காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்

சுற்றுச்சூழல் மாசுபாடு: காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வலியுறுத்தல் 

நலிவடைந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாகை மாவட்டம் நாகூருக்கு சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்களுக்கு நாகை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக சிறப்பான வரவேற்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே.நிஜாம் முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி; “காரைக்காலில் இருக்கும் தனியார் துறைமுகமான மார்க் பாதுகாப்பற்ற முறையில் நிலக்கரியை இறக்குமதி செய்யும் காரணத்தினால், தொடர்ந்து பல ஆண்டுகளாக நாகூர், நாகப்பட்டினம், காரைக்கால் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் லட்சோப லட்சம் மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசுபாடு பாதிப்பு காரணமாக மிகப்பெரிய விளைவுகளை சந்தித்து வருகிறார்கள்.

தொடர்ந்து இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்டிட நடவடிக்கை எடுத்திட வேண்டும், காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை தடை செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகமோ, புதுவை மாநில அரசோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசினுடைய இந்த அலட்சிய போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொள்ளும். தேவைப்பட்டால் இந்த துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னெடுக்கும்.

பேருந்து கட்டண உயர்வு மூலம் நடுத்தர மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் மிகப்பெரிய சம்மட்டி அடியை தமிழக அரசும், புதுவை அரசும் மக்களுக்கு கொடுத்துள்ளது. உடனடியாக இந்த கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி எதிர்வரும் 30 ஆம் தேதி தமிழக முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியோடு நடத்துகிற இந்த போராட்டங்களை தமிழக அரசு கண்டும் காணாமலும் இருப்பது கண்டனத்துக்குரியது. இனியும் தமிழக மற்றும் புதுவை அரசினுடைய அலட்சியம் தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் வலிமையான தொடர் போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நாகை மாவட்ட தலைவர் அக்பர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கரைக்காலுக்கு சென்ற எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர், அங்கு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை