மாநில செய்திகள்

SDPI கட்சியினுடைய அண்ணாநகர் முன்னாள் தொகுதி தலைவர் அப்துல் சமது, கட்சியினுடைய தொகுதி தலைவராக சிறப்பாக மக்கள் பணியாறியவர், அறிவு கூர்மையான ஆற்றல் உள்ள ஒரு தோழர், மக்கள் பணிக்காக தனது சொந்த பணியையும் தாண்டி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற அதீத ஆற்றல் கொண்டவர். நேற்றைய தினம் ஈகை திருநாள் கொண்டாட்டங்களை முடித்து விட்டு குடும்பத்துடன் பழவேற்காடு சென்றபோது அங்கு ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்தார் (இன்னாலில்லாஹி) என்ற செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.அவருடைய இழப்பு என்பது குடும்பத்திற்கும், மக்கள் பணிக்கும் ஏற்பட்ட ஒரு இழப்பாகவே கருதுகிறேன். அவருடைய மறைவு தனிப்பட்ட முறையிலும் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடக்கூடிய நண்பர்கள், உறவினர்கள், SDPI கட்சியினுடைய தொண்டர்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவருடைய மறு உலக வாழ்வை சிறப்பாக்கிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி,மாநில தலைவர், எஸ்.டி.பி.ஐ. கட்சிதமிழ்நாடு
இது குறித்து SDPI கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: ”ஈதுல் ஃபித்ர்” எனும் ஈகை பெருநாளை - இன்பத் திருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று வெளியிடும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
9-ஆம் ஆண்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ------------------------------------------------------------ நாடு விடுதலைக்கு பின் - 60 ஆண்டுகால இந்தியாவில்... உரிமைகள் இழந்த நிலையில் முஸ்லிம்கள். 800 ஆண்டுகள் நாடாண்ட சமூகம் - வீதிகளில் - வீடற்றவர்களாய்... அதிகாரமற்றவர்களாய்... கேட்க நாதியற்றவர்களாய்... சங்க பரிவாரங்களின் சூழ்ச்சி வலையில் - அச்சமுற்றவர்களாய்... கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் அனைவரையும் விட பின் தங்கியவர்களாய்... பொய் வழக்குகள் - போலி எண்கவுண்டர்கள் - தீவிரவாத முத்திரைகள்.இவைகளுக்கு இலக்கானவர்களாய்... இது போன்றே தலித்கள் - பழங்குடி இன மக்கள்அரச பயங்கரவாதத்தால் - ஆதிக்கசக்திகளால் - ஜாதி வெறியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நிலையில்... இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம்?அன்று வெள்ளையனுக்கு அடிமைப்பட்டோம்...இன்று ஆளுகின்ற அரசுகளால் - கார்ப்பரேட் முதலைகளுக்கு நாட்டின் வளம் தாரைவார்க்கப்பட்ட நிலையில்... உச்சத்தில் அரச பயங்கரவாதம்... படுகொலைகளில் - மனித உரிமை மீறலில்.காவல்துறையும் - இராணுவமும். முதலாளி வர்கத்தால் உரிஞ்சப்படும் கணிமவளம்பேரபாயத்தில் சுற்றுச்சூழல்... இந்துத்துவ - சங்பரிவார - பிராமணீய பேரபாயத்தில் நம் இந்திய நாடு... இந்த அவலங்களை துடைத்திடஅரசியல் வானில் ஒரு ஒளிக்கீற்றாய்...ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் நம்பிக்கையாய்...சங்கபரிவாரங்களின் சிம்ம சொப்பனமாய்...அதிகாரத்தை நோக்கிய பயணத்தின் புதிய விடியலாய்...2009 ஜூன் 21-ல் துவக்கப்பட்டதுதான் SDPI கட்சி. இன்று நாட்டின் பல மாநிலங்களிலும்நாலு கால் பாய்ச்சலில்...போர்குணமிக்க இளைஞர்களின் கூடாரமாய்“பத்ரு” படையணியாய்...9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது SDPi இந்நாளில்... அணி சேர்ந்து பயணிப்போர்!ரத்தம், வியர்வை சிந்தியோர்!வழக்குகளை சந்தித்தோர்!ஆதரவு தந்து வாழ்த்தியோர்!உதவி - உத்வேகம் தந்தோர்!வாழ்த்தியோர்! பிரார்த்தித்தோர்!அனைவருக்கும் நன்றிகள். நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில்...நாம் வளர வேண்டியதும், வலிமை பெற வேண்டியதும் வெகு அதிகம்... ஆனால், நாடு பேரபாயத்தில், அதிகாரத்தின் உச்சத்தில் இந்துத்துவ சக்திகள்...பிரதமர் - ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் எதிரிகள்...ஜனநாயகமும் - மதசார்பின்மையும் தகர்க்கப்படுகின்ற சூழல்... எனவே, சமுதாயமே! இளைஞர்களே!அணிதிரண்டிடு! ஆர்பரித்திடு! SDPi - சில தலைவர்களுக்கானதல்ல - சிறு கூட்டத்திற்கானதல்லநம் சந்ததிக்கானது - நமக்கானது - நமது சமூகம் - நாட்டிற்கானது. எதிரிகள் புறமுதுகிட - நீதியும் - சமத்துவமும் - நிலை நாட்டப்பட வேறுபாடு களைந்து வீறுகொண்டு வா!தேசிய அளவில் SDPi-ல் ஒன்றுபடுவோம்! அனைவருக்கும் 9-ஆம் ஆண்டு துவக்க நாள் வாழ்த்துக்கள்... அன்புடன் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவிமாநில தலைவர், SDPI கட்சி
ஜூன் 21 SDPI கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு சென்னையில் மாநில தலைமையகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று (20.06.2017) வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்டம் சார்பில் வணிகர்களின் மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை, புரசைவாக்கத்தில் இன்று (17.06.2017) வணிகர்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகை போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக துவங்கி போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை