மாநில செய்திகள்

திருச்சியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் அவர்களின் துணைவியாரை நலம் விசாரிக்க SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர்கள் சென்றனர். பேராசியர் காதர் முகைதீன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
பெங்களூருவில் புகழ்பெற்ற போராளி கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டிருப்பது நமது நாட்டின் கலாச்சாரம், நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிற்கு எதிரான கொடூரம். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ. சயீத் கடும் கண்டனம்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா, நீட் தேர்வால் தனது மருத்துவக் கனவு கானல் நீராகிப் போனதை தொடர்ந்து இன்று அவர் தற்கொலை செய்துகொண்டு தன்னுயிரை மாய்த்துள்ளார். நீட் விலக்கிற்காக உச்ச நீதிமன்ற படிகட்டுகள் வரை ஏறிய மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. மாணவி அனிதாவின் மரணத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அண்டை நாடான மியான்மரில், ரோகிங்யா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து அந்நாட்டு ராணுவம் மிகக்கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. ஏற்கனவே, பெளத்த பயங்கரவாத குழுக்களின் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ரோகிங்யா மக்கள் மீதும், குடியிருப்புகள் மீதும், தற்போது ராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதல் மிகமோசமானதாக அமைந்துள்ளது.
சமூக நல்லிணக்கம், அன்பு, சமாதானம் தழைத்திட உறுதியேற்போம் - எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் தியாகத் திருநாள் வாழ்த்து!
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சமூக நீதியை காக்கும் பொருட்டு, மருத்துவக் கல்வி சேர்க்கையில் நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசை பல்வேறு வகைகளில் ஆட்டிப்படைக்கும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் அமைச்சரான நிர்மலா சீதாராமன், நீட் தேர்வு தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களையும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களையும் பாதிக்கும் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, வேண்டுமானால் தமிழக அரசு தற்காலிகமாக நீட்டிலிருந்து ஓர் ஆண்டு விலக்கு வேண்டும் என அவசர சட்ட முன்வடிவை கொண்டுவந்தால் மத்திய அரசு அதற்கு ஒத்துழைக்கும் என்றார். இதையடுத்து அவர் கூறியபடி அவசர சட்ட முன்வடிவை தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அளித்தது. தொடர்ந்து அவசர சட்டத்துக்கான ஒப்புதல் குடியரசு தலைவரிடமிருந்து கிடைக்கப் பெறும் என ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்த வேளையில், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தெரிவித்து தமிழகத்துக்கு மிகப்பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. மத்திய அரசின் இந்த துரோக செயலை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக, சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தை(BSNL) முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தினர். மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது ஃபாரூக் மற்றும் சென்னை மண்டல மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தின் போது பேசிய எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெகலான் பாகவி கூறும்போது; சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப்படி நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வால், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும், கிராமப்புற ஏழை மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் இதனால் மருத்துவக் கல்வி சேர்க்கையில் கல்வி தீண்டாமையை அது உருவாக்கிவிடும் என்று, நீட்டால் ஏற்படப்போகும் அபாயம் குறித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்ட போதும், நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக இரு மசோதாக்களை நிறைவேற்றிய போதும், மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையால் அந்த மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, சி.பி.எஸ்.இ.-ன் பல்வேறு அநீதிகளுடன் தமிழக மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். இந்நிலையில், தற்காலிகமாக நீட்டிலிருந்து ஓர் ஆண்டு விலக்கு வேண்டும் என அவசர சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டுவந்தால் மத்திய அரசு அதற்கு ஒத்துழைக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆனால், அவசரச் சட்ட முன்வடிவை தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அளித்திருந்த நிலையில், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தெரிவித்து தமிழகத்துக்கு மிகப்பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் நேர்மாறாக பல்டி அடித்து தமிழக மாணவர்களை நம்பவைத்து மத்திய பாஜக அரசு ஏமாற்றி விட்டது. பாஜகவின் இந்த துரோக செயலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்நிலையில் நீட் தேர்வு அடிப்படையில் வெளியிடப்பட்ட மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் மூலம் கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு கானல் நீராகிபோயுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டும் தவிர இடைக்கால நிவாரணம் தேவை இல்லை “ஒராண்டு விலக்கு என மிட்டாயை காட்டி அதையும் தராமல் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது”. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை என்பதை மறுக்க முடியாது. மாநில உரிமையை மத்திய அரசிடமிருந்து பெறுவதிலும், நீதிமன்ற நடவடிக்கை மூலமாக மாநில உரிமையை தக்கவைப்பதிலும் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது.” என்றார்.
கோவை குறிச்சிப்பிரிவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 200க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர் 10 வகுப்பறைகளை கொண்ட இப்பள்ளி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்ததால் இடித்து விட்டு மீண்டும் புதிய கட்டிடம் கட்டித்தருவதாக கூறி 8 வகுப்பறைகள் இடிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணிகள் இன்னும் முழுமை பெறாத காரணத்தினால் மீதமுள்ள இரண்டு வகுப்பறைகளில் அனைத்து குழந்தைகளும் மிகவும் நெருக்கடியான நிலையில் பாடம் கற்பித்து வருகிறார்கள். மேலும் இப்பள்ளியில் சத்துணவு வசதி, சுற்றுச்சுவர், ஜன்னல் கதவுகள் உடைந்த நிலை கழிப்பிட வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக குழந்தைகள் சிறுநீர் கழிக்க அவரவர் வீடுகளுக்கு செல்ல வேண்டிய அவலமான சூழல் ஏற்பட்டுவருகிறது.
தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் மற்றும் உளவுத்துறை டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை இன்று (28.08.2017) கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முஹம்மது ஹனீஃபா, SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், இந்திய தௌஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் முனீர், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது, தமிழ்மாநில ஜமாஅத் உலமா சபையின் மாநில துணைத்தலைவர் தர்வேஷ் ரஷாதி ஆகியோர் சந்தித்து பேசினர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்த மீரா தம்பி என்பவர், நேற்று (ஆக.27) காயல்பட்டணத்திலிருந்து தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அப்பேருந்தில் முன்பதிவு இல்லாத இரண்டு நபர்களை வரும் வழியில் பேருந்து ஓட்டுனர் ஏற்றியிருக்கிறார். போதையில் இருந்த அவர்கள் பேருந்துக்குள் ஏறியவுடன் கலாட்டாவில் ஈடுபட்டதோடு இருக்கையில் அமர்ந்திருந்த மீரா தம்பியின் மீது வாந்தி எடுத்துள்ளனர். இதனை மீரா தம்பி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் பேருந்தில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் மேலும் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளதோடு மதரீதியாகவும் மீரா தம்பியை பேசியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பேருந்து தூத்துக்குடி அருகே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக இறங்கிய மீரா தம்பியை அந்த இரண்டு போதை நபர்களும் பின்தொடர்ந்து சென்று ஆயுதங்களால் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த கொலை குறித்து காவல்துறை விரைவாக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தப்பியோடிய கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தமிழக காவல்துறை தலைவருக்கு அளித்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும், கொலையாளிகளின் பின்னணி குறித்தும், அவர்கள் ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த காரணம் குறித்தும் ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்த கொலையின் பின்புலத்தில் மதவெறி சக்திகளின் கைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை