தலித் தலைவர் ஆஸாத்தை விடுதலை செய்ய வலியுறுத்தி மாபெரும் போராட்டம்

உத்திரபிரதேசத்தில் பீம் சேனை தலைவரும், தலித் போராளியுமான சந்திர சேகர ஆஸாத்தை, தேசிய பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் உ.பி. அரசு கைது செய்து, சிறையில் அடைத்திருப்பதைக் கண்டித்து புதுடெல்லி மூர்த்தையாலில் இருந்து உ.பி. பவன் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் ஆஸாத்தை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திய எஸ்.டி.பி.ஐ தலைவர்கள், அவரை சிறையில் அடைத்திருப்பது யோகி தலைமையிலான பாஜக அரசின் சதித்திட்டம் என்றும், எதிர் குரல்களை நசுக்கும் நடவடிக்கை என்றும் அம்மாநிலத்தில் தலித்களின் எழுச்சியை ஒடுக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டினார்கள்.

நீதிமன்ற ஆணையையும் மீறி, சந்திர சேகர் ஆஸாத் மீது உ.பி. அரசு தேசிய பாதுகப்பு சட்டத்தை சுமத்தி இருக்கிறது என்றும் உயர்நீதிமன்றத்தின் ஆணையின் உண்மை தன்மைக்கு மாறாகவும், அவரது தனி மனித உரிமைகள் மற்றும் சட்டப்பாதுகாப்பை மீறியும் உ.பி. அரசு செயல்படுவதுதான் என எஸ்.டி.பி.ஐ. தலைவர்கள் கூறினார்கள்.

தலித் சமுதாயத்தில் இருந்து எழும் எதிர் குரலை நசுக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை உ.பி. அரசு செய்லபடுத்தி இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. வன்மையாக கண்டனம் தெரிவித்தது.

உ.பி. மாநிலத்தில் அடக்கு முறையை எதிர்க்கும் தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்குவதற்காக யோகி ஆதித்யநாத் தலைமையில் உள்ள பாஜக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என்று எஸ்.டி.பி.ஐ. குற்றம் சாட்டியது. அலகாபாத் உயர்நீதிமன்றம் சந்திர சேகர ஆஸாத்துக்கு ஜாமீன் வழங்கி இருந்தும், அதை மீறி கருப்புச்சட்டத்தை உ.பி. அரசு பிரயோகித்துள்ளது. சந்திர சேகர ஆஸாத் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாடுகள் பொய்யான புனையப்பட்டவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

பேரணியின் முடிவில் உ.பி. பவனில் உள்ள அதிகாரியிடம் எஸ்.டி.பி.ஐ கட்சி தலைமை ஒரு மனுவை வழங்கியது. உ.பி. ஆளுநருக்கு அனுப்பட வேண்டிய அந்த மனுவில் இந்த விவகாரத்தில் தலையிட்டு தலித் போராளி சந்திர சேகர ஆஸாத் மீது உ.பி. அரசு தேசிய பாதுகாப்பு சட்டப்படி எடுத்திருக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். பல்வேறு முக்கிய அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் அஹமது தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களான இலியாஸ் முஹம்மது தும்பே, முஹம்மது ஷஃபி, கட்சியின் டெல்லி பொறுப்பாளர் டாக்டர். நிஜாமுதீன் கான், உத்திரபிரதேச மாநில தலைவர் முஹம்மது காமில், டெல்லி மாநில கமிட்டி உறுப்பினர் மனோஜ் குமார், வித்ரோகி ஜனசத்தா கட்சியின் நிறுவனத்தலைவர் அஷோக் பார்தி, மூத்த சமூக மற்றும் அரசியல் ஆர்வலர் டாக்டர். தஸ்லீம் ரஹ்மானி, முன்னாள் வருமான வரித்துறை கமிஷனர் ஆர்.பி. பாண்டியா உள்பட பல பிரமுகர்களும் பேரணியில் பங்கேற்றார்கள்.   

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை