கோட்டூர் சேக் முகைதீன் தலைமையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்நிகழ்விற்கு அம்பை தொகுதி நிர்வாகிகள் இஸ்மாயில், இப்ராஹிம், ராஷித், காஜா மைதீன், அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வை திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லூரி ஒய்வு பெற்ற பேராசிரியர் R.செளந்தராஜன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி துணை தலைவர் M.ரத்திஸ் , மேலசெவல் அதிமுக பிரமுகர் S.முத்து சாமி, 9-வது வார்டு முன்னால் கவுன்சிலர் நைனா முகமது ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் பயனடைந்தனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகரம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்டின் முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல்லா, SDPI கட்சியின் மாவட்ட பொருளாளர் முஹமது ஹனீபா, நகர தலைவர் முகமது ரபீக், நகர செயலாளர் ராஜா, இணை செயலாளர்கள் ஜாபர், பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பயணடைந்தனர்.
நியூஸ் 18 தொலைகாட்சியின் சார்பாக தமிழ் சாதனையாளர்களுக்கான மகுடம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹோட்டல் லீலா பேலஸில் இன்று (16.10.2017) நடைபெற்றது. 7 துறைகளில் சாதனைப்படைத்த தமிழ் சாதனையாளர்களுக்கு மகுடம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி கலந்து கொண்டார். மேலும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம் (ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கினைப்பாளர்), எ.முஜிபுர் ரஹ்மான் (தலைமை நிலைய செயலாளர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரம் சார்பாக நகர செயலாளர் I.ஜாஹிர் உசேன் தலைமையில் தெருக்களில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் செய்து, அவர்கள் வீட்டில் டெங்கு பரப்பக்கூடிய தண்ணீர் தேங்கி கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிப்பது, வீடுகள் சுற்றிலும் கொசு மருந்துகள் அடிப்பது மற்றும் தண்ணீர் தேங்கி கிடக்கும் இடங்களிலும் மற்றும் கொசு உருவாகும் இடங்களிலும் கொசு மருந்து அடிப்பது போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்டம் வீரவநல்லூர் நகரம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் தொகுதி தலைவர் கோட்டூர் M.K.பீர் மஸ்தான் தலைமையில் விநியோகிக்கப்பட்டது. இம்முகாமிற்கு தொகுதி துணை செயலாளர் அஜிப் வீரை நகர தலைவர் ஷாகுல், செயலாளர் சுல்தான் துணை தலைவர் அல்லாபிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்டம் பணங்குடி நகரம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இம்முகாமை காவல்துறை ஆய்வாளர் ஸ்டீஃபன் ஜோஸ் அவர்களி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் SDPI பணகுடி நகர தலைவர் முகைதீன், பொருளாளர் ஹஸன், பணகுடி பொறுப்பாளர் சர்ஃபுத்தீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பயணடைந்தனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி மதுரை மாவட்டம் தெற்கு தொகுதி 30 மற்றும் 31-வது வார்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி 56-வது வட்டத்தின் சார்பில் தொகுதி இணை செயலாளர் ராஜா தலைமையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணடைந்தனர். இதை போன்று அண்ணாநகர் தொகுதியின் சார்பிலும் விநியோகிக்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
வட சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் SDPI கட்சி மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.ச.உமர் ஃபாரூக் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மேலும் இம்முகாமில் வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், பொதுச்செயலாளர் புஸ்பராஜ் மற்றும் கொளத்தூர் தொகுதி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை