குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் தாமதம். எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதில் இந்திய தேர்தல் ஆணையம் காலதாமதப்படுத்துவதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த விசயத்தில் குஜராத் ஆளும் கட்சிக்கும், மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் ஏதோ சூட்சுமம் இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி சந்தேகப்படுகிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சையத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில், “பிரதமரின் விருப்பத்திற்கு இணங்க தேர்தல் ஆணையம் செயல்பட்டால் அது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும். தற்போது இந்த தேசம் ஒரு எதேச்சதிகாரத்தை நோக்கி நகர்கிறது. அரசின் அழுத்தத்திற்கு சுதந்திரமான அரசியலமைப்பு சட்ட அமைப்பினர் பலியாகி வருகிறார்கள். நிச்சயமாக இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. பாஜக ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறது. தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருப்பவர். இதற்கு முன் குஜராத்தின் தலைமை செயலாளராக பணியாற்றியவர். எனவே அவர் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் துணை போவதாக தெரிகிறது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் விசயத்தில் தேர்தல் ஆணையர் பாஜகவிற்கு ஒரு தலைபட்சமான ஆதரவாளராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆளும் இமாச்சல பிரதேசத்துக்கு தேர்தல் தேதியை அறிவிக்கும் அதேநேரத்தில், வெள்ள நிவாரணத்தை காரணம் காட்டி, குஜராத்துக்கு தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஆணையம் விதிவிலக்கை அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரும் வெள்ளப் பேரிழப்பு ஏற்பட்டபோது கூட அங்கே தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை. ஆனால், குஜராத் அரசாங்கம் வெள்ள நிவாரணப்பணிகள் முடியும் வரை தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. குஜராத் அரசு விடுத்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சட்டப்பூர்வமான அமைப்பு. அது உச்ச நீதிமன்றம் மற்றும் குடியரசு தலைவருக்கு மட்டும் பதில் கூற கடமைப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அல்ல.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக அரசு சில நகாசுவேலைகளில் ஈடுபடுகிறது. குஜராத்தில் பாஜக தேர்தலை சந்திக்கும் நேரத்தில், அம்மாநில மக்கள் மோடிக்கும், பா.ஜ.க.விற்கும் எதிர் குரலை எழுப்பி வருகிறார்கள். தலித்கள், விவசாயிகள் மற்றும் பட்டேல் சமூகத்தினர் பாஜகவிற்கு ஆதரவாக இல்லை. அதனால் பாஜக தோல்வியை எதிர்நோக்கியுள்ளது. ஆகவே, பாஜகவிற்கு தேர்தலை சந்திக்க அவகாசம் தேவைப்படுவதாலேயே இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.” என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை