மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்த மீரா தம்பி என்பவர், நேற்று (ஆக.27) காயல்பட்டணத்திலிருந்து தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அப்பேருந்தில் முன்பதிவு இல்லாத இரண்டு நபர்களை வரும் வழியில் பேருந்து ஓட்டுனர் ஏற்றியிருக்கிறார். போதையில் இருந்த அவர்கள் பேருந்துக்குள் ஏறியவுடன் கலாட்டாவில் ஈடுபட்டதோடு இருக்கையில் அமர்ந்திருந்த மீரா தம்பியின் மீது வாந்தி எடுத்துள்ளனர். இதனை மீரா தம்பி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் பேருந்தில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் மேலும் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளதோடு மதரீதியாகவும் மீரா தம்பியை பேசியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பேருந்து தூத்துக்குடி அருகே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக இறங்கிய மீரா தம்பியை அந்த இரண்டு போதை நபர்களும் பின்தொடர்ந்து சென்று ஆயுதங்களால் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த கொலை குறித்து காவல்துறை விரைவாக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தப்பியோடிய கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தமிழக காவல்துறை தலைவருக்கு அளித்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும், கொலையாளிகளின் பின்னணி குறித்தும், அவர்கள் ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த காரணம் குறித்தும் ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்த கொலையின் பின்புலத்தில் மதவெறி சக்திகளின் கைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக ஆலிம்கள் சங்கமம் 2-வது மாநில மாநாடு இன்று ( 22.08.2017) மதுரை கோமதிபுரத்தில் அமைந்துள்ள ராஜ பிரபா மஹாலில் மௌலானா கலீல் அஹமது கீரனூரி (ரஹ்) திடலில் நடைபெற்றது.
பசு பாதுகாப்பு என்ற பெயரால் இந்துத்துவா குண்டர்களால் நாடு முழுவதிலும் பலர் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பும், கண்டனமும், விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சி மாபெரும் மக்கள் பரப்புரை இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் எதிரொலியாக பசுக்குண்டர்களால் அடித்துக் கொல்லப்படும் குற்றத்துக்கு கடும் தண்டனை வழங்க தனியாக புதிய சட்டம் தேவை என்ற குரல் எழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக புதிய சட்ட வரைவும் வெளியிடப்பட்டுள்ளது.
மீடியா 7 வெப் டீவியின் சார்பாக முப்பெரும் விழா சென்னையில் கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த தலைவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மீடியா 7 தலைமை நிர்வாக இயக்குநர் கோவை தங்கப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி அவர்கள் கண்ணியமிகு காயிதேமில்லத் விருதினை, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்களுக்கு வழங்கி வாழ்த்துரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் SDPI கட்சியின் அ.ச.உமர் ஃபாரூக் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார். இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், திரைப்பட இயக்குநர் அமீர் உட்பட சமுதாய தலைவர்கள் பங்கேற்று துறை சார்ந்தோருக்கு விருதுகள் வழங்கி வாழ்த்துரையாற்றினர். SDPI கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை அபுதாஹிர், சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாட்டின் பெயரால் அப்பாவி மக்களை அடித்துக் கொல்லும் கும்பல் கொலைகளுக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் மக்கள் பரப்புரையை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தி வருகின்றது. ‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே!’ என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் மக்கள் பேரணி இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தேசிய அரசியல் பேரியக்கமான SDPI கட்சியுடன் இணையும் இணைப்பு விழா நிகழ்ச்சி, சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள அனிதா ஸ்கூல் அரங்கில் (ஆகஸ்ட் 18) நடைபெற்றது.
SDPI கட்சி நடத்தும்‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ மாபெரும் மக்கள் பரப்புரையின் ஒருபகுதியாக, மதுரை தெற்கு வாசலில் நடைபெறவிருந்த மக்கள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், பேரணி கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்துக்காக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்கும் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வலியுறுத்தி, மேதா பட்கர் ஜூலை 27ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இப்போராட்டம் அம்மாநிலத்தில் ஆளுகின்ற பாஜக அரசுக்கு பெறும் பின்னடைவாக இருந்ததால், மேதா பட்கர் அவர்களை பாஜக அரசின் உத்தரவின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
கர்நாடக மாநிலம் விஜயபுரா பி.எல்.டி.இ. பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய நதிநீர் பாதுகாப்பு அமைப்பின் கருத்தரங்கு (ஆகஸ்ட் 16,17,18) நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து, குறிப்பாக நெல்லை தாமிரபரணி நதி பாதுகாப்பு சம்பந்தமாக சமூக ஆர்வலரும் SDPI கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளருமான ஹயாத் முகம்மது அவர்கள் கலந்துகொண்டுபேசினார்.
நாட்டின் 71வது ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பில் ஊடக நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ஹோட்டல் மெட்ரோ மேனரில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சி பிலால், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, தென் சென்னை மாவட்ட தலைவர் சலீம், வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அகமது, காஞ்சிபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் யாசர் அரஃபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை