தேசிய செய்திகள்

பசு குண்டர்கள் அடித்துக் கொல்வதற்கு எதிரான மக்கள் பரப்புரையை நாடு முழுவதும் ஒரு மாத காலம் நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டது. அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 01 அன்று ஜெய்ப்பூர் நகரில் மாபெரும் மக்கள் பேரணியை நடத்தி மக்கள் பரப்புரையை நாடு முழுவதும் துவக்கியது (இந்த மக்கள் பரப்புரை ஆகஸ்ட் 01 முதல் 25, 2017 வரை தேசம் முழுவதும் நடத்தப்படுகிறது). இந்த துவக்க நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ. சயீத், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரிய உறுப்பினரும், புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்கஅறிஞருமான கலீலுல் ரஹ்மான் சஜ்ஜாத் நுஃமானி, மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் பி.ஜி. கொல்சே பட்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் சஜாஹத் புனவாலா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் சர்ஃபுதீன் அஹமது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகமது ஷஃபி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந்தியா ஒரு குடியரசு என்பதில் இருந்து அடித்து கொல்லும் தேசமாக மாறிவருவதை நாம் கண் கூடாக காண்கிறோம். பசு பாதுகாவலர் என்று தங்களை அழைத்து கொள்பவர்கள் அடித்துக் கொல்லுதல் என்பதை உருவாக்கி ”பசுவினால், பசுக்காக” என்று முஸ்லிம்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினரை தாக்கி படுகொலை செய்து வருகிறார்கள். மத்திய மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளின் துணையோடு, இந்த பசு பயங்கரவாதிகள் பல அப்பாவிகளைக் கொன்று, நூற்றுக்கணக்கான குடும்பங்களை அழித்து விட்டார்கள்.
பீகார் சட்டசபையை கலைத்துவிட்டு அங்கு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; பீகாரில் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்துவிட்டு, தனது விசுவாசத்தை மகா கூட்டணியில் இருந்து விலக்கிக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காட்டியிருப்பது, பீகார் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. எனவே, பீகார் சட்டசபையை கலைத்துவிட்டு பீகார் மக்களின் தெளிவான தீர்ப்பை மீண்டும் பெறும் வகையில் அங்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணத்தில் இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் பேருந்தில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியாகியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி நடைபெற்றுள்ள இச்சம்பவத்திற்க்கு SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய அவர், யாத்திரையை வழிநடத்திச் சென்ற ஆபரேட்டர் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் சென்றதே இத்தகைய பயங்கரவாத தாக்குதல் நடைபெற முக்கிய காரணமாகும் என்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் காஷ்மீர் மக்கள் உடனடியாக உதவிக்கரம் நீட்டியது பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களையோ, அதிகாரிகளையோ எந்த வகையிலும் சந்திக்காமல் இஸ்ரேலுக்கு மட்டும் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அதோடு இஸ்ரேலுடன் இந்தியா மேற்கொள்ளும் கவலையளிக்கும் உறவினால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சி எச்சரிக்கை செய்திருக்கிறது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; மேற்கு கரையிலும், காஸா பகுதியிலும் சர்வதேச அகதிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் தேசிய பிரச்சனையை உதாசீனம் செய்துவிட்டு, இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு முதன்முறையாக செல்லும் விஜயத்தை பிரதமர் மோடி மேற்கொண்டிருப்பது கவலையளிக்கிறது. பாலஸ்தீன மண்ணில் பிரதமர் மோடி கால்பதித்த போது, அங்கு இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கையால் பரிதவிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வகுடி மக்களின் மனம் புண்பட்டிருக்கும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கொலைகாரர்களுடன் தற்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதற்கு முன்பு 3 இந்திய தலைவர்கள் மேற்கொண்ட பயணம் போல் அல்லாமல், பாலஸ்தீனத்தை தவிர்த்துவிட்டு இஸ்ரேலுக்கு மட்டும் பிரதமர் மோடி விஜயம் செய்துள்ளார். பாலஸ்தீனியர்களை மோடி சந்திதிருந்தால் காலங்காலமாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் விரிவாக்க மனப்பான்மைக்கு எதிராக ஒரு செய்தியை விடுத்ததாக அது அமைந்திருக்கும். பாலஸ்தீனியர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக மேற்கு நாடுகள் பலவீனமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனியர்கள் நிரந்தர நாடோடிகளாகவே வாழவேண்டும் என்பதே இஸ்ரேலின் விருப்பம். இந்நிலையில் இஸ்ரேலுடனான இந்திய உறவு, தேச பாதுகாப்பும், பொதுமக்கள் அங்கீகாரமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. பதற்றமான எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் நடப்பதை தடுக்க, இஸ்ரேலிடமிருந்து தானாகவே துப்பாக்கிகளுடன் இயங்கும் கண்காணிப்பு அமைப்பை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அத்தகைய கண்காணிப்பு முறைகளை நிறுவிதான் பாலஸ்தீனில் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளும் நிலை அங்கே உள்ளது. அந்த மாதிரியான ஒரு கண்காணிப்பு பாதுகாப்பு அமைப்பை, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக, அவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இஸ்ரேல் செய்து வருகின்றது. இப்படியாக இஸ்ரேலுடன் இந்தியா மேற்கொள்ளும் கவலையளிக்கும் உறவில் உள்ள அபாயத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அத்தகைய பாதுகாப்பு முறையை இந்திய அரசும் மேற்கொள்வதாக இருந்தால் அது இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே அமையும். மேற்கண்டவாறு எஸ். டி.பி.ஐ. தேசிய தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக பரவிவரும் வன்முறையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களை வழங்குவது அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சையத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “பாஜக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து ஒற்றை பண்பாட்டுக் கலாச்சாரத்தை ஏற்படுத்த இந்துத்துவா தீவிரவாத குழுக்கள் வன்முறையை நடத்தி வருகின்றன. மூத்த பாஜக தலைவர்கள், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பல்வேறு சங்க்பரிவார் அமைப்பின் தலைவர்கள் துவேசத்தின் அடிப்படையிலான குற்றங்களைச் செய்ய தூண்டி வருகிறார்கள். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதியாமல், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இதுபோன்ற வன்முறைகளை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும். முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் ஜூன் 23 அன்று, 16 வயது முஸ்லிம் சிறுவன் ஹாஃபிழ் ஜூனைத் கொல்லப்பட்டது கொடூரமானதாகும். அவனும் இன்னும் 4 பேர்களும், ஈத் பண்டிகைக்காக டெல்லியில் பொருட்களை வாங்கிக்கொண்டு மதுரா சென்றுகொண்டிருந்த ரயிலில் பயணம் செய்தபோது, வன்முறையாளர்களால் தாக்கப்பட்டனர். சிறுவன் ஜூனைத் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். மற்றவர்கள் காயமடைந்தனர். தாக்கியவர்கள் அவர்களை திரும்ப திரும்ப தேசவிரோதிகள், மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று திட்டி அவர்கள் அணிந்திருந்த தொப்பிகளை கீழே வீசி, தாடியைப் பிடித்து இழுத்து முல்லாக்கள் என்று கேலி செய்து கடைசியில் கத்தியால் தாக்கி இருக்கிறார்கள். அதற்கு முந்தைய தினம், அதாவது ஜூன் 22 அன்று, உத்தரபிரதேச மாநிலம் மவு மாவட்டத்தில் உள்ள நஸீர்பூர் கிராமத்தில் 70 வயது மவுலவி முகமது யூனுஸ் என்பவர் ஒரு மஸ்ஜிதில் தொழுகை நடத்திவிட்டு வெளியே வந்தபோது, இனம் தெரியாத 4 பேர் அவரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.ஜூன் 17 அன்று ஹரியானா மாநிலம் சோனேபட் ராசொய் கிராமத்தில், 56 வயது ஷபிர் அகமது தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பசு பாதுகாவலர்கள் என்று தங்களுக்கு தாங்களே பெயர் சூட்டிக்கொள்ளும் நபர்கள் பொது மக்களை கொலை செய்து, சிறுபான்மை இனத்தவர்களை பயமுறுத்தி வருகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரபிரதேசத்தில், தாத்ரி என்ற இடத்தில், 60 வயது முகமது அக்லாக் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து அது மாதிரியான தாக்குதல் சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.பசு பாதுகாவலர்கள் கையில் லைசென்ஸ் இருப்பது போல், முஸ்லிம்களை கேவலப்படுத்துவதும், தாக்குவதும், திருடுவதும், கொலை செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் இது நடக்கிறது. காஷ்மீரைச் சேர்ந்த லாரி டிரைவர் ஷாஹித் அஹமது, ஷஹான்பூர் நுமன், ஜார்க்கண்டை சேர்ந்த மஸ்லூம் அன்சாரி, இம்தியாஸ் கான், ஹரியானாவை சேர்ந்த முஸ்தன் அப்பாஸ், ராஜஸ்தான் ஆல்வாரைச் சேர்ந்த பெஹ்லுகான், மேற்குவங்கத்தைச் சேர்ந்த முகமது நஸீருல் ஹக், முகமது ஷமீருதீன் மற்றும் முகமது நஸீர் ஆகியோர் பசு பாதுகாவல் குண்டர்களால் கொலை செய்யப்பட்டவர்களில் சிலராகும்.கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் மடிக்கேரியை சேர்ந்த ரியாஸ் மவுலவி என்பவர், கேரளாவில் காசர்கோட்டில் ஜூம்மா மஸ்ஜிதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் மார்ச் 20 அன்று கொலை செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் அம்ன்ஜே கிளை எஸ்.டி.பி.ஐ. தலைவரும், ஆட்டோ டிரைவருமான 35 வயது அஷ்ரப் தனது ஆட்டோவில் நண்பர் சீனாப்பா பூஜாரியுடன் சென்றபோது, 6 ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கலாயி கிராமத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிறுவன நாள் விழாவில் பங்கேற்றிருக்கிறார். கடந்த ஜூன் 16 அன்று ராஜஸ்தானில் 55 வயது ஜாகீர் உசேன் என்பவர் நகர்மன்ற பணியாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். சமூக ஆர்வலரான அவர் பிரதாப்கர் நகரில் உள்ள கச்சி பகுதியில் மஹ்தாப் ஷா காலனியைச் சேர்ந்தவர். பொது இடத்தில் மல-ஜலம் கழிக்கும் பெண்களை அவமானப்படுத்தும் வகையில், அவர்களை புகைப்படம் எடுத்தவர்களை தடுத்தபோது நகர்மன்ற ஊழியர்களால் அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இப்படி இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம்களுக்கு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க அரசுக்கு தார்மீக கடமை இருக்கிறது என்றார்.
கர்நாடக மாநிலம் தெற்கு கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பந்த்வால் பகுதியில் சமூகப் போராளி அஷ்ரஃப் கலாய் படுகொலை செய்யப்பட்டதற்கு கர்நாடக மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் SDPI கட்சியின் சார்பில் பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி SDPI கட்சி ராஜஸ்தான் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது.
டெல்லியில் SDPI கட்சியின் சார்பாக தேசிய தலைவர் எ. சயீத் அவர்கள் தலைமையில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை