நகராட்சி தலைவர் தேர்தலில் SDPI ஆதரவால் வெற்றிபெற்ற காங்கிரஸ்

கர்நாடகா சாம்ராஜ்நகர் நகராட்சி தலைவர் தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்க மதசார்பற்ற ஜனதாதளம், வாட்டாள் கட்சி ஆகியன பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததோடு, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் கட்சி தாவினார். இதனால் மிக இக்கட்டான சூழலில் SDPI கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து ஒர் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது.

சாம்ராஜ்நகரில் பாஜகவுக்கு 5 உறுப்பினர்கள் மட்டும் இருந்த நிலையில், கே.எஸ்.ஆர், வாட்டாள் நாகராஜின் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம், ஒரு சுயேட்சை மற்றும் கட்சி தாவிய காங்கிரஸ் உறுப்பினரின் ஆதரவோடு 16 வாக்குகளை பாஜக பெற்றது. அதே வேளையில், 7 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ், SDPI கட்சியின் 4 உறுப்பினர்கள், பி.எஸ்.பி., பி.எஸ்.ஆர். மற்றும் ஒரு சுயேட்சையுடன் 17 வாக்குகளை பெற்று நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது.

இதற்கு முன்னர் பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் SDPI கட்சியின் வாக்குடன் மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியை SDPI கட்சி காப்பாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை