தேசிய செய்திகள்

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், இனப்படுகொலையை உலக நாடுகள் தடுத்து நிறுத்தக்கோரியும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இந்தியா அபயம் அளிக்கவும், மியான்மர் மீது உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் SDPI கட்சியின் சார்பில் இன்று (07.09.2017) புது டெல்லியில் உள்ள மியான்மர் தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பெங்களூருவில் புகழ்பெற்ற போராளி கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், இப்படுகொலைக்கு காரணமான கொலையாளிகள் மற்றும் சதிகாரர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் டெல்லி இந்தியா கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் SDPI கட்சியின் சார்பில் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர். சர்ஃபுதீன் அஹமது உள்ளிட்ட டெல்லி மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
பெங்களூருவில் புகழ்பெற்ற போராளி கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், இப்படுகொலைக்கு காரணமான கொலையாளிகள் மற்றும் சதிகாரர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கர்நாடக மாநில SDPI கட்சியின் சார்பில் நீதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோணங்களில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் மாபெரும் மக்கள் திரள் பேரணி
ஆகஸ்ட் 01 முதல் 25 வரை தேசம் தழுவிய அளவில் நடைபெறும் இந்தியாவை அடித்துக் கொல்லாதே! வீட்டை விட்டு வெளியில் வந்து போராடு என்ற மக்கள் பிரச்சாரத்தின் மாபெரும் மக்கள் திரள் கூட்டம் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத், இஸ்லாம்பூரில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம் ரைச்சூர் மகிலாமந்தல் மைதானத்தில் நடைபெற்ற ‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் கர்நாடக மாநில தலைவர் அப்துல் ஹன்னான் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
கேரள மாநிலம் கொல்லம் சடையமங்கலத்தில் நடைபெற்ற ‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணி-பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பசுகுண்டர்கள் நிகழ்த்தும் அப்பாவிகள் படுகொலைகள் குறித்தும், அதற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் விழித்தெழ வேண்டிய அவசியம் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
இந்தியாவை அடித்துக் கொல்லாதே! என்ற முழக்கத்துடன் SDPI கட்சியின் தேசிய பரப்புரையின் ஒருபகுதியாக கர்நாடக மாநிலம் #மைசூரில் கொட்டும் மழையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவை அடித்துக் கொல்லாதே! என்ற முழக்கத்துடன் SDPI கட்சியின் தேசிய பரப்புரையின் ஒருபகுதியாக உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் தேசியத் தலைவர் எ.சயீத், ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் தேசியப் பொருளாளர் மெளலானா உஸ்மான் பெய்க் ரஷாதி, முன்னாள் எம்.பி. ஷஃபீக்குர்ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோவை ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடகா மாநிலம் குல்பராவில் நடைபெற்ற இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் SDPI தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் முகமது தும்பே
கேரள மாநிலம் காசர்கோட்டில் நடைபெற்ற ‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணி-பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பசுகுண்டர்கள் நிகழ்த்தும் அப்பாவிகள் படுகொலைகள் குறித்தும், அதற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் விழித்தெழ வேண்டிய அவசியம் குறித்தும் உரை நிகழ்த்தினார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை