இலங்கை கலவரம் - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கலவர தாக்குதல்!

வன்முறைகளை தடுத்து நிறுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் தர வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இலங்கையில் அம்பாறை, கண்டி, திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பேரினவாதிகள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கால் நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய இன அழிப்புக்கு பின்னால் தற்போது சிங்கள பேரினவாத அமைப்புகள் மூலம் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கலவரத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. முன்னர் ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்ட இனவெறித் தாக்குதலை, தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் சிங்கள பேரினவாத பெளத்த அமைப்புகள்.

காவல்துறை, ராணுவத்தின் முன்னிலையே முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளார். பாதுக்காப்புக்கு நிறுத்தப்பட்ட ராணுவத்தினரின் முன்னிலையிலேயே பெளத்த பேரினவாத புத்த பிக்குகள் கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

குடிபோதையில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் போலி பரப்புரைகள் மூலம் ஞானசார தேரர் போன்ற சிங்கள பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டுள்ளனர். இதன் பின்னணியில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் கொடுங்கரங்கள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் முஸ்லிம்களுக்கு எதிராக அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத பெளத்த அமைப்பான பொதுபல சேனாவினர் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்து தாக்குதலை ஆரம்பித்ததும், அரசு ஊரடங்குச் சட்டம் விதித்து முஸ்லிம் மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்தது. ஆண்கள் பள்ளிவாசலிலும், பெண்களும் குழந்தைகளும் வீடுகளுக்குள் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், ஓர் இடம்கூட விடாமல் தேடிப் பிடித்துத் தாக்கினார்கள் பொதுபல சேனா அமைப்பினர். அந்தத் தாக்குதல்கள் காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்றது. நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது அது போன்றதொரு சூழல் மீண்டும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பிற்கு பிறகு, சிறுபான்மை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சிங்கள பேரினவாதிகள் மூலம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுள்ளன.

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் இத்தகைய கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இனவெறி வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய இலங்கை அரசிற்கு ஐ.நாவும், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் அழுத்தம் தந்து இனவெறி வன்முறைகளை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

1 comment

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை