காவிரி மேலான்மை வாரியத்தை தாமதமின்றி மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்!-கர்நாடகாவின் எதிர்ப்பை புறக்கணிக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இன்று(20.02.2018) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் எஸ்.அமீர் ஹம்ஸா, அச.உமர் ஃபாரூக், ரத்தினம் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் ஆகியோர் உடனிருந்தனர்.
 
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறியதாவது:-
 
தமிழர் படுகொலை;
 
ஆந்திர அரசு செம்மரக்கடதலில் ஈடுபட்டார்கள் என்று கூறி தமிழர்களை தொடர்ந்து சித்திரவதை செய்வது படுகொலை செய்வதை வழக்கமாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அதற்கு எந்த நீதியும் கிடைக்காத நிலையில் இப்போது ஐந்து தமிழர்களுடைய உடல் ஆந்திரா மாநிலம் கடப்பா அருகேயுள்ள ஓண்டிமிட்டா ஏரியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. உடனைடியாக இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். ஆந்திர மாநில காவல்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை மேலும் எவ்வளவு நபர்கள் இறந்திருக்கிறார்கள் என ஓண்டிமிட்டா ஏரி முழுவதும் சோதனை நடத்தப்பட வேண்டும். இன்னும் எத்தனை நபர்கள் இறந்துள்ளார்கள் என்பது கண்டெடுக்கப்பட வேண்டும் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு நீரில் முழ்கடிக்கப்பட்டு கொலை செய்திருப்பார்களோ என்று அச்சம் உருவாகியிருக்கிறது. எனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களை ஆந்திர மாநில காவல்துறை விசாரிப்பது என்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே அதை தமிழக அரசு இறந்து கண்டெடுக்கப்பட்ட அந்த உடல்களை ஆந்திர மாநில மருத்துவர் குழுவோடு விசாரிப்பதற்காக கண்டெடுக்கப்பட்ட உடல்களை பரிசீலனை செய்வதற்காக தமிழக அரசு ஒரு மருத்துவக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு இதை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதோடு இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழர்கள் அண்டை மாநிலங்களுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் தமிழக மாணவர்கள் மற்றும் தமிழக ஊழியரின் உயிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
 
காவிரி வழக்கு;
 
காவிரி வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக விவாதிப்பதற்காக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறது ஏற்கனவே எஸ்.டி.பி.ஐ. சார்பாகவும் இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருந்தோம். எனவே, தமிழக அரசு கூட்ட இருக்கும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
 
சிறைவாசிகள் விடுதலை;
 
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்றிருந்தோம். ஆனால் இப்போது பா.ஜ.க. தலைவர்களுடைய அழுத்தத்தினால் முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படும் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. எனவே, தமிழக அரசு விடுதலைக்கு தகுதியானவர்களை மத பாகுபாடு இல்லாமல் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறோம். அரசானைக்கு உட்பட்டு யாரெல்லாம் விடுதலைக்கு தகுதியானவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
 
கமல் அரசியல் பிரவேசம்;
 
நடிகர் கமல்காசன் அவர்கள் இராமேஸ்வரத்தில் தனது அரசியல் கட்சி குறித்தான அறிவிப்பை நாளை(பிப்.21) வெளியிட இருக்கிறார். தமிழக அரசியலில் களமாட இருக்கும் அவருக்கு புதிய கட்சியை துவங்க இருக்கும் அவருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த நாட்டில் ஊழலை விட மதவெறி கொடூரமானது, மிகக்கொடியது, ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கக்கூடியது என்பதை கவனத்தில் கொண்டு தனது கட்சியின் கொள்கைகளை மதவெறிக்கு எதிரான கொள்கைகளாக அவர் அமைத்திடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அதை போன்று இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூக மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் குறித்தான விஷயங்களை உள்ளடக்கியதாக அவரது கட்சியின் கொள்கைகளை உருவாக்குவார் என்று நாங்கள் நம்புகிறோம். அதை பொறுத்து நாங்கள் அவரை ஆதரிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வோம்.
 
தோல்வியில் மோடி அரசு;
 
மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் இந்த நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டிடுவோம் என்றெல்லாம் பேசினார்கள். அதை பொறுத்து மக்கள் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார்கள். ஆனால் இந்த அரசு அமைந்ததற்கு பிறகு கருப்பு பணத்தை மீட்பதில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் இந்த நாட்டின் பணம் கொள்ளை போகும் சூழல் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் மல்லையாவையும், லலித் மோடியையும், ரோட்டா மேக் பேனா கம்பெனி உரிமையாளர் விக்ரம் கோதாரி 3 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்து தப்பவிட்ட இந்த அரசு தற்போது நீரவ் மோடி சுமார் 13,250 கோடி ரூபாய் அளவிற்கு வங்கியில் மிகப்பெரிய மோசடியை செய்துவிட்டு அவர் வெளிநாட்டிற்கு தப்பி இருக்கிறார். எனவே, இந்த அரசு மோசடி கும்பலுக்கு துணை போகும் ஒரு அரசாகவும், பொருளாதாரத்தில் ஏற்றம் கொள்ள தெரியாத ஒரு அரசாகவும் இன்று பா.ஜ.க. அரசு செயலிலந்துள்ளது.
 
இராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் தோல்வியடைந்த இந்த பா.ஜ.க. அரசு தற்போது குஜராத்தில் நடைபெற்றுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும், மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். அதை பயன்படுத்தும் விதத்தில் அனைத்து மதசாற்பற்ற சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
 
காவிரி மேலான்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும்;
 
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆறு வாரத்திற்குள்ளாக காவிரி மேலான்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். கர்நாடக அரசின் எதிர்ப்பின் காரணமாக தாமதப்படுத்தவோ, மேலான்மை வாரியம் அமைக்காமல் அலட்சியம் செய்யவோ மத்திய அரசு முயற்சிக்கக்கூடாது. கர்நாடக சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு இந்த விஷயத்தில் கர்நாடகத்தின் அழுத்தத்திற்கு ஆளாகாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை விரைந்து நிறைவேற்றி காவிரி மேலான்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை