இலவச நீட் தேர்வு நேரடி பயிற்சி மையங்களில் பள்ளிக்கு ஒரு மாணவருக்கு மட்டுமே அனுமதி, எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் நீட் தேர்விலிருந்து கடந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு பெறத் தவறிய தமிழக அரசு, ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையான நீட் விலக்கு கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்காமல், தொடர்ந்து மத்திய அரசின் நீட் துரோகத்துக்கு துணை போகும் வகையில் நீட் பயிற்சி மையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், அந்த பயிற்சி மையங்கள் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சியை கூட மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் வழங்குவார்களா என்ற கேள்வியை கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை எழுப்பியுள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படும் சூழலில், வசதி படைத்த மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பயிற்சியில் சேர்ந்த நிலையில், ஏழை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியானது. இதையடுத்து அரசு சார்பாக நீட் பயிற்சி மையங்களை அனைத்து ஒன்றியங்களிலும் அமைத்து இலவச பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், சென்னை, ஈரோடு, திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் மட்டுமே நேரடி பயிற்சி முறையும் மற்ற இடங்களில் வீடியோ கான்பரன்சிங் முறையில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி பயிற்சி நிலையங்களில் கூட திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ஆகிய இடங்களில் மட்டுமே தமிழ் வழி பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு அடுத்தடுத்து நீட்டின் பெயரால் தமிழக அரசு துரோகம் செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழக கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தின் நேரடி பயிற்சி முகாமிற்கு பள்ளிக்கு ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பினால் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், மற்ற மாணவர்களுக்கு அந்தந்த ஒன்றியத்தில் உள்ள பயிற்சி மையம் மூலம் வீடியோ கான்பரன்சிங் முறையில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னர் 5 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து அனுப்புமாறு தெரிவித்துவிட்டு தற்போது ஒரு மாணவருக்கு மட்டுமே நேரடி பயிற்சி அளிப்பது என்பது கண்டனத்திற்குரியது.

நேரடி பயிற்சி முறைக்கும் வீடியோ பயிற்சி முறைக்கும் பல வகைகளில் முரண்பாடுகள் உள்ளன. மாணவர்களின் சந்தேகம் வீடியோ கான்பரன்சிங் முறையில் தீர்வது கடினம். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு சிதைந்துள்ளது. ஆகவே, தமிழக அரசு நேரடியாக பயிற்சியளிக்கும் மையங்களை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்தினால் மட்டுமே ஏழை எளிய மாணவர்கள் ஓரளவாவது நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து, தமிழக அரசு இப்பிரச்சினையை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் முயற்சியை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை