என்.எல்.சி. நிறுவனம் முற்றுகைப் போராட்டத்தில் மாநில தலைவர் பங்கேற்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், காவிரி விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் கடந்த 04.04.2018 (புதன் கிழமை) சென்னை நிருபர்கள் சங்கத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோனைக்கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி இன்று(ஏப்ரல்.10) காலை 11 மணிக்குக் காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(NLC) மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட SDPI கட்சியின் செயல்வீரர்கள் கலந்து கொண்டு தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார், கடலூர் மாவட்ட தலைவர் புரோஜ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை