ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக டிரம்ப் அறிவித்ததற்கு எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்!

ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்கும், அந்த பழங்கால நகருக்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றி அதிபர் டிரம்ப் அறிவித்து இருப்பதற்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

அமெரிக்க தூதரகத்தை டெல் அவில் நகரில் இருந்து ஜெருசலம் நகரத்திற்கு மற்றுவதோடு, ஜெருசலசத்தை இஸ்ரேலின் நகராக அங்கீகரித்த திட்டமானது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். உலகில் உள்ள அமைதியை விரும்பும் மக்கள், இந்த மாற்றங்கள் செய்வதை தடுக்க முன்வர வேண்டும். இதற்காக அவர்கள் அமெரிக்கா மீதும், இஸ்ரேல் மீதும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு பயங்கரமான விளையாட்டை மேற்கொள்கிறார். இஸ்ரேலுக்கு தாரைவார்க்கும் ஜெருசலம் அமெரிக்காவின் சொத்தோ அல்லது டிரம்பின் சொத்தோ அல்ல;  இது பாலஸ்தீனத்தின் மீதான கொச்சையான பிணம் தின்னும் வேலையாகும், அமைதி நடவடிக்கைகளில் டிரம்ப் அபாயகரமான படிகளை எடுத்து வைக்கிறார். ஆனால் முடிவில் தற்போதுள்ள நிலையே நீடிக்கப்போகிறது. இதனால் ஏற்படப்போகும் அழிவு மாற்றம், இஸ்ரேலுக்கு கொடும் கனவாக முடியும்.

ஜெருசலம் நகரம் முழுவதும் இஸ்ரேலின் இறையாண்மை நிரூபிக்கப்படவில்லை. அதில் முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்கான புனித பகுதிகள் உள்ளன. ஜெருசலத்தின் எந்த பகுதி மீதும் இஸ்ரேல் உரிமை கொண்டாட ஐ.நா. அங்கீகாரம் வழங்கவில்லை. ஜெருசலம் மீதான தங்களுக்குள்ள உரிமைகளை குறித்து இஸ்ரேல்-ஃபாலஸ்தீனம் ஆகிய இரு தரப்பும் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும்.

ஜெருசலத்தின் கிழக்குப்பகுதியை இஸ்ரேல் உரிமை கொண்டாட பெரும்பான்மையான ஐ.நா. உறுப்பு நாடுகளும், மற்ற சர்வதேச அமைப்புகளும் அங்கீகாரம் அளிக்கவில்லை. ஜெருசலம் நகரை இஸ்ரேல் 1980ல் தலைநகராக அறிவித்ததையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. தற்போதைய முயற்சி, புதிய மோதல்களை உருவாக்கி அதன் மூலம் உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் மற்றும். ஐ.நா. சபை ஆகியவை செய்த கூட்டு சதியின் காரணமாக ஃபாலஸ்தீனத்தின் பகுதியை இஸ்ரேல் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அமெரிக்கா மற்றும் போலந்து வழங்கிய ஆயுதங்கள் மற்றும் உதவியால் இஸ்ரேல் ஆயிரக்கணக்கான ஃபாலஸ்தீனியர்களை கொன்று குவித்தது. கிழக்கு ஜெருசலம் தான் ஃபாலஸ்தீனத்தின் உரிமைப்பட்ட தலைநகரமாகும். மேற்கண்டவாறு எ.சயீத் கூறினார். 

இச்செய்தியை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை