வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதா: சென்னை சென்டரலில் இறயில் மறியல் போராட்டம்

SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெறக்கோரி சென்னை சென்ட்ரலில் இரயில் மறியல் போராட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சின் மாநில தலைவர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது

SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை வலுப்படுத்தி அரசியலமைப்பு சட்ட அட்டவணை 9ல் சேர்த்திடக் கோரியும், SDPI கட்சி உட்பட பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் இன்று(ஏப்ரல்.21) காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர்களும் இரயிலை மறித்து கண்டன முழக்கமிட்டனர்.


இந்த போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி,தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா, மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், தென் சென்னை பொதுச்செயலாளர் அன்சாரி, தமிழர் விடியல் கட்சி டைசன், தமிழக மக்கள் கட்சி வெற்றிச்செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிட விடுதலைக் கழகம் தபசி குமரன், இளந்தமிழகம் செந்தில் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை