மாநில செய்திகள்

இன்று (02.07.2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் முஸ்தபா அவர்களின் இல்லத்திருமண விழா திருச்சி பீமநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள். பிறகு கட்சியின் மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள், அவர் பேசுகையில்; ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.விற்கு அதிமுக ஆதரவளிப்பதை தமிழக மக்கள் மட்டுமல்லாது அதிமுக தொண்டர்களே ஒரு போதும் ஏற்கமாட்டார்கள்; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவை பல பிரிவுகளாக்கி அதனுடைய இரட்டை இலை சின்னத்தை முடக்கி, கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் நெருக்கடியை கொடுத்த கட்சி பாரதிய ஜனதா கட்சி. அந்த பாஜகவோடு உறவு வைத்து கொள்வதையும், அந்த பாரதிய ஜனதா குடியரசு தலைவர் வேட்பாளருக்கு வாக்களிப்பதையும், தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் மாத்திரமல்ல, அதிமுக தொண்டர்களே இதை ஏற்கமாட்டார்கள். எனவே அதிமுகவின் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் பாரதிய ஜனதாவின் குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரியால் வியாபாரிகள், சாமானிய மக்கள் பெரும் பாதிப்படைவார்கள்; நேற்று நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி விதிப்பால் சாதாரன பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். நேற்று முதலே 20% அளவிற்கு உணவகங்களில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயரும், வியாபாரிகள் தங்களுக்கு ஏற்படும் கடன்களையும் மக்களின் மீதே சுமத்துவார்கள். மாநிலத்தினுடைய வருவாய் வெகுவாக பாதிக்கும். இதனால்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தார். இன்றைக்கு ஜிஎஸ்டி வரியை சாதனையாக பேசுகிற பிரதமர் மோடிதான் அன்றைக்கு குஜராத் முதல்வராக இருந்த போது காங்கிரஸ் கொண்டுவந்த ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தார். ஆனால் இன்றைக்கு ஜிஎஸ்டியை பற்றி பெருமையாக பேசுவதின் மூலம் மோடியின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்படுகிறது. அவசர கோலத்தில் இயற்றப்பட்டுள்ளது ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி. இதனால் வியாபாரிகளும், சாதாரண பொது மக்களும் பாதிப்படைவார்கள். பசு குண்டர்களால் பலியாகும் முஸ்லிம்கள் - பாஜக ஆளும் மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்க ஆயுதம் வைத்து கொள்ள அரசுகள் அனுமதிக்க வேண்டும்; மாட்டிறைச்சி மீதான தடைக்கு பிறகு நாடு முழுவதும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் அதிகரித்துள்ளன. குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இந்த கொலைகளை நரேந்திர மோடி கண்டித்து பேசியது, வெரும் வார்த்தை ஜாலமும், ஏமாற்று வித்தையும் ஆகும். அவர் பேசிய இரண்டு மணி நேரத்திலேயே பாஜக ஆளும் மாநிலமான ஜார்கண்டில் இரண்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யபட்டுள்ளார்கள். தமிழகம் கேரளத்தை போன்று இல்லாமல் பாஜக ஆளூம் மாநிலங்களில் முஸ்லிம்களின் உயிர்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக ஆயுதம் வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அரசுகளை கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்; பேரரிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வாகும். ஒட்டுமொத்த ஆதரவோடு தமிழக சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு MGR நூற்றாண்டு விழாவை முண்ணிட்டு 10 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் சிறை கைதிகளை மத வேறுபாடின்றி கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இத்திருமண நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை முகமது ஃபாரூக், திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா, மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி, மாவட்ட செயலாளர்கள் ரஃபீக் முகமது, ஹஸ்ஸான் இமாம், மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் மஜீத் மற்றும் தொகுதி நிர்வாகிகளும், செயல்வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று (01.07.2017) SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னை சத்திய மூர்த்தி பவனில் சந்தித்து பேசினார்கள். இச்சந்திப்பின் போது SDPI கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா, மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. கரீம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த விவசாயி துறையன், மாரிமுத்து ஆகியோர் சந்தையில் வாங்கிய மாடுகளை தங்கள் ஊருக்கு பழனி வழியாக கொண்டு செல்லும் போது இந்து முன்னணி, சிவசேனா உட்பட சங்பரிவார அமைப்பைச் சார்ந்தவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு விவசாயியையும் வாகன ஓட்டியையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நெல்லையில் இன்று (28/06/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது; நெல்லை மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்காக கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறை இடையூறு அளித்து வருவதாக புகார்கள் வருகின்றன. நாள் ஒன்றுக்கு 5 வேளைகளில் 2 நிமிட அளவில் ஒருநாளைக்கு வெறும் 10 நிமிடங்கள் அளவுக்கே பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்காக கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவான 70 டெசிபல் அளவுக்கே பயன்படுத்தப்படுகின்றன. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பான அரசின் வழிகாட்டுதல்களும் இந்த நிபந்தனைகளை தான் வலியுறுத்துகின்றன. ஆனால், காவல்துறை இதை எதையுமே கணக்கில் கொள்ளாமல் பள்ளிவாசல்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என நெருக்கடி அளிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.பொதுவாக விதிமீறல்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏராளமான விசயங்களில் உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் அளித்துள்ளது. விதிமீறல் கட்டிடங்கள், அனுமதி இல்லாத கட்டிடங்கள் போன்றவற்றை இடிக்க வேண்டும் என பல்வேறு தருணங்களில் உத்தரவிட்டுள்ளது. இதனை செயல்படுத்த முனைப்புக்காட்டாத காவல்துறையும், வருவாய் துறையும் பள்ளிவாசல் விசயங்களில் தீவிரம் காட்டுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலோ மற்ற சமூகத்தினரின் விழாக்களிலோ அனுமதிக்கப்பட்ட ஒலி அளவைத் தாண்டி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதை காவல்துறையோ, வருவாய்த்துறையோ கண்டுகொள்ளாமல் இருக்கும் அதே நேரத்தில், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி மறுப்பது என்பது வழிபாட்டு உரிமையை முஸ்லிம்களுக்கு மறுக்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது. ஆகவே, வழிபாட்டுத்தலங்களில் வழிபாடுகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்திகொள்ளும் வகையில் தமிழக அரசு அரசாணைகளை பிறப்பித்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் பள்ளிவாசல்களில் வழிபாடுகளில் இடையூறு இல்லாமல் காவல்துறை துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரத்தில் அஸ்வின் குமார் என்ற பாஜக பிரமுகரும் அவருடைய தந்தையும் சிலரால் தாக்கப்பட்டதாகவும், தாக்கியவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் முகநூலில் பத்வா கொடுத்து அறிவித்துவிட்டு தாக்கினார்கள், தாக்கியவர்கள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்றெல்லாம் பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். இந்த பொய்யான அவதூறு செய்திகளை பரப்பி பொது அமைதியை கெடுக்கும் வகையில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன், பாஜக மாநில செயலாளர் ராகவன், பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்பட பாஜகவின் தேசிய, மாநில தலைவர்கள் ஈடுபட்டனர். இந்த அவதூறு மூலம் மாநிலம் முழுவதும் ஒரு பதட்டமான சூழலை உருவாக்க அவர்கள் முயற்சி மேற்கொண்டார்கள்.ஆனால், இந்த வழக்கில் அதே சமூகத்தை சார்ந்த, அதே ஜாதியை சார்ந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் உண்மை இப்படியிருக்க இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்த பாஜக தலைவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? அவர்கள் பரப்பிய அவதூறுக்கு பிராயச்சித்தம் என்ன? அவர்கள் உருவாக்கிய பதட்டத்திற்கு பதில் என்ன? பொது அமைதிக்கு மிகப்பெரிய அளவில் பங்கம் விளைவிக்கிற வகையில் வன்முறையை தூண்டும் வகையில் இத்தகைய கருத்துக்களை பதிவு செய்த பாஜக தலைவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.தொடர்ச்சியாகவே இதுபோன்ற விசயங்களில் பாஜக தலைவர்கள் அவதூறுகளை பரப்பி தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்க முனைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் நடந்த ஒரு தற்கொலையை இஸ்லாமியர்கள் செய்த கொலையாக அவதூறு பரப்பினார்கள் இதே தலைவர்கள். பிறகு அது தற்கொலை என காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி உண்மைக்கு மாறாக பொய்யை பரப்பக்கூடிய பாஜக தலைவர்களை பொய்யர்கள் என்று நாம் குற்றம் சாட்டுகிறோம். இந்த பொய்யர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். அதிமுகவின் மூன்று அணிகளும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரித்ததன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்திருக்கிறார்கள். அதிமுகவை பிளவுபடுத்திய, அதிமுகவை துண்டாடிய பாஜகவுக்கு எதிராக அதிமுக களமாடியிருந்தால் தமிழக மக்களிடம் அவர்களின் செல்வாக்கு உயர்ந்திருக்கும். ஆட்சியை இழந்திருந்தாலும் கட்சியை காப்பாற்றுவதற்கும், வலிமையான சக்தியாக மாறுவதற்கும் அது வாய்ப்பை உருவாக்கியிருக்கும். ஆனால், பாஜகவிடம் இப்போது மண்டியிட்டதன் மூலமாக தமிழக மக்களிடம் இருந்த செல்வாக்கையும் அதிமுக இழக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறது. அதிமுக தலைவர்கள் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வரும் ஜூலை 21 அன்று சென்னையில் முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது. கட்சியின் 9ம் ஆண்டு துவக்கவிழா, பெருநாள் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆகியன நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அந்நிகழ்ச்சியில் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. சிறந்த பொதுநல தொண்டுக்காக காயிதேமில்லத் விருதும், சிறந்த மனித உரிமை களப்பணிக்காக தந்தை பெரியார் விருதும், ஒடுக்கப்பட்டோர் நலன் உழைப்பிற்காக டாக்டர் அம்பேத்கர் விருதும், சிறந்த கல்விச் சேவைக்காக காமராசர்…
SDPI கட்சியினுடைய அண்ணாநகர் முன்னாள் தொகுதி தலைவர் அப்துல் சமது, கட்சியினுடைய தொகுதி தலைவராக சிறப்பாக மக்கள் பணியாறியவர், அறிவு கூர்மையான ஆற்றல் உள்ள ஒரு தோழர், மக்கள் பணிக்காக தனது சொந்த பணியையும் தாண்டி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற அதீத ஆற்றல் கொண்டவர். நேற்றைய தினம் ஈகை திருநாள் கொண்டாட்டங்களை முடித்து விட்டு குடும்பத்துடன் பழவேற்காடு சென்றபோது அங்கு ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்தார் (இன்னாலில்லாஹி) என்ற செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.அவருடைய இழப்பு என்பது குடும்பத்திற்கும், மக்கள் பணிக்கும் ஏற்பட்ட ஒரு இழப்பாகவே கருதுகிறேன். அவருடைய மறைவு தனிப்பட்ட முறையிலும் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடக்கூடிய நண்பர்கள், உறவினர்கள், SDPI கட்சியினுடைய தொண்டர்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவருடைய மறு உலக வாழ்வை சிறப்பாக்கிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி,மாநில தலைவர், எஸ்.டி.பி.ஐ. கட்சிதமிழ்நாடு
இது குறித்து SDPI கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: ”ஈதுல் ஃபித்ர்” எனும் ஈகை பெருநாளை - இன்பத் திருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று வெளியிடும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
9-ஆம் ஆண்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ------------------------------------------------------------ நாடு விடுதலைக்கு பின் - 60 ஆண்டுகால இந்தியாவில்... உரிமைகள் இழந்த நிலையில் முஸ்லிம்கள். 800 ஆண்டுகள் நாடாண்ட சமூகம் - வீதிகளில் - வீடற்றவர்களாய்... அதிகாரமற்றவர்களாய்... கேட்க நாதியற்றவர்களாய்... சங்க பரிவாரங்களின் சூழ்ச்சி வலையில் - அச்சமுற்றவர்களாய்... கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் அனைவரையும் விட பின் தங்கியவர்களாய்... பொய் வழக்குகள் - போலி எண்கவுண்டர்கள் - தீவிரவாத முத்திரைகள்.இவைகளுக்கு இலக்கானவர்களாய்... இது போன்றே தலித்கள் - பழங்குடி இன மக்கள்அரச பயங்கரவாதத்தால் - ஆதிக்கசக்திகளால் - ஜாதி வெறியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நிலையில்... இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம்?அன்று வெள்ளையனுக்கு அடிமைப்பட்டோம்...இன்று ஆளுகின்ற அரசுகளால் - கார்ப்பரேட் முதலைகளுக்கு நாட்டின் வளம் தாரைவார்க்கப்பட்ட நிலையில்... உச்சத்தில் அரச பயங்கரவாதம்... படுகொலைகளில் - மனித உரிமை மீறலில்.காவல்துறையும் - இராணுவமும். முதலாளி வர்கத்தால் உரிஞ்சப்படும் கணிமவளம்பேரபாயத்தில் சுற்றுச்சூழல்... இந்துத்துவ - சங்பரிவார - பிராமணீய பேரபாயத்தில் நம் இந்திய நாடு... இந்த அவலங்களை துடைத்திடஅரசியல் வானில் ஒரு ஒளிக்கீற்றாய்...ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் நம்பிக்கையாய்...சங்கபரிவாரங்களின் சிம்ம சொப்பனமாய்...அதிகாரத்தை நோக்கிய பயணத்தின் புதிய விடியலாய்...2009 ஜூன் 21-ல் துவக்கப்பட்டதுதான் SDPI கட்சி. இன்று நாட்டின் பல மாநிலங்களிலும்நாலு கால் பாய்ச்சலில்...போர்குணமிக்க இளைஞர்களின் கூடாரமாய்“பத்ரு” படையணியாய்...9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது SDPi இந்நாளில்... அணி சேர்ந்து பயணிப்போர்!ரத்தம், வியர்வை சிந்தியோர்!வழக்குகளை சந்தித்தோர்!ஆதரவு தந்து வாழ்த்தியோர்!உதவி - உத்வேகம் தந்தோர்!வாழ்த்தியோர்! பிரார்த்தித்தோர்!அனைவருக்கும் நன்றிகள். நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில்...நாம் வளர வேண்டியதும், வலிமை பெற வேண்டியதும் வெகு அதிகம்... ஆனால், நாடு பேரபாயத்தில், அதிகாரத்தின் உச்சத்தில் இந்துத்துவ சக்திகள்...பிரதமர் - ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் எதிரிகள்...ஜனநாயகமும் - மதசார்பின்மையும் தகர்க்கப்படுகின்ற சூழல்... எனவே, சமுதாயமே! இளைஞர்களே!அணிதிரண்டிடு! ஆர்பரித்திடு! SDPi - சில தலைவர்களுக்கானதல்ல - சிறு கூட்டத்திற்கானதல்லநம் சந்ததிக்கானது - நமக்கானது - நமது சமூகம் - நாட்டிற்கானது. எதிரிகள் புறமுதுகிட - நீதியும் - சமத்துவமும் - நிலை நாட்டப்பட வேறுபாடு களைந்து வீறுகொண்டு வா!தேசிய அளவில் SDPi-ல் ஒன்றுபடுவோம்! அனைவருக்கும் 9-ஆம் ஆண்டு துவக்க நாள் வாழ்த்துக்கள்... அன்புடன் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவிமாநில தலைவர், SDPI கட்சி
ஜூன் 21 SDPI கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு சென்னையில் மாநில தலைமையகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று (20.06.2017) வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை