மாநில செய்திகள்

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாடு முழுவதும் தொடரும் சாலை விபத்துக்களால் ஏற்டும் உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுக்கு மூலகாரணமாக இருக்கின்ற மது தடை செய்யப்பட வேண்டும் எனவும், மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என உத்தரவிட்டது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோரப்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
புதுவை மாநிலத்தில் அரசு பணிகளுக்கு, முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 2% தில் இருந்து 5% ஆக உயர்த்தித்தர கோரியும் குரூப்-‘B’ NON GAZETTED பணியிடங்களில் முஸ்லிம்கள், வன்னியர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர்களின் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த கோரியும், கடந்த ஒரு வார காலமாக தொடர் பிரச்சாரங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி செய்துவருகின்றது. அதில் தெருமுனை கூட்டம், நோட்டீஸ் பிரச்சாரம், ஜமாத் சந்திப்பு நிகழ்ச்சி, பத்திரிகையாளர் சந்திப்பு, முக்கியஸ்தர்கள் சந்திப்பு, என பல்வேறு வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் இறுதியாக இன்று (14.11.2017) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் புதுச்சேரி சுதேசி காட்டன் மில் அருகில் துவங்கி புதுவை சட்டமன்றம் வரை பேரணியும், அதனை தொடர்ந்து தலைமை தபால் நிலையம் அருகில் பொதுக்கூட்டமும் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி இன்று(09.11.2017) செய்தியாளர்களை சென்னை, மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமையகத்தில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான்பாகவி வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. இங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. மழை பொய்த்துப் போவது, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால், பிழைப்புத் தேடி பலர் வெளி மாநிலங்களுக்குச் சென்று கூலிவேலை செய்து வருகின்றனர்.
சென்னையில் இன்று (23/10/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது; நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மூன்றாண்டுகளாக தான் கொண்டு வந்த அனைத்து திட்டங்களிலும் தோல்வி அடைந்து செயலற்ற ஒரு அரசாக இன்று மக்கள் முன் நிற்கிறது. மேக் இன் இந்தியா, சிவிட்ச் பாரத், டிஜிட்டல் இந்தியா போன்ற பல இந்தியாக்களை முன் வைத்தார்கள். ஆனால் ஒன்றும் வெற்றி பெறவில்லை. இதே நேரத்தில் இதற்கு நேர் எதிராக பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இன்று மக்களையும், வியாபாரிகளையும் சொல்லனா துயரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு உட்படுத்தி இருக்கிறது. இந்த மூன்றாண்டுகளில் ஒரு ஜனநாயக அரசாக செயல்படுவதற்கு மாற்றாக யாரும் பாஜகவை விமர்சிக்க கூடாது, எதிர்த்து பேசக்கூடாது, கருத்து சொல்ல முன்வரக்கூடாது என்கிற ஒரு சர்வாதிகார போக்குடைய அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஊடகங்கள் யாரும் அரசை விமர்சித்தால் செய்தி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வது, நிறுவனங்களை வருமான வரி சோதனை என்ற பெயரில் நெருக்கடிகளை உருவாக்குவது என்று இந்த அரசினுடைய சர்வாதிகார போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசை எதிர்த்து கோரிக்கை வைக்கும் விவசாயிகள், தமிழ் அமைப்புக்களை சார்ந்தவர்கள், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேனுக்கு எதிராக போராடக்கூடியவர்களை தேச துரோகிகள் என்றும் மிக மோசமாக அவர்களை மிரட்டுவதும் கொச்சைப்படுத்துவதும் போன்ற நாகரீகமற்ற செயல்களில் பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வரிசையில்தான் மெர்சல் என்கிற திரைப்படத்தில் அரசினுடைய திட்டங்களை விமர்சித்ததற்காக படக்குழுவினர் மிக மோசமாக விமர்சிக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், காட்சிகளை நீக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதும், தொடர்ந்து கொண்டிருக்கிறது. மெர்சல் படத்தில் அரசை சாதரணமாகத்தான் விமர்சனம் செய்கிறார்களே தவிர கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி ஒன்றும் விமர்சனம் செய்யவில்லை. இந்த விமர்சனங்களைக்கூட தாங்க முடியாதவராக மோடியும் அவரது அரசும் இன்று இருக்கிறது. கடந்த மூன்றாண்டு காலகட்டத்தில் ஒருமுறைக்கூட ஊடகவியாலாளர்களை மோடி சந்திக்கவில்லை. அதற்கு காரணம் ஊடகவியலாளர்களை சந்தித்தால் அவர்கள் கேள்வி எழுப்புவார்கள். நாம் பதில் கூற வேண்டும், இதுபோன்ற விமர்சனங்களை கூட ஏற்க மறுக்கும் ஒரு அகம்பாவ போக்கு பாஜகவிடம் தெரிகிறது. மெர்சல் படத்தில் மோடி அரசு அமுல்படுத்திய, வியாபாரிகளையும், மக்களையும் சிரமப்படுத்திய ஜி.எஸ்.டி. வரியை விமர்சிக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? அரசு மருத்துவமனைகளின் அவலத்தை காட்சிபடுத்துகிறார்கள். அதுவும் உண்மைதானே? ஏன் இவர்கள் கொந்தளிக்க வேண்டும். விசயம் என்னவென்றால் ஏற்கனவே மக்களின் எதிர்ப்பால் மெர்சலாகி நிற்கும் மோடி அரசும், பாஜக தலைவர்களும் மெர்சல் படத்தால் மேலும் மெர்சலாகி என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் செய்வதரியாது திகைத்து போய் நிற்கும் சூழலை நாம் பார்க்கிறோம். எஸ்.டி.பி.ஐ. கட்சி மெர்சல் திரைப்படத்தின் கருத்துக்களை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் எந்த சமூகத்தையும், மதத்தையும் அவதூறாக பேசினால், குற்றப்படுத்தினால் எஸ்.டி.பி.ஐ. கட்சி கடுமையாக எதிர்க்கும். அப்படித்தான் விஸ்வரூபம், துப்பாக்கி பட பிரச்சினைகளில் முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் குரானுடைய வசனங்கள் கொச்சைப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும் குற்றவாளிகளாக, தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டார்கள், அதுமட்டுமின்றி சமூக பிளவை உருவாக்குகின்ற காரணத்தினால் முஸ்லிம்கள் அப்படங்களை எதிர்த்தார்கள். இப்போதும் நாங்கள் சொல்கிறோம் எந்த சமூக மக்களையும் அவமதிக்கும் விதத்தில், கொச்சைப்படுத்தும் விதத்தில், சமூக பிளவுகளுக்கு வழி வகுக்கும் விதத்தில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டால் அப்படங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி எதிர்க்கும். அதே நேரத்தில் அரசின் தவறுகளை ஜனநாயக முறையில் விமர்சிக்கும் படங்கள் வெளியிடப்பட்டால் எஸ்.டி.பி.ஐ. கட்சி எப்போதும் வரவேற்கும். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கும். அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை வரவேற்கிறோம். அதுமட்டுமின்றி அந்த படத்தில் வெளியிடப்படுள்ள காட்சிகளை நீக்கக்கூடாது என்பதை வலியிறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். ஆனால் பாஜக தலைவர்கள் இப்போது மெர்சல் படத்தை ஆதரிக்க கூடியவர்களை மிக கொச்சையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை, தமிழிசை சௌந்தர்ராஜன் மிக கொச்சையாக விமர்சித்திருக்கிறார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்றும் நினைவு கொள்ளாமல் தலைமை பண்புகள் அற்ற நிலையில் விமர்சித்திருக்கிறார். மெர்சல் திரைப்படத்தை குறித்து திருமாவளவன் அப்படி என்ன சொல்லியிருக்கிறார். மெர்சல் திரைப்பத்தின் மிரட்டல்கள் மூலம் நடிகர் விஜயை வலைத்துப்போட பாஜக நினைக்கிறது என்று விமர்சிக்கிறார். இது ஒரு அரசியல் ரீதியான கருத்து, இதனை அரசியல் ரீதியாக எதிர் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தனிப்பட்ட முறையில் தனி நபர் தாக்குதலை கொச்சையாக விமர்சிப்பதை தமிழிசை சௌந்தர்ராஜன் மேற்கொண்டுள்ளார். இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த கருத்தை தமிழிசை சௌந்தர்ராஜன் திரும்பபெற்று மண்ணிப்பு கேட்க வேண்டும். ஆனால் அதை செய்வார்களா, அந்த நாகரீகம் அவர்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. பாஜகவின் தேசிய தலைவர் எச்.ராஜா எல்லாவற்றையும் மதரீதியாக திருப்ப முயலுகிறார். சமீபத்தில் தொடர்ச்சியாக சந்தானத்தையும், விஜயையும், திருமுருகன் காந்தியையும், சீமானையும் ஒரு கிருஸ்தவரை…
இந்தியாவின் பெருமைகளை காப்போம் என்ற தலைப்பில் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) சார்பில் மதுரையில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி பங்கேற்று கருத்துரையாற்றினார்.
மதுரையில் இன்று (22/10/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது; மெர்சல் திரைப்படத்தில் பதிவிடப்படுள்ள காட்சிகள் அனைத்தும் மக்களின் உணர்வுகளுக்கு பிரதிபலித்து, அரசு செய்யும் தவறுகளை ஜனநாயக முறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது போன்ற நல்ல கருத்துக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து வரவேற்கும்; மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவலங்கள்குறித்த கருத்துக்களை பதிவு செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையினரை மிரட்டுவதையும், படத்தின் காட்சிகளை நீக்க வலியுறுத்துவதையும் திரைப்படத் துறையினருக்கும்,கலைஞனுக்கும் இருக்கும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.இதனை எஸ்.டி.பி.ஐ. வன்மையாக கண்டிக்கிறது. மெர்சல் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ள காட்சிகளில் சில கூடுதல் குறைவுகள் இருக்கலாமே தவிர அது உண்மையாக மக்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பே ஆகும். ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்த பிறகு மக்கள் பெறும் கொதி நிலையில் இருக்கிறார்கள் அந்த கொதி நிலைதான் இப்படித்தில் காட்சியாக்கப்பட்டதற்கு மக்களின் தரப்பில் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. பாரதிய ஜனதாவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சியில் இருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் சிலிண்டர் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விபத்தில் பலியான 70-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமைகள் அரசால் ஏற்பட்டது என்பதை படத்தில் காட்சியாக வடிவமைப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஜிஎஸ்டி வரி விதிப்பு நல்ல திட்டம் என சொல்ல அரசுக்கு உரிமை இருக்கிறது என்றால், அந்த திட்டம் நாட்டிற்கு மிக ஆபத்தானது என்பதை சொல்ல மக்களுக்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஊடகங்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இக்கருத்துக்களை ஜனநாயக தண்மையுடன் எடுத்துக்கொள்ளாமல் அதற்கு மாற்றமாக பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தர்ராஜன் இப்படி கருத்து கூறுபவர்களுக்கு என்ன துணிச்சல் இருக்கிறது என்று மிரட்டுகிறார் மறு பக்கம் எச்.ராஜா நடிகர் விஜயை கிருஸ்தவராக சித்தரிக்க முயலுகிறார். மோடி அரசை விமர்சிப்பது இந்துக்களை விமர்சிப்பதை போன்று பேசி வரும் பாஜக தலைவர்களின் கருத்துக்கள் கடுமையான கண்டனத்திற்குரியவை. இந்த விமர்சனத்தை இந்துக்களுக்கு எதிரான விமர்சனம் என்று சொல்வது திசை திருப்பும் செயலாகும். இந்த விமர்சனம் இந்துக்களுக்கு எதிரானது அல்ல, மத்திய அரசுக்கு எதிரான விமர்சனம் ஆகும். அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கும் சுதந்திரமாகும், இதற்கு திரைப்பட கலைஞர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. மெர்சல் திரைப்படத்தில் தவறான, பொய்யை உமிழக்கூடிய அல்லது சமூகத்தின் மீதான பிளவுகளை உருவாக்கும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை மாறாக விழிப்புணர்வூட்டும் கருத்துக்களையும்,அரசினுடைய தவறான செயல்பாடுகளை விமர்சிக்கும் கருத்தாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துக்களை ஒரு கலைஞனாக திரைப்படத்தில் பதிவு செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் இது போன்ற நல்ல கருத்துக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. அதே போன்று இந்த கருத்துக்களுக்காக நடிகர் விஜய் உள்ளிட்ட மெர்சல் திரைப்பட படக்குழுவினரை மிரட்டும் பாரதிய ஜனதா கட்சியினரை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தொடர்ந்து பா.ஜ.க.வின் தலைவர்கள் கருத்துறிமைக்கு எதிராகவும், சமூக ஒற்றுமைக்கு எதிரான மிரட்டல் மற்றும் வன்முறை போக்கை கையாண்டு வருகிறார்கள். மோடி அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யும் பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்கள். இது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல என்பதை நாங்கள் எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். தனிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ள மெர்சல் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ள காட்சிகளை சில அரசியல் காரணங்களுக்காக மெர்சல் திரைப்படகுழுவினர் அக்காட்சிகளை நீக்கக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கிறேன். ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர்ப்பது என்பது சர்வாதிகார ஃபாசிச போக்காகும். சர்வாதிகாரமான ஃபாசிசத்தோடு செயல்படக்கூடாது என்று பாஜக தலைவர்களை நாங்கள் எச்சரிக்கிறோம். அதுமட்டுமின்றி விஸ்வரூபம் மற்றும் துப்பாக்கி படப்பிரச்சினைகளை மெர்சல் திரைப்படத்துடன் முடிச்சிப்போடும் செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது. விஸ்வரூபம் மற்றும் துப்பாக்கி திரைப்படங்களில் ஒரு சமூகத்தினரை தீவிரவாதிகளாக சித்தரித்த செயலைதான் இஸ்லாமியர்கள் எதிர்த்தார்கள். அதோடு முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் திருக்குர்-ஆனுடைய வசனங்களை இப்படித்தில் தவறாக சித்தரித்தார்கள். இக்காரணங்களுக்காகத்தான் இஸ்லாமியர்கள் இப்படங்களை எதிர்த்தார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றல்ல. மெர்சல் திரைப்படத்தில் வெளியிடப்படுள்ள காட்சிகள் அனைத்தும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் காட்சிகள்தான். எனவே, இந்த இரண்டு பிரச்சினைகளையும் முடிச்சிப்போடும் செயல் என்பது தவறானதாகும். இதனை ஒரு போதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஏற்றுக்கொள்ளாது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்; அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மருத்துவ முகாம்கள், நிலவேம்பு குடிநீர்வழங்கும் முகாம்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் கிளைகள் தோறும் முன்னெடுத்து வருகிறார்கள். டெங்குவின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு பணிகளை இன்னும் அதிகமாக நடத்திட கட்சியின்…
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ். எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- நாகை மாவட்டம் பொறையாரில் இயங்கி வருகின்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் ( கும்பகோணம் ) பணிமனைக் கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் உறங்கிக்கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் இறந்து விட்டார்கள் என்கிற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இறந்து போன தொழிலாளர்களின் குடும்பத்தார்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.இடிந்து விழுந்த பணிமனையானது 1942-ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டது . அதன் பிறகு தனியார் போக்குவரத்துக் கழகங்கள் அரசுடைமையாக்கப்பட்டதை தொடர்ந்து இக்கட்டிடத்தில் அரசு பணிமனை செயல்பட்டு வந்தது. இங்கு ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 206 பேர் பணி புரிந்து வருகிறார்கள். 24 மணி நேரமும் இயங்க கூடிய பணிமனை என்பதால் ஊழியர்களுக்கு ஓய்வறையும், கழிப்பறையும் அமைந்துள்ளது. ஆனால் இவைகள் முழுமையாக பராமரிக்கப்பட வில்லை. 70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்ற இந்த பழமையான இக்கட்டிடம் தகுதியற்ற நிலையை அடைந்து விட்டதாக 20 ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்த பிறகும் நிர்வாகம் செவி சாய்க்க மறுத்ததன் விளைவே இந்த துயர சம்பவத்துக்கு காரணம். எனவே விபத்துக்கான பொருப்பை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் ( கும்பகோணம் ) நிர்வாகம் ஏற்க வேண்டும். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 இலட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தி தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழகத்தில் இது போன்ற மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும் உடனே ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டிடங்களை இயங்க தகுதியவற்றவைகளாக அறிவித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசு உத்தரவிடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
SDPI கட்சியின் மாநில ஊடக நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் மதுரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் உட்பட பல்வேறு மாவட்ட ஊடக நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நியூஸ் 18 தொலைகாட்சியின் சார்பாக தமிழ் சாதனையாளர்களுக்கான மகுடம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹோட்டல் லீலா பேலஸில் இன்று (16.10.2017) நடைபெற்றது. 7 துறைகளில் சாதனைப்படைத்த தமிழ் சாதனையாளர்களுக்கு மகுடம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி கலந்து கொண்டார். மேலும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம் (ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கினைப்பாளர்), எ.முஜிபுர் ரஹ்மான் (தலைமை நிலைய செயலாளர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை