மாநில செய்திகள்

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அன்-நூர் கண் மருத்துவமனை சார்பாக Dr.கலீல் அஹமது (MD) தலைமையில் நடைபெற்ற ஈத் மிலன்(பெருநாள் சந்திப்பு) 09.07.2017 நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இதில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி: K.N.பாஷா, Don Bosco முன்னாள் முதல்வர். Dr. ஆப்ரகாம், கலந்து கொண்டனர் மேலும் கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர்.ஜூனைத் அன்சாரி, செயலாளர்: அஹமது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கதிராமங்கலத்தில் ONGC-க்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.07.2017) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமையின் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இப்போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் இரா. முத்தரசன் , மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், SDPI கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. கரீம், SDTU தொழிற்சங்க மாநில தலைவர் தஞ்சை முகமது ஃபாரூக் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். மேடையில் கண்டன முழக்கம் எழுப்பிய தலைவர்கள் கண்டன முழக்கம் எழுப்பும் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட SDPI நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட SDPI தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுமியின் கையில் உள்ள பதாகை
தாம்பரத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் யாசர் தாக்கப்பட்டது குறித்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாக கேட்டு வருகிறார்கள். வலை தளங்களில் விமர்சனங்களும், விவாதங்களும் பரவி வருவதால் இந்த விளக்கமும், வேண்டுகோளும். தாம்பரம் பெரிய பள்ளிவாசலில் இன்று (07.07.2017) ஜும்மா தொழுகைக்கு பின் பள்ளிவாசலின் இமாம் எழுந்து தான் இன்றோடு இந்த பள்ளி இமாம் பொறுப்பில் இருந்து விலகிவிடுவதாகவும், அதற்கு இவைதான் காரணம் என்றும் சில காரணங்களை கூற துவங்கியுள்ளார். உடனே சிலர் அவரை தாக்க முற்பட்டுள்ளனர். ஜும்மா முடிந்தவுடன் இது சலசலப்பையும், பிரச்சினையயும் உருவாக்கியுள்ளது. தொழ வந்திருந்த சகோதரர் யாசர் கூட்டத்துடன் நின்றுள்ளார். பள்ளிவாசலில் நிர்வாக பிரச்சினை பல மாதங்களாக உள்ளது. மாவட்ட பொதுச் செயலாளர் யாசரோ அல்லது கட்சியின் இதர நிர்வாகிகளோ இதுவரை எந்த பிரச்சினையிலும் பங்கேற்றதில்லை. பள்ளிவாசலின் நிர்வாகிகளாக தமுமுக.வின் மநில நிர்வாகிகளின் குடும்பத்தினர் உள்ளனர். பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது எந்த விவாதங்களிலும் பங்கேற்காத - இந்த பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத சகோதரர் யாசர் தாக்கப்பட்டுள்ளார். த.மு.மு.க - ம.ம.க.வின் அறியப்பட்ட நிர்வாகிகளே தாக்கியுள்ளனர். பிறகு பள்ளியில் இருந்து அவர் வெளியே வந்தபின் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். இதன் பின் இதர மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றதோடு காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் சகோ யாசர். நீண்ட நாட்களாக இந்த பள்ளி வாசலில் நடைபெறும் நிர்வாக பிரச்சினையில் நாம் தலையிட வேண்டாம் என நகர #SDPI கட்சி ஏற்கனவே முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின் தாக்கப்பட்ட யாசருக்கு ஆதரவாக பேசிய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகளான அக்பர் அலி, ஜுனைத் ஆகியோர் கடுமையாக வெட்டுப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். அதே போன்று ம.ம.க.வின் நகர இளைஞரணி நிர்வாகி காதர் தன்னை தேசிய லீக் கட்சியினர் தாக்கியதாக மருத்துவமனையில் சேர்ந்ததோடு தேசிய லீக் கட்சியினர் தாக்கியதாக புகாரும் கொடுத்துள்ளார். SDPI கட்சியின் எந்த நிர்வாகிகளும் இன்று பள்ளிவாசலில் நடந்த பிரச்சினையில் தலையிடவில்லை. SDPI கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் கட்சி பணி சார்ந்த உள்நோக்கத்துடனேயே தாக்கப்பட்டுள்ளார். SDPI கட்சியின் தலைமை எந்த எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது எனவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறித்தியுள்ளது. தொடர்ந்து தாம்பரத்தில் இது போன்ற தாக்குதல்களும், மோதல்களும் தொடர்வது சமுதாயத்திற்கு நல்லதல்ல. சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். SDPI கட்சியின் ஆதரவாளர்களுக்கும் - தொண்டர்களுக்கும் நாம் கேட்டுக் கொள்வது. முகநூல்களில் இது பற்றிய விமர்சனங்களையும், கண்டங்களையும் தொடர வேண்டாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளே இதில் போதுமானது. நாம் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டிய காலத்தின் தேவையும் - அவசியமும் நம் முன் நிற்கிறது. நம் இலக்குகளும், குறிக்கோளும் மாறிவிட வேண்டாம். என தலைமையின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீ்க்கும் வகையில் ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இளைய வக்காளர்களை குறிப்பாக 18-19 வயதுடையவர்களை பட்டியலில் சேர்க்க தற்போது நடக்கும் தொடர் திருத்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான படிவங்களை நிரப்பி ஜூலை 31-க்குள் வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும், அஞ்சலகம் மூலமும் படிவங்களை அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ‘www.elections.tn.gov.in’ இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இதற்காக சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடத்தப்படுகின்றன. ஆகவே, தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு அறிவிப்பு மற்றும் முகாம் மூலம் பொதுமக்கள் பயன்பெரும் பொருட்டு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது; புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான போக்கை கையாளும் புதுவை துணநிலை ஆளுநர் கிரண்பேடி, நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்கும் வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக, ஜனநாயக நெறிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் வகையில், மக்களால் புறந்தள்ளப்பட்ட பாஜக நிர்வாகிகள் உள்பட 3 பேரை புதுவை அரசின் ஒப்புதலின்றி நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். மத்திய பாஜக அரசு ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைப்படி புதுவை பாஜக மாநில தலைவர் சாமிநாதன், மாநில பொருளாளர் சங்கர் மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவிப்பினை வெளியிட்டது. இவர்களில் 2 பேர் மீது குற்ற பின்னணி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜனநாயகத்தை காலில் போட்டு புதைத்துவிட்டு கொள்ளைப்புற வாசல் வழியாக எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்ட பாஜகவினர், நேற்று இரவோடு இரவாக ஆளுநர் கிரண்பேடிமுன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். புதுவை ஆளுநர் மற்றும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்தியில் பாஜக அரசு பதவியேற்றது முதல் பல்வேறு மாநிலங்களில் ஜனநாயக நடைமுறைகளை தூக்கியெறிந்து விட்டு அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்து வருகின்றது. அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் தங்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பயன்படுத்தி, காங்கிரஸ் அரசை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை ஏற்படுத்தியது. எனினும் உச்ச நீதிமன்றம் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை ரத்து செய்து மத்திய அரசுக்கு குட்டு வைத்தது. ஆனாலும் தொடர்ந்து கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்றிருந்த போதும் தனது எடுபிடி ஆளுநர்கள் மூலம் ஆட்சியை பிடித்து பின்னர் பேர அரசியல் மூலம் அதனை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் புதுவையிலும் தனது கைங்கர்யத்தை ஆளுநர் கிரண்பேடி மூலமாக மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகின்றது. சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக நிர்வாகி மற்றும் குற்ற வழக்குகள் பின்னணியுள்ளவர்களை எம்.எல்.ஏக்களாக நியமிக்க புதுவை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள். ஆகவே, அவர்களின் நியமனத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதுவை அரசை செயல்பட விடாமல் தொடர்ந்து இடையூறு செய்துவரும் ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த ஜனநாயக படுகொலைகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அரசியல் கட்சிகள் நடத்தும் அனைத்துவிதமான போராட்டங்களையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரிக்கும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் சமூக நீதி, மாநில உரிமை மீட்பு, மதசார்பின்மை உள்ளிட்ட தலைப்பின் கீழ் 04.05.2017 அன்று கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
பசு குண்டர்களால் நாடு முழுவதும் தினந்தோறும் கால்நடை வியாபாரிகளும், முஸ்லிம் மற்றும் தலித்களும் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருகிறார்கள். மத்திய பாஜக அரசு இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டதை தொடர்ந்து, வட நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட பசு குண்டர்கள், தமிழகத்திலும் வன்முறையை தூண்டும் வகையில் மாட்டு வியாபாரிகளை மிரட்டி வருகின்றனர். இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று இந்துத்துவா குண்டர்களால் நேரடியாகவே கால்நடை சந்தை வியாபாரிகள் மிரட்டப்படுகின்றனர். மேலும், விவசாயிகளிடமிருந்து மாடுகளை வலுக்கட்டாயமாக பிடித்துச்சென்று கோசாலைகளில் விடுவதாகக் கூறி கள்ளச் சந்தையில் அவற்றை விற்றுவிடுவதாக கால்நடை வியாபாரிகளும், விவசாயிகளும் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பசு குண்டர்களின் அடாவடித்தனத்திலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை கால்நடை சந்தை வியாபாரிகள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்களை கட்சியின் மாநில தலைமையகத்தில் சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், SDTU மாநில தலைவர் தஞ்சை முகமது ஃபாரூக், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. கரீம் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
இன்று (03.07.2017) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கலந்து கொண்டார்கள். அப்போது அவர் நிருபபர்களிடம் கூறியதாவது; கதிராமங்கலம் கிராமத்திற்கு கட்சியின் நிர்வாகிகளான அப்துல் சத்தார், தஞ்சை முகமது பாரூக் உட்பட பலர் நேற்று சென்றிருந்தோம். அப்போது காவல்துறையினர் அக்கிராமத்திற்குள் செல்ல அனுமதி மறுத்ததோடு அம்மக்களின் நிலையை பார்வையிட சென்ற எங்களையும் கைது செய்தனர். கதிராமங்கலம் கிராமத்தில் ONGCயின் எண்ணெய் கசிவால் 70 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும் அம்மக்களின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏன் ஏற்க மறுக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார். மேலும் அச்சத்தோடு வாழக்கூடிய அம்மக்களின் கோரிக்கையை மாநில அரசு ஏற்க வேண்டும், அத்தோடு கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையை உடணடியாக வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பில் பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப. உதயகுமார், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், மதிமுகவின் மல்லை சத்தியா, SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை முகமது ஃபாரூக், ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. கரீம் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓ.என்.ஜி.சியின் இந்த எண்ணெய் குழாய் முற்றிலும் பாதுகாப்பானது என்று வருவாய் துறையினர் உறுதியளித்து சென்ற நிலையில் இந்த திடீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் நேரில் வருகை தந்து ஓ.என்.ஜி.சி. அப்பகுதியிலிருந்து அகற்றப்படும் எனவும் மக்களின் உயிருக்கு பாதுக்காப்பு அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இன்று (02.07.2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் முஸ்தபா அவர்களின் இல்லத்திருமண விழா திருச்சி பீமநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள். பிறகு கட்சியின் மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள், அவர் பேசுகையில்; ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.விற்கு அதிமுக ஆதரவளிப்பதை தமிழக மக்கள் மட்டுமல்லாது அதிமுக தொண்டர்களே ஒரு போதும் ஏற்கமாட்டார்கள்; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவை பல பிரிவுகளாக்கி அதனுடைய இரட்டை இலை சின்னத்தை முடக்கி, கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் நெருக்கடியை கொடுத்த கட்சி பாரதிய ஜனதா கட்சி. அந்த பாஜகவோடு உறவு வைத்து கொள்வதையும், அந்த பாரதிய ஜனதா குடியரசு தலைவர் வேட்பாளருக்கு வாக்களிப்பதையும், தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் மாத்திரமல்ல, அதிமுக தொண்டர்களே இதை ஏற்கமாட்டார்கள். எனவே அதிமுகவின் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் பாரதிய ஜனதாவின் குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரியால் வியாபாரிகள், சாமானிய மக்கள் பெரும் பாதிப்படைவார்கள்; நேற்று நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி விதிப்பால் சாதாரன பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். நேற்று முதலே 20% அளவிற்கு உணவகங்களில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயரும், வியாபாரிகள் தங்களுக்கு ஏற்படும் கடன்களையும் மக்களின் மீதே சுமத்துவார்கள். மாநிலத்தினுடைய வருவாய் வெகுவாக பாதிக்கும். இதனால்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தார். இன்றைக்கு ஜிஎஸ்டி வரியை சாதனையாக பேசுகிற பிரதமர் மோடிதான் அன்றைக்கு குஜராத் முதல்வராக இருந்த போது காங்கிரஸ் கொண்டுவந்த ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தார். ஆனால் இன்றைக்கு ஜிஎஸ்டியை பற்றி பெருமையாக பேசுவதின் மூலம் மோடியின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்படுகிறது. அவசர கோலத்தில் இயற்றப்பட்டுள்ளது ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி. இதனால் வியாபாரிகளும், சாதாரண பொது மக்களும் பாதிப்படைவார்கள். பசு குண்டர்களால் பலியாகும் முஸ்லிம்கள் - பாஜக ஆளும் மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்க ஆயுதம் வைத்து கொள்ள அரசுகள் அனுமதிக்க வேண்டும்; மாட்டிறைச்சி மீதான தடைக்கு பிறகு நாடு முழுவதும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் அதிகரித்துள்ளன. குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இந்த கொலைகளை நரேந்திர மோடி கண்டித்து பேசியது, வெரும் வார்த்தை ஜாலமும், ஏமாற்று வித்தையும் ஆகும். அவர் பேசிய இரண்டு மணி நேரத்திலேயே பாஜக ஆளும் மாநிலமான ஜார்கண்டில் இரண்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யபட்டுள்ளார்கள். தமிழகம் கேரளத்தை போன்று இல்லாமல் பாஜக ஆளூம் மாநிலங்களில் முஸ்லிம்களின் உயிர்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக ஆயுதம் வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அரசுகளை கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்; பேரரிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வாகும். ஒட்டுமொத்த ஆதரவோடு தமிழக சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு MGR நூற்றாண்டு விழாவை முண்ணிட்டு 10 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் சிறை கைதிகளை மத வேறுபாடின்றி கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இத்திருமண நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை முகமது ஃபாரூக், திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா, மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி, மாவட்ட செயலாளர்கள் ரஃபீக் முகமது, ஹஸ்ஸான் இமாம், மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் மஜீத் மற்றும் தொகுதி நிர்வாகிகளும், செயல்வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை