மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக பேராசிரியர் சூரப்பா நியமனம்! தமிழக பல்கலைக்கழகங்களுக்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் துணைவேந்தர்களாக நியமிக்கும் ஆளுநரின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல! - எஸ்.டி.பி.ஐ.
காவிரி நதிநீர் உரிமைப் பறிப்பு, தமிழர் வேளாண் நிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ-கார்பன், எரிஎண்ணெய் கிணறு, நியுட்ரினோ ஆய்வு, ஸ்டெர்லைட் ஆலை, அணுவுலை போன்ற பேரழிவுத் திட்டங்களைத் திணித்து தமிழர் வாழ்வாதாரத்தை அழிக்கும் மத்திய அரசை எதிர்கொள்வது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று 02-04-2018 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சேப்பாக்கம், சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு!-ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தமிழக எம்.பி க்கள் ஆதரிக்க வேண்டும்! - லோக் ஆயுக்தா நீதிமன்றத்தை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது ஜார்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை கண்டித்தும், தடையை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில்16.03.2018 அன்று மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமராஜ்ஜிய ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது-காவல்துறை தலைமை இயக்குநரிடம் காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கலவர தாக்குதல்! வன்முறைகளை தடுத்து நிறுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் தர வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
தடைகளை தகர்த்து, உறுதியுடன் சாதனைகள் பல படைத்திட உறுதியேற்போம்!எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!
சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஐ.நா.அலுவலகம் முற்றுகை போராட்டம் - எஸ்.டி.பி.ஐ. பங்கேற்பு சிரியாவில் நடைபெறும் மனிதப்படு கொலையைக் கண்டித்து இன்று(06.03.2018) காலை 11.00 மணிக்கு, தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் அடையாறில் உள்ள யுனிசெப் (ஐ.நா) அலுவலகம், அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி, இந்திய தேசிய லீக் கட்சி பொதுச்செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன், சமுதாய தலைவர் அப்பல்லோ ஹனீஃபா உள்ளிட்ட தோழமை கட்சிகளும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஃபாரூக், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சலீம், பொதுச்செயலாளர் அன்சாரி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், பொதுச்செயலாளர் யாசர் அரஃபாத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்வீரர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் யுனிசெஃப், அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்குக! பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுக!மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள்! எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைத்த இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள், இயக்க தலைவர்களின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று(மார்ச்.02) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது; பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 2007ஆம் ஆண்டு தொடங்கி ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய இந்திய அரசமைப்பின் விழுமியங்களைப் போற்றி இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருவதை அறிவோம். தமிழ்நாட்டிலும் அது தனித்தும் பிற ஜனநாயக அரசியல் இயக்கங்கள், கட்சிகளோடு இணைந்தும் அறப் போராட்டங்களிலும் ஆக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வருவதைக் கண்டுள்ளோம். இந்நிலையில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான ஜார்க்கண்டு மாநில அரசு திடீரென்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அம்மாநில அளவில் தடை செய்திருப்பது அதிர்ச்சியும் கவலையும் தருகிறது. 1908ஆம் ஆண்டின் குற்றவியல் திருத்தச் சட்டம் பிரிவு 16இன் படி இத்தடையை விதிப்பதாக ஜார்க்கண்டு மாநில அரசு சென்ற பிப்ரவரி 20 நாளிட்ட தன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளது. தடைக்குத் தரப்பட்டுள்ள காரணம் தென் மாநிலங்கள் சிலவற்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்குப் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களிடையே செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தின் ஆபத்து குறித்துக் குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாப்புலர் ஃப்ரண்ட்தான். ஐ.எஸ்.ஐ எஸ்சுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சிறப்பானதொரு வெளியீடே கொண்டுவந்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்டைத் தடை செய்ய எவ்விதக் காரணமும் இல்லை என்று கேரளம், கர்நாடகம் ஆகிய தென்மாநில அரசுகள் அண்மையில்தான் தெளிவாக அறிவித்துள்ளன. மேலும் அதனைத் தடை செய்யுமாறு இந்திய அரசுக்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்றும் இந்த மாநில அரசுகள் தெளிவாகத் தெரிவித்துள்ளன. ஜார்க்கண்டு மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்டை ஒரு காலவழுச் சட்டத்தின் விதிகளைச் சொல்லித் தடை செய்திருப்பது உண்மைகளின் அடிப்படையிலோ சட்டத்தின் அடிப்படையிலோ நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறோம். அமைதியை நேசிப்பதும் சட்டப்படி இயங்குவதுமான ஓர் சமூக அரசியல் அமைப்பின் மீதான கிஞ்சிற்றும் தேவையற்ற இத்தடை சங்கம் சேரும் உரிமையையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள பிற அடிப்படை உரிமைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும் எனக் கருதுகிறோம். தலைமையமைச்சர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான இப்போதைய இந்துத்துவ அரசாட்சியில் அன்றாட வாடிக்கை ஆகி விட்ட சிறுபான்மையினர் மற்றும் அவர்தம் உரிமைகள் மீதான தொடர்ந்த கொடுந்தாக்கின் ஒரு கூறாகவே இத்தடையையும் கருதலாம். இந்தத் தடைக்கு உண்மைக் காரணம் ஜார்க்கண்டு மாநில அரசின் மனித உரிமை மீறல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உறுதியாக எதிர்த்து வருவதே ஆகும். காவல்துறை நடத்தும் சட்ட விரோதக் கொலைகளும், இந்துத்துவ ஆற்றல்கள் வேண்டாதவர்களை அடித்துக் கொலை செய்வதும், மாற்றார் மீது வெறுப்புமிழ்ந்து பேசுவதுமான குற்றங்களை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு சட்ட வழியிலும் ஜனநாயக வழியிலும் தொடர்ந்து உறுதியாக இயங்கி வருவதால் மாநில இந்துத்துவ ஆற்றல்களும் அரசும் எரிச்சலடைந்ததன் விளைவுதான் இந்தத் தடை. ஜார்கண்டு மாநிலத்தில் தன் மீது விதித்துள்ள தடை நியாயமற்றது என்று பாப்புலர் ஃப்ரண்ட் கருதிய போதிலும், தடையை மதித்து அம்மாநிலத்தில் தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டு விட்டது. ஆனால் அதற்குப் பிறகும் மாநில அரசும் காவல்துறையும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களைக் கைது செய்து பொய் வழக்கில் சிக்க வைக்கும் வேலை நடப்பதாக அறிகிறோம். இந்திய அரசின் பொருளியல், அரசியல் நடவடிக்கைகள் போகும் திசையை உற்றுக் கவனிக்கும் போது ஜனநாயக உரிமைகளை வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடைகள் என்பது போல் இந்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் பார்த்து வருகின்றன. மக்கள் மீது சுமைகள் ஏற ஏற, அதற்கு மக்களின் எதிர்ப்பு வளர வளர, உண்மையாக மக்கள் பக்கம் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளின் மீதான தடை உள்ளிட்ட அடக்குமுறைகள் தீவிரமடைகின்றன. ஆகவே, இன்று ஜார்க்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீது பாய்ந்துள்ள தடை நாளை எந்த மாநிலத்திலும் எந்த ஜனநாயக அமைப்பின் மீதும் பாயும் ஆபத்துள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஜார்க்கண்டு மாநில அரசும் இந்திய அரசும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை உடனே விலக்கிக் கொள்ளுமாறும், அவ்வியக்கத்தவர் மீதான பொய் வழக்குகளை விலக்கிக் கொண்டு, சிறையிலிருப்பவர்களை உடனே விடுதலை செய்யுமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த இந்த தடையை திரும்பபெற வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 03 மணியளவில் சென்னையில் தமிழகத்தின் இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள், இயக்கங்களின்…

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை