எழுத்தாளர் ஞாநி மறைவு; எஸ்.டி.பி.ஐ. கட்சி இரங்கல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; மூத்த பத்திரிக்கையாளர் ஞாநி அவர்கள் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமடைகின்றேன். ஞாநி அவர்களின் மறைவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர் ஞாநி அவர்கள்.

ஆனந்த விகடனில் எழுதிவந்த ‘ஒ பக்கங்கள்’ வாயிலாக அரசியல் விமர்சனங்களை எவ்வித சமரசமுமின்றி வெளிப்படுத்தியவர். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர். நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக சாமியார் அசீமானந்தா காரவன் இதழுக்கு அளித்த நேர்காணலை தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட்டதோடு, இந்துத்துவ அரசியலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவருடைய கடைசி முகநூல் பதிவு கூட இந்துத்துவா குறித்த எச்சரிக்கை பதிவாகவே இருப்பதை காண முடிகிறது.

அவருடைய இழப்பு எழுத்துலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அன்னாரின் மறைவால், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவருடைய வாசகர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை