ஜார்க்கண்ட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை திரும்ப பெறு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது ஜார்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை கண்டித்தும், தடையை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில்16.03.2018 அன்று மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய இந்திய அரசமைப்பின் விழுமியங்களைப் போற்றி இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களிலும் தனித்தும், பிற ஜனநாயக அரசியல் இயக்கங்கள், கட்சிகளோடு இணைந்தும் அறப் போராட்டங்களிலும் ஆக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் மீது போலியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எந்த ஒரு முகாந்திரமும் இன்றி, ஆங்கிலேய காலத்து கிரிமினல் திருத்த சட்டம் 1908 என்ற சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு தடை செய்துள்ளது. மத்தியில் பா.ஜ.க. அரசாங்கம் அமைந்ததில் இருந்து ஜனநாயக சக்திகளுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு இந்த தடையை விதித்துள்ளது.

இந்த தடையை கண்டித்தும், தடையை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த மார்ச் 02 அன்று சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் நடைபெற்ற மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கலந்தாலோசனை கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், அனைத்து கட்சிகளின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இன்று (மார்ச்.16) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ, தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் முனவ்வர் பாஷா, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிந்திரநாத், திராவிட கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சி-தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமூக நீதி இயக்க தலைவர் பேராயர்.எஸ்றா சற்குணம், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் கே.ஜலாலுதீன், மனித நேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாரூன் ரஷீத், வெல்ஃபேர் பார்ட்டி மாநில துணைத் தலைவர் முஹம்மது ஹாலித், கிருஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ், தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பசீர் அகமது, தமிழ் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பாலன், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீஃப், பி.யு.சி.எல். தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி, பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், இந்திய தேசிய லீக் கட்சி செயல் தலைவர் எஸ்.கே.அத்தாவுல்லா, ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் தலைவர் மௌலவி. வி.மன்சூர் காஷிபி, என்.சி.ஹெ.ஆர்.ஓ. தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ், முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா முஸாஃபர், முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் சே.மு.மு.முஹம்மது அலி, ஏ.கே.முஹம்மது ஹனீஃபா, இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.செந்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், தமிழர் விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் சௌ.சுந்தர மூர்த்தி, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஆவல் கணேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நியாயமற்றது. ஆகவே, ஜார்க்கண்ட் மாநில அரசும், மத்திய அரசும் சிறுபான்மை விரோதபோக்கை கைவிட்டு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும், பொய் புகார்களின் அடைப்படையில் சிறையிலடைக்கப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

4 comments

  • nike air huarache
    nike air huarache Tuesday, 03 April 2018 06:19 Comment Link

    Carey - Owen about injury of varese, said it happened out how knight players want to play games."I was about to enter a 5 on 5 game, but after three seconds, varese is injured
    nike air huarache http://www.nikehuarache.us.com

  • kyrie 4
    kyrie 4 Monday, 02 April 2018 10:48 Comment Link

    "I don't think eastern conference finals will be a long war, knight's strength is too strong. The celtics nobody with lebron, they even Owen this level of star all have no, they are really no one can stop the knight.
    kyrie 4 http://piep.net/kyrie4

  • kyrie 4
    kyrie 4 Monday, 02 April 2018 04:07 Comment Link

    Obviously, the right to occupy a team-high 21.6 shots of Michael Owen, but failed to hit as James scores, this let a person feel, Owen has become a "cancer" of the knight.But many fans also feel,
    kyrie 4 http://fhc.io/kyrie4

  • kyrie 4
    kyrie 4 Monday, 02 April 2018 02:07 Comment Link

    Obviously, the right to occupy a team-high 21.6 shots of Michael Owen, but failed to hit as James scores, this let a person feel, Owen has become a "cancer" of the knight.But many fans also feel,
    kyrie 4 http://urlr.be/short/kyrie4

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை