மார்க் துறைமுகம் முற்றுகைப்போராட்டம்

நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிலக்கரி இறக்குமதியை தடை செய்யக்கோரி நாகூரில் பல்வேறு இயக்க மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மார்க் துறைமுகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கமிட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், தோழர் சுப.உதயகுமார், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்பு செயலாளர் சிபி.சந்தர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

மேலும் இந்த முற்றுகைப்போராட்டத்தில் கட்சியின் நாகை தெற்கு மாவட்ட தலைவர் அக்பர் அலி, பொதுச்செயலாளர் நூருல் அமீன், காரைக்கால் மாவட்ட தலைவர் பிலால், பொதுச்செயலாளர் தமீம் உட்பட பல்வேறு அரசியல், இயக்க மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை