இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பை தொகுதி வீரவநல்லூரில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை தமிழகத்தில் முழுமையாக ரத்து செய்யவேண்டும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும் மாநில அரசும் முழு பொறுப்பேற்க வேண்டும், நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் SDPI கட்சியின் மதுரை வடக்கு தெற்கு தொகுதி சார்பில் வடக்கு தொகுதி தலைவர் சிக்கந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.

மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும், கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியில் இருந்து ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்கிட கோரியும் கோவை மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் (மகளிர் அமைப்பு) சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கண்டன முழக்கமிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தனர்.

மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும், கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியில் இருந்து ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்கிட கோரியும் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் வழக்கறிஞர். ரஜினிகாந்த் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகில் மாபெரும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி பாளை தொகுதி சார்பாக மேலப்பாளையத்தில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பாளை தொகுதி தலைவர் மின்னத்துல்லாஹ் தலைமையில் சந்தை ரவுண்டானா அருகே நடைபெற்றது.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் (SDPI கட்சியின் மகளிர் அமைப்பு) சார்பாக மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் மதுரை மாவட்ட தலைவி கதிஜா பேகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி நகர SDPI கட்சியின் சார்பாக முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நகர தலைவர் ஷேக் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.மேலும் SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முஹம்மது முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர்கள் முஹைதீன் அப்துல் காதர், அஹமது நவவி ஆகியோரும் உரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழ் உறுப்பினர் கே.கே.ஹபீப் ரஹ்மான் துவக்க உரையாற்றினார்.

09.09.2017 அன்று காலை 11 மணி அளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அவர்கள் நெல்லையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது கட்சியின் மாநில துணை தலைவரும், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவருமான நெல்லை முபாரக், மாவட்ட துணை தலைவர் கே.எஸ்.சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.கனி, மாவட்ட செயலாளர் கே.ஹயாத் முஹம்மது, மாவட்ட பொருளாளர் முல்லை மஜீத் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிஸ்மி காஜா, ஏற்வை ஹபீப், மோத்தை (எ) நெய்னா முகம்மது, கல்லிடை சுலைமான், நெல்லை நிஜாம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் மினத்துல்லாஹ், பர்கிட் அலாவுதீன், பேட்டை காசிம், சேக் சாலி, ஏர்வை இம்ரான், களந்தை மீராஷா, வீரை பீர் மஸ்தான் நகர நிர்வாகிகள் அப்துல் லத்தீப், பஷீர், கல்வத், அப்துல் காதர், சிந்தா ஜெபா மற்றும் எஸ்.டி.டி.யூ நிர்வாகிகள் ஹைதர் அலி, ரத்தீஸ் முகம்மது, சபீர் பஷீர், ஆட்டோ இஸ்மாயில் WIM நிர்வாகிகள் மும்தாஜ் ஆலிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி வட சென்னை மாவட்டம் பெரம்பூர் தொகுதி SDPI கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் மாநில செயலாளர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

Page 1 of 4

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை