முத்தாக் சட்ட மசோதா; திமுக செயல் தலைவருடன் இஸ்லாமிய தலைவர்கள் சந்திப்பு

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் SDPI மாநில தலைவர் மற்றும் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் சந்திப்பு! - முத்தாலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டுகோள்!

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ‘முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் - 2017’ என்ற பெயரில், முஸ்லிம் ஆண்களை கிரிமினல் குற்றவாளியாக்கும் வகையிலும், முஸ்லிம்களின் தனியார் சிவில் சட்டத்தில் நுழையும் வகையில் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றியிருந்த நிலையில், அந்த சட்டம் இன்று மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு கொண்டுவரப்படுகிறது.

​​​​
மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக கொண்டுவரப்படும் இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களித்து, அதனை தோற்கடிக்க வேண்டும் என்று ஏற்கனவே SDPI மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி உள்பட பல்வேறு இஸ்லாமிய சமுதாய தலைவர்களும் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியிருந்த நிலையில், இன்று தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று காலை 12:00 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, முத்தலாக் மசோதாவிற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

அப்போது, முத்தலாக் சட்டத்தினால் ஏற்படுகிற பாதிப்புகள், அந்த சட்டத்தை கொண்டுவருவதற்கான தீய நோக்கங்கள் குறித்து தெளிவாக மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விளக்கி, இந்த சட்டத்தை எதிர்த்து கருத்து தெரிவிப்பது மட்டுமல்லாமல், அதைத்தாண்டி இந்த சட்டத்தை முழுமையாக எதிர்த்து, அனைத்து எதிர்கட்சிகளுடன் சேர்ந்து தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டர். முஸ்லிம் சமுதாய தலைவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களவையில் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட போது திமுக அதற்கு எதிராக மேற்கொண்ட நிலைபாட்டை சுட்டிக்காட்டியதோடு, மாநிலங்களவையில் அதற்கு எதிரான நிலைப்பாட்டை நிச்சயம் தி.மு.கழகம் எடுக்கும் என உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது ஷரியத் பாதுகாப்பு பேரவை தலைவர் மெளலானா அலாவுதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத் தலைவர் சேக் முகமது அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது, முஸ்லிம் தொண்டு இயக்கத் தலைவர் மன்சூர் ஹாஜியார், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் அய்யூப் கான், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஷம்சுதீன், இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச் செயலாளர் ஷாஜஹான், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் தமிழ் மாநில தலைவர் மெளலானா செய்யது முகமது ஷரீஃப், அப்பல்லோ ஹனிபா மற்றும் எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர் அ.ச.உமர் ஃபாரூக் ஆகியோர் உடனிருந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை