புதுவையில் முஸ்லிம்களின் இரட்டை கோரிக்கையை வலியுறுத்தி, புதுவை சட்டமன்றம் நோக்கி பேரணி மற்றும் பொதுகூட்டம்

புதுவை மாநிலத்தில் அரசு பணிகளுக்கு, முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 2% தில் இருந்து 5% ஆக உயர்த்தித்தர கோரியும் குரூப்-‘B’ NON GAZETTED பணியிடங்களில் முஸ்லிம்கள், வன்னியர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர்களின் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த கோரியும், கடந்த ஒரு வார காலமாக தொடர் பிரச்சாரங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி செய்துவருகின்றது. அதில் தெருமுனை கூட்டம், நோட்டீஸ் பிரச்சாரம், ஜமாத் சந்திப்பு நிகழ்ச்சி, பத்திரிகையாளர் சந்திப்பு, முக்கியஸ்தர்கள் சந்திப்பு, என பல்வேறு வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் இறுதியாக இன்று (14.11.2017) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் புதுச்சேரி சுதேசி காட்டன் மில் அருகில் துவங்கி புதுவை சட்டமன்றம் வரை பேரணியும், அதனை தொடர்ந்து தலைமை தபால் நிலையம் அருகில் பொதுக்கூட்டமும் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.

இப்பேரணியை கட்சியின் மாநில துணைத்தலைவர் எ.அம்ஜத் பாஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியின் இறுதியில் கட்சியின் மாநில செயலாளர் எ.அமீர் ஹம்ஸா, மாஹி மாவட்ட துணைத்தலைவர் சி.கே. உமர் மாஸ்டர் , புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி M.முஹம்மது மூஸா மன்பஈ, புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். இந்நிகழ்விற்கு கட்சியின் மாநில செயலாளர் ஜி.அப்துல் சத்தார் வரவேற்புரையாற்ற, மவ்லவி என்.எம்.கலீலுர் ரஹ்மான் காஷிஃபி (புதுச்சேரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் எம்.ஒய்.அப்துல் கரீம், கடலூர் மாவட்ட பொதுச்செயலாளர் எ.ஹமீத் ஃப்ரோஜ், எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஆர்.நஜீர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதுவை மாவட்ட தலைவர் பி.அப்துல்லா தொகுத்து வழங்கினார்கள்.


இறுதியாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் காரைக்கால் மாவட்ட தலைவர் எச்.முஹம்மத் பிலால் நன்றி கூறினார். கட்சியின் புதுச்சேரி, காரைக்கால், மாஹி மாவட்ட தொண்டர்களும் ஜமாஅத்தார்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். பேரணியின் இறுதியில் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு திரு.வி.நாராயணசாமி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை