மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக்கல்வி அகாடமி இணைந்து மறைந்த முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை QIAMS கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 05 மணிக்கு நடைபெற்றது.

பெண்களைப் பாலியல் வக்கிரத்துடன் சித்திரிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினருக்கு எதிரான ஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா? சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்! - SDPI பங்கேற்பு!

ஒரே பணிக்கு ஒரே ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மகளிர் மேல்நிலையப்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெறக்கோரி சென்னை சென்ட்ரலில் இரயில் மறியல் போராட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சின் மாநில தலைவர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது

காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவிற்கு நீதிக்கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக துணைத் தலைவர் குணங்குடி ஹனீஃபா மற்றும் SDPI கட்சியின் தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீயுஸ் எக்ஸ் ஆங்கில தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நேற்று(ஏப்ரல்.20) அன்று கலந்து கொண்டார். அதில் "தமிழர்கள் பொய்யர்கள், பிரிவினைவாதிகள், நடிப்பவர்கள் என்று மிகவும் கொச்சைபடுத்தி அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மார்வாடிகளை விட்டும் பேச வைத்திருக்கிறார். அந்த தொலைகாட்சியின் தொகுப்பாளர். ஆனால் இதற்கு மறுப்பு சொல்ல திருமுருகன் காந்திக்கு வாய்ப்பு கொடுக்காததோடு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பேசநேரமே கொடுக்காமல் தமிழின விரோதத்தோடு நியூஸ் எக்ஸ் ஆங்கில தொலைகாட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து இரவு திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே17 இயக்க தோழர்கள் தொலைகாட்சி வாயில் முன் தமிழர்களை இழிவுபடுத்திய நிகழ்ச்சி நெறியாளர் பகிரங்கமாக தொலைகாட்சியில் தமிழர்கள் இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தோழர் திருமுகன் காந்தியுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சி தோழர்கள், மே பதினேழு இயக்க தோழர்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தோழமை அமைப்புகளின் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் இன்று(ஏப்.19) காலை 10 மணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம்!  - தமிழர்களின் போராட்ட உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - எஸ்.டி.பி.ஐ

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தொடர் துரோகத்தை கண்டித்து பிரதமர் மோடி வருகையின் போது கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!  - தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும் கருப்பு தோரணம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு

காவிரி நதிநீர் உரிமைப் பறிப்பு, தமிழர் வேளாண் நிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ-கார்பன், எரிஎண்ணெய் கிணறு, நியுட்ரினோ ஆய்வு, ஸ்டெர்லைட் ஆலை, அணுவுலை போன்ற பேரழிவுத் திட்டங்களைத் திணித்து தமிழர் வாழ்வாதாரத்தை அழிக்கும் மத்திய அரசை எதிர்கொள்வது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று 02-04-2018 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சேப்பாக்கம், சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு!-ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

Page 1 of 9

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை