இந்தியாவில் நிலவும் சவால்களை சந்திக்க தொலை நோக்குப் பார்வை, சக்திவாய்ந்த போராட்ட குணத்தோடு கூடிய மக்கள் இயக்கத்துக்கு எஸ்.டி.பி.ஐ. அழைப்பு

மராட்டிய மாநிலம் மும்பையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி P.B. சாவந்த், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் துணைத்தலைவர் மௌலானா சஜ்ஜாஜ் நுஃமானி மற்றும் முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சா பட்டேல் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட தேசிய அளவிலான Alliance for Peace and Justice (அமைதி மற்றும் நீதிக்கான கூட்டமைப்பு)ன் கலந்தாய்வு கூட்டம் 15.10.2017 மற்றும் 16.10.2017 ஆகிய இரு தேதிகளில் மும்பை போர்ட் ஆஜாத் மைதான் அருகாமையிலுள்ள, மும்பை மராத்தி பத்ரகார் சங்க் என்ற இடத்தில் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சையீத் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கலந்தாய்வு கூட்டத்தில் ஏ.சையீத் பேசியதாவது;-

இந்தக்கூட்டமைப்பின் முன்னால் உள்ள சவால் ஒன்றே ஒன்றுதான். அது, மக்கள் இயக்கத்தை தொலை நோக்குப் பார்வையுடனும், போர்குணத்துடனும் வடிவமைப்பதே ஆகும், முதலாளித்துவத்தை பின் தொடர்வது ஏகாதிபத்தியம் என்று ஒரு பழமொழி உண்டு. இதை நாம் ஏற்கனவே இந்தியாவில் அனுபவித்திருக்கிறோம். வளர்ச்சி என்ற போர்வையில் முதலாளித்துவமும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர்வையில் ஏகாதிபத்தியமும் இந்த நாட்டுக்குள் நுழைந்தன. இந்த இரு கோரக்கரங்களும் அரசியல் கட்சிகள், ஆட்சி இயந்திரம், மத மற்றும் கலாச்சார அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் நீதி பரிபாலனம் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது நாட்டின் மொத்த நடைமுறைகளையும் கையில் எடுத்துக் கொண்டன. இந்த புனிதமற்ற சேர்க்கைக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும், பா.ஜ.க.வும் ஒரு சேர பங்கேற்றன. தற்போது அது முதலாளித்துவம், ஏகாதியபத்தியம், வகுப்புவாதம் ஆகிய முப்பரிமாண சக்தியாக உருவெடுத்துள்ளது. நமது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் இவை செய்திருக்கும் இழப்பை இங்கே நான் விளக்கிக் கூற விரும்பவில்லை.

நமது அரசியலமைப்புச் சட்டத்தை நாம் பேணி பாதுகாப்பது குறித்து நாம் விவாதிப்போம். அந்தப் பாதுகாப்பை பாராளுமன்றம் மற்றும் நீதி பரிபாலனம் மூலம் மட்டுமே செய்துவிட முடியாது. அதற்கு ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. நமது நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் சட்டத்துக்கு மேல் எழுந்த வாரியாகப் பார்த்தால் எந்த கேடும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் முஸ்லிம்கள் மற்றும் தலித்களின் பாதுகாப்பு என்ற பிரச்சினையில் பார்க்கும் போது அது முக்கியமாகிறது.

ஆட்சி எப்பொழுதெல்லாம் மக்கள் விரோதமாக செயல்படுகிறதோ, அப்போதெல்லாம் அதற்கு கறுப்புச் சட்டங்கள் தேவைப்படுகின்றன. மக்களை குறிப்பாக முஸ்லிம்களையும், தலித்களையும் நசுக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, மத்திய அரசு பல கறுப்புச் சட்டங்களை இயற்றியுள்ளது. தற்போது அரசுக்கு கறுப்புச்சட்டங்கள் கூட போதவில்லை. அதன் காரணமாக அடக்குமுறைக்கு எண்கவுண்டர் கொலைகளில் ஈடுபடுகிறது.

முஸ்லிம்களை பொறுத்தவரை பழக்கமானக் வகுப்பு வாதம் மட்டுமே அச்சுறுத்தல் இல்லை. அதன் காரணமாக உலக அளவில் முஸ்லிம்கள் எதிர்ப்பு கொள்கையை ஏற்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நமது தேசத்தை ஜனநாயகத்தின் சரியான பாதைக்கும் மதசார்பின்மைக்கும் கொண்டுவர இந்த விஷயங்களை சரியாக அடையாளம் கண்டு கொண்டு மக்கள் இயக்கத்தை முன்னேத்திச் செல்வதில் இருந்து தப்பிக்க முடியாது.

தற்போது இந்த நாட்டில் நிலவும் பரிதாபகரமான சமூக, அரசியல் சூழ்நிலைக்கு எல்லா அரசியல் கட்சிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த பொறுப்பில் இருந்து யாரும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியும் தப்பிக்க முடியாது. அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் தங்களது திட்டத்தை நிறைவேற்ற சமாஜ்வாதி கட்சி, பா.ஜ.க, ராஷ்டிரிய ஜனதா தளம் மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளைப் பயன்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சியின் குழு எப்பொழுதும் நம்முடன் இருப்பதாக ராகுல் காந்தி கூறிவருகிறார். அந்த குழு எங்கே இருக்கிறது? அப்படி ஒரு குழு அவர்களிடம் இருந்தால், மக்கள் இயத்தின் முண்ணனியில் காங்கிரஸ் அல்லவா இருக்க வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ, நிதி அமைச்சரையோ அல்லது காங்கிரஸ் தலைவரைக் கூட சந்திக்க முடியவில்லை. அந்த இடைவெளி தற்போதும் நீடிக்கிறது. ராகுல் காந்தி கூறும் அந்தக்குழு. அமெரிக்கவை விட நரேந்திர மோடியும், அவர் அரசாங்கத்தையும் விட குறைந்தது அல்ல. சந்தேகமில்லாமல் இது மிகவும் அபாயகரமானது.

எனவே, இதனை சரியான மாற்று ஏற்பாட்டால் போக்க வேண்டும். அதன் காரணமாக சுத்தமான ஒரு தளத்தில் இருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும். 
தெளிவான தொலைநோக்கு மற்றும் போராட்ட குணத்தோடு கூடிய மக்கள் இயக்கத்தை அமைப்பதுதான் நம் முன் உள்ள சவால் என்பதை மீண்டும் ஒரு முறை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேற்கண்டவாறு தேசிய தலைவர் எ.சையீத் கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் சேக் முஹம்மது அன்சாரி உள்ளிட்ட மனித உரிமை போராளிகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை