”அயோத்தியா அரசியல் சதுரங்கத்தில் ஒரு காய்” புத்தகம் வெளியீடு

மதவாதம் தலை தூக்கி, அதனால் வன்முறை வெடிக்கும் வேலையில், தேச பக்தர்களும், மனித மாண்பை மதிப்பவர்களும் கைகோர்த்து, சமூக ஒற்றுமையையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளையும், பலப்படுத்துவது கடமையாகிறது. அயோத்தியை பொறுத்தவரை, உண்மைக்கு மாறாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பறைசாற்றுவதில் வாழும் எடுத்துக்காட்டாக திகழ்வது அயோத்தியா தான்.

அயோத்தியாவில் மிகப்பெரிய அடக்கஸ்தலங்கள் மற்றும் முஸ்லிம் சூஃபி மார்க்க அறிஞர்களின் தர்காக்கள் ஆகியவை இடம் பெற்று, அயோத்தியை வளர்ச்சியடைய செய்வதில் முஸ்லிம்களின் பங்கை சாட்சிபடுத்துகின்றன. அயோத்தியில் ஜெயின் கோவில்கள், புத்த விகாரங்கள் மற்றும் குர்துவாக்கள் இடம் பெற்றிருப்பது அயோத்தி பல மதங்களை வரவேற்று வாழ செய்திருப்பதை வெளிப்படுத்துகிறது. அதோடு சனாதன மதத்தினரின் புனித சுற்றுலா ஸ்தலங்களாகவும் விளங்கி வருகிறது. மேற்கொண்டு அது ஜெயின், இஸ்லாம், புத்தம் மற்றும் சீக்கிய மதத்தினரால் புனித சுற்றுலாத்தளமாக திகழ்கிறது.

சில நிகழ்வுகளை தவிர்த்து அயோத்தி வாழ் மக்களை சமுதாய நல்லிணக்கத்தையும், சமூக சக வாழ்கைகளையும் கடைபிடித்து வருகிறார்கள். பாபரி மஸ்ஜித் தாவா மனுதார்கள் இடையே ஒற்றுமையான உறவு, அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவி வருவது உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஹனுமான் ஹார்த்தியை ஆஷாத் நவாப் கட்டியது. அதன் வளாகத்திலேயே ஷாஹே ஆஸம் மஸ்ஜித் (அத்-காதி வாலி மஸ்ஜித்) அமைந்திருப்பது, இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகளால் நிறைய முஸ்லிம் அடக்கஸ்தளங்களும், தர்காக்களும் அமைந்திருப்பது போன்றவை அயோத்தியில் மக்கள் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வதாகக்காட்டுகிறது. அயோத்தி முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வசித்தாலும், அவர்கள் கடைகளையும் மற்ற வணிக நிறுவனங்களையும் மகிழ்ச்சியுடன் நடத்தி வருவது, உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்த நிலையில், நமது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அயோத்தியின் அரசியலமைப்பு சட்ட மாண்புகள், ஆகியவற்றை அழிக்கும் முயற்சிகள் ஃபாசிசத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. அயோத்தி நகரத்தை அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படும் காயாக மாற்ற இந்த வேலைகளை ஃபாசிசம் மெல்ல நகர்த்துகிறது. எனவே, உண்மையின் கள நிலவரத்தை வெளிக்காட்ட வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் இந்தியாவில் அயோத்தி நகரத்தின் உண்மையான முகத்தை காட்டவும், அதில் உள்ள அரசியல் சதியை வெளிப்படுத்தவும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ. கட்சி) ”அயோத்தியா – அரசியல் சதுரங்கத்தில் ஒரு காய்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு உள்ளது.

இந்த புத்தகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் அவர்கள் எழுதியுள்ளார். அயோத்தியின் உண்மைத் தன்மையை அதில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். சமுதாய சூழல் சகோதரத்துவத்தை பயன்படுத்துவது போன்றவற்றால் ஜனநாயக மாண்புகளை கட்டுப்படுத்துவதற்கான வழி காட்டுதலை இந்த நூல் செய்கிறது. நமது நாட்டின், அரசியல் சட்டப்படியான சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நம்பிக்கையில் இந்த புத்தகம் ஒரு முயற்சியை மேற் கொண்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் பி.பி. சாவந்த் அவர்கள் முகவுரை எழுதியுள்ளார்.

சமூக நல்லிணக்க அயோத்தியின் பெயர் சொல்லும் இந்த நூலை, அயோத்தியில் ஹனுமன் ஹார்கியில் உள்ள ஸ்ரீராம் ஓட்டலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் அவர்கள் வெளியிட மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கொல்சி பட்டேல், அயோத்தியா ராம ஜன்ம பூமி தலைமை மதகுரு சதேந்திர குமார்ஜி ஆகியோர் பெற்று கொண்டனர்.

 

மேலும் இப்புத்தக வெளியீட்டு விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது ஷாஃபி, கட்சியின் உத்திரபிரதேச மாநில தலைவர் முஹம்மது காமில், பாபரி மஸ்ஜித் தாவா மனுதாரர் இக்பால் அன்சாரி மற்றும் பிரபல சமூக போராராளி கலில் அஹமது உள்பட பலர் கலந்து கொண்டார்கள். விழாவில் ஸ்ரீ ஹாரி தயால் மிஸ்ரா, பாபு பாய் (சாதிக் அலி) நஸ்முலா ஹசன் காளி, ஸ்ரீ ஜுஹல் சிகோ சாஸ்திரி மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். 

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை