மாநில செய்திகள்

மாட்டின் பெயரால் அப்பாவி மக்களை அடித்துக் கொல்லும் கும்பல் கொலைகளுக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் மக்கள் பரப்புரையை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தி வருகின்றது. ‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே!’ என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் மக்கள் பேரணி இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தேசிய அரசியல் பேரியக்கமான SDPI கட்சியுடன் இணையும் இணைப்பு விழா நிகழ்ச்சி, சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள அனிதா ஸ்கூல் அரங்கில் (ஆகஸ்ட் 18) நடைபெற்றது.
SDPI கட்சி நடத்தும்‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ மாபெரும் மக்கள் பரப்புரையின் ஒருபகுதியாக, மதுரை தெற்கு வாசலில் நடைபெறவிருந்த மக்கள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், பேரணி கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்துக்காக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்கும் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வலியுறுத்தி, மேதா பட்கர் ஜூலை 27ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இப்போராட்டம் அம்மாநிலத்தில் ஆளுகின்ற பாஜக அரசுக்கு பெறும் பின்னடைவாக இருந்ததால், மேதா பட்கர் அவர்களை பாஜக அரசின் உத்தரவின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
கர்நாடக மாநிலம் விஜயபுரா பி.எல்.டி.இ. பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய நதிநீர் பாதுகாப்பு அமைப்பின் கருத்தரங்கு (ஆகஸ்ட் 16,17,18) நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து, குறிப்பாக நெல்லை தாமிரபரணி நதி பாதுகாப்பு சம்பந்தமாக சமூக ஆர்வலரும் SDPI கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளருமான ஹயாத் முகம்மது அவர்கள் கலந்துகொண்டுபேசினார்.
நாட்டின் 71வது ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பில் ஊடக நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ஹோட்டல் மெட்ரோ மேனரில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சி பிலால், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, தென் சென்னை மாவட்ட தலைவர் சலீம், வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அகமது, காஞ்சிபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் யாசர் அரஃபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டின் 71வது சுதந்திரதின கொண்டாட்டம் நாடு முழுவதும் SDPI கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை, கடலூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, விழுப்புரம், நாமக்கல், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, காரைக்கால், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.
நாட்டின் 71வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்கள்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டிருக்கும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திய அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, 71 வது சுதந்திர தினத்தில் நமது நாடு அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்நாளில் சாதி, மதம், மொழி, இனங்களை கடந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் நினைவுகூர்வோம். அவர்களின் தியாகத்தை நாம் போற்றுவோம்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மத நல்லிணக்கத்திற்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (13-08-2017) நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை