தமிழக அரசின் பேருந்து கட்டண குறைப்பு அறிவிப்பு! கண்துடைப்பு நடவடிக்கை

தமிழக அரசின் பேருந்து கட்டண குறைப்பு அறிவிப்பு! கண்துடைப்பு நடவடிக்கை! - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு 


இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

போக்குவரத்து கழகத்தின் செலவீனங்களால் ஏற்படும் நஷ்டத்தையும், ஊழியர்களின் ஊதிய உயர்வையும் காரணமாக கூறி, 20 முதல் 60 சதவீதம் அளவுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எதிர்கட்சிகளின் எதிர்ப்பு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக, கி.மீ-க்கு 2 முதல் 5 பைசா கட்டண குறைப்பையும், ஸ்டேஜூக்கு ரூ. 1-ம் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த கட்டண குறைப்பு நடவடிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாவே உள்ளது.

பேருந்து கட்டணத்தை 20 முதல் 60 சதவீதம் வரை உயர்த்திவிட்டு கிலோ மீட்டருக்கு வெறும் 2 முதல் 5 பைசா அளவில் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. டீசல் விலை உயர்வு, பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களுக்காக பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற நியாயமான காரணத்தை அரசு முன்வைத்தாலும், அதற்காக நியாயமான முறையில், பொதுமக்களை பாதிக்காத வகையில் கட்டண உயர்வை அமல்படுத்தாமல், ஒரேயடியாக 60 சதவீத உயர்வு என்பது பொதுமக்களின் சுமையை மேலும் அதிகப்படுத்தவே செய்யும்.

இந்நிலையில், மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஸ்டேஜூக்கு ரூ. 1 ம், கிலோ மீட்டருக்கு 2,5 பைசா கட்டண குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது. குறைந்தபட்சம் உயர்த்தப்பட்ட கட்டணத்தில் பாதியளவாவது குறைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே, கார்ப்பரேட் நலனுக்காக செயல்படும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளால் நாள்தோறும் அதிகரித்து வரும், டீசல்-பெட்ரோல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி தாறுமாறாக உயர்ந்து மக்களை வாட்டிவரும் நிலையில், தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வும் மக்களை மேலும் சொல்லொண்ணா துயருக்கு ஆளாக்கி வருகின்றது. ஆகவே, தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை மீண்டும் மறுபரிசீலனை செய்து உயர்த்தப்பட்ட கட்டணத்தில் 50 சதவீத அளவாவது குறைத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை