வி.எச்.பி.யின் யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது

இராமராஜ்ஜிய ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது-காவல்துறை தலைமை இயக்குநரிடம் காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று (08.03.2018) தமிழக காவல் தலைமை இயக்குனர் திரு. டி.கே. ராஜேந்திரன் அவர்களை சந்தித்து விஸ்வ ஹிந்து பரிசத் நடத்தும் இராமராஜ்ய ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று மனு அளிக்கப்பட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி மற்றும் பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு கொடுத்துவிட்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறியதாவது;

விஸ்வ ஹிந்து பரிசத்தின் ஏற்பாட்டில் “ராமராஜ்ய ரதயாத்திரை” என்ற பெயரில் பிப்ரவரி 13ஆம் நாள் முதல் அயோத்தியில் ரத யாத்திரை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மார்ச் 25வரையான 41 நாட்களுக்கு இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என 6 மாநிலங்கள் வழியாக சுமார் 6000 கி.மீட்டர் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இராமராஜ்யத்தை மறுநிர்மாணம் செய்வது, பாடத்திட்டத்தில் இராமாயணத்தை இணைப்பது, இராமஜென்ம பூமியில் இராமர் கோவில் கட்டுவது, வியாழக்கிழமையை வார விடுமுறை நாளாக அறிவிப்பது, உலக இந்து நாள் அறிவிப்பது என ஐந்து முழக்கங்களை முன்வைத்து ரதயாத்திரை நடத்துகின்றனர். மார்ச் 20 அன்று ராஜபாளையம் வழியாக மதுரைக்குள் நுழைந்து இராமேஸ்வரம்-திருநெல்வேலி-கன்னியாகுமரி என மார்ச் 25 அன்று அன்று திருவனந்தபுரம் சென்று யாஅத்திரை முடிகிறது.

இது ஆன்மீக பரப்புரை நோக்கம் கொண்ட சுற்றுப்பயணம் அல்ல. முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. யாத்திரையின் தொடக்க விழாவில் விஸ்வ ஹிந்து பரிசத்தின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வழிநெடுக இப்பயணத்தை வரவேற்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, மக்களவை உறுப்பினர் லல்லு சிங் போன்ற பா.ஜ.க தலைவர்கள்தான் யாத்திரையை வரவேற்றுக் கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் வேலைத்திட்டத்தின் பகுதியாக இந்த ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1980களில் இருந்து சிறுசிறு யாத்திரைகளை நடத்தி 1980-ல் நாடு தழுவிய ரத யாத்திரையை பா.ஜ.க. நடத்தியதால் ஏற்பட்ட தீமைகள் இன்றும் ஜனநாயக ஆற்றல்களின் நினைவில் பசுமையாக உள்ளது. அந்த யாத்திரையின் போதே கலவரங்கல் தூண்டப்பட்டு பல நூறு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரும் கலவரங்கள் நம் நாட்டில் நிகழ்த்தப்பட்டன. இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை இந்த மண்ணில் அந்நியப்படுத்தப்பட்டவர்களாகவே மதச் சிறுபான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். இவை எதையும் நம் நாடு இன்னும் மறக்கவில்லை.

மேலும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய ரத யாத்திரை என்பது பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உரியதாக மாற்றும். ராம கோயில் கட்டுவதற்கு சமூக, அரசியல் தளத்தில் சாதகமான சூழல் நிலவுவதாக ரதயாத்திரையில் கூறி வருகின்றனர். பயண வழித்தடம் தேர்தல் நடக்கும் மாநிலங்களை குறிவைத்தே திட்டமிடப்பட்டுள்ளது. மதக்கலவரங்களை நடத்துவதன் மூலம் தேர்தல் ஆதாயம் தேடுவதே இப்பயணத்தின் நோக்கம். ஆட்சியில் இல்லாத காலங்களில் சங் பரிவாரங்கள் நடத்திய ரதயாத்திரைகளால் பரப்பப்பட்ட வெறுப்பு கருத்துகள், வெடித்த கலவரங்கள், நடத்தப்பட்ட படுகொலைகள், இடிக்கப்பட்ட மசூதி, தேவாலயங்களை நினைத்துப் பார்க்கும் பொழுது இப்போது ஆட்சியில் இருக்கையில் நடந்து கொண்டிருக்கும் ரதயாத்திரை என்னவெல்லாம் ஆபத்தை விளைவிக்குமோ நாடெங்கிலும் உள்ள ஜனநாயக ஆற்றல்களை கல்லமுற்று உள்ளனர்.

அரசியல் தத்துவார்த்த வேறுபாடுகள் காரணமாக லெனின், பெரியார், அம்பேத்கர் ஆகிய மாபெரும் வரலாற்று ஆளுமைகளின் சிலையை உடைக்கும் அளவுக்கு சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் பரவி கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வினரின் நச்சுப்பேச்சுகளால் தமிழகத்தில் பதற்றம் ஏற்படுவது, சமூக அமைதி கெடுவதும் வாடிக்கையாகி வருகிறது. வட இந்தியாவை போல் தமிழகத்தையும் மதச்சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் நெடுநாள் கனவாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.முன்னெடுக்கும் ரதயாத்திரை என்பது முழுக்க முழுக்க மதச்சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

எனவே, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு வித்திடக்கூடிய, சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் கெடுக்கக்கூடிய இந்த ரதயாத்திரையை தமிழக காவல்துறை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாதென காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக கேட்டுகொள்கிறோம்.

மேலும் காவல்துறையினரின் அனுமதியோடு இந்த ரதயாத்திரை தமிழத்திற்குள் நடத்தப்பட்டாள் ரதயாத்திரை தமிழகத்திற்குள் நுழையும் அந்த நாளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு அனைத்து மதசார்பற்ற சக்திகளும் இணைந்து ரதயாத்திரையை தடுத்து நிறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை