தேசிய செய்திகள்

1992 டிசம்பர்,6 அன்று பல நூற்றாண்டுகால பாபரி மஸ்ஜிதை ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சிந்தனை கொண்ட சங்பரிவார கும்பல், சட்டத்துக்கு புறம்பாக இடித்து தரைமட்டமாக்கியது. ஆனால் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 24 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்
அஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.
பாபரி மஸ்ஜித் இடித்த குற்றவாளிகளை கைது செய், பாபரி இருந்த இடத்தில் திரும்ப கட்டு, நீதிமன்ற வழக்கை விரைந்து முடி என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தேசம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக டிசம்பர் 06 அன்று பாபரி நீதி தேடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள கஜூரி எனும் இடத்தில் தேசிய தலைவர் ஏ.சயீத் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் வழக்கறிஞர் சர்புதீன் அகமது கலந்து கொண்டார்கள்.இந்த பொதுக்கூட்டத்திற்கு டெல்லி காவல் துறையின் நெருக்கடிகள் பலவிதங்களில் இருந்தாலும் இந்தியாவின் மதசார்பின்மையை நிலை நிறுத்த கடும் குளிரை கூட எதிர்பாராமல் கட்சியினுடைய தொண்டர்களும், பொது மக்களும் ஏராளமானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் அப்பாவி குழந்தைகள் பெண்கள் என தன் நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் பஷர் அல் ஆசாத் அரசினை கண்டித்து டெல்லி சிரிய தூதரகம் SDPI முற்றுகையிட்டது.
நாட்டின் 68-வது குடியரசு தினத்தை நாடு முழுவதும் மக்கள் சிறப்பாக கொண்டாடிவரும் வேளையில் SDPI கட்சி சார்பாக டெல்லி, நிஜாமுத்தீன் சாலையில் உள்ள #SDPI கட்சியின் தேசிய தலைமையகத்தில் தேசிய பொதுச் செயலாளர் ஃபைஜி தலைமையில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. உடன் தேசிய செயற்குழு உறுப்பினர் அஸ்லம் அகமது, தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் ரயீஸ் அகமது சித்தீக், சமீர், தானிஸ், சலீம் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் இருந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை