எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

தடைகளை தகர்த்து, உறுதியுடன் சாதனைகள் பல படைத்திட உறுதியேற்போம்!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா.. என்றான் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மனித உயிரின் கருவறையாய், அன்னையாய், மனைவியாய் திகழ்ந்துகொண்டிருக்கும் அந்த போற்றுதலுக்குரிய பெண்களின் உரிமைகளுக்காக, அவர்களின் மேம்பாட்டிற்காக உலக மகளிர் தினம் மார்ச் 08 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளாகவும், பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் நாளாகவும் கொண்டாடப்படும் இந்த மகளிர் தினத்தில், தடைகளை தகர்த்து, உறுதியுடன் சாதனைகள் பல படைத்திட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண் சமூகத்துக்கும், பெண்களின் உரிமைகளுக்காகவும் உழைக்கின்ற அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு, மகளிருக்கான தினத்தை அறிவித்து நூறு ஆண்டுகளை கடந்த பிறகும் கூட உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், உரிமைகள் மறுப்பும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

தாய் மொழி, தாய்நாடு என பெண்களை பெருமைப்படுத்தும் நமது நாடு பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமை அளிக்கும் விசயத்தில் பின்தங்கி இருப்பதை கள நிகழ்வுகளும், புள்ளிவிவரங்களும் சுட்டிக்காட்டுகின்றன.

கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள், பாலின பாகுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 83 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி நிர்பயா, திருச்சி பர்வீன் சுல்தானா தொடங்கி கடந்த ஆண்டு தமிழகத்தில் நந்தினி, ஹாசினி ஆகியோரின் பாலியல் வன்கொலைகள் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய நிலையில், இந்த ஆண்டும் விழுப்புரம் ஆராயி மற்றும் அவரது 14 வயது மகளுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் ஆகியன பெண்களுக்கு இன்னும் போதிய பாதுகாப்பை உறுதி செய்யாத நிலையில் தான் நாடு உள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

அதிகார வர்க்கத்திற்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண் செயற்பாட்டாளர்கள் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றன. அதேபோன்று பெண்களுக்கான உரிமைகள், அது அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்த தனிமனித உரிமைகளாக இருந்தாலும் கூட அது ஆட்சியாளர்களாலும், நீதிமன்றத்தாலும் மறுக்கப்படும் மோசமான சூழல் தற்போது நாட்டில் நிலவுகிறது. கேரள மருத்துவ மாணவி ஹாதியா விவகாரத்தில் அது வெளிப்படையாக தெரிந்தது.

நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில் பெண்களின் பங்கு உலக சராசரி 23.5 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் அது 11.8 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது, அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ ஆகியவற்றை விட கிட்டத்தட்ட சரிபாதிக்கு கீழான நிலையாகும்.

ஆகவே, இந்த நிலையை மாற்றி பெண்களுக்கு உரிய பாதுகாப்பை, அவர்களுக்குரிய உரிமையை நிலைநாட்டிட அனைவரும் இந்த மகளிர் தினத்தில் சூளுரைப்போம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை