தேசிய செய்திகள்

ஈரான் மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற பஷார் அல் அசாத் படைகளால் சிரியாவில் குழந்தைகளும் பொது மக்களும் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு வருவதை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும், இந்திய அரசும் தலையிட்டு தடுத்து நிறுத்தவும், மனித படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பாத ஐ.நா.வை கண்டித்தும் டெல்லியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை SDPI கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தில் SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் வழக்கறிஞர் அஹமது சர்ஃபுத்தீன், தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷாஃபி, Dr. தஸ்னீம் ரஹ்மானி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் டெல்லி மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
உத்திரபிரதேசத்தில் பீம் சேனை தலைவரும், தலித் போராளியுமான சந்திர சேகர ஆஸாத்தை, தேசிய பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் உ.பி. அரசு கைது செய்து, சிறையில் அடைத்திருப்பதைக் கண்டித்து புதுடெல்லி மூர்த்தையாலில் இருந்து உ.பி. பவன் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
மதவாதம் தலை தூக்கி, அதனால் வன்முறை வெடிக்கும் வேலையில், தேச பக்தர்களும், மனித மாண்பை மதிப்பவர்களும் கைகோர்த்து, சமூக ஒற்றுமையையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளையும், பலப்படுத்துவது கடமையாகிறது. அயோத்தியை பொறுத்தவரை, உண்மைக்கு மாறாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பறைசாற்றுவதில் வாழும் எடுத்துக்காட்டாக திகழ்வது அயோத்தியா தான்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொள்கை மற்றும் செயல்வீரர்களின் துடிப்பான செயல்பாடுகளை கண்டு அரசியல் ஆர்வலரும், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய செயலாளருமான டாக்டர். தஸ்லீம் அஹமது ரஹ்மானி அவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் முன்னிலையில் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
முஸ்லிம்களின் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க அரசை கண்டித்தும், ஜெருசலத்தை ஃபாலஸ்தீனத்துக்கே திருப்பிக் கொடு என்ற முழக்கத்தோடும் டெல்லியில் #SDPI கட்சியின் சார்பில் மாபெரும் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இப்போராட்டத்தில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்கும், அந்த பழங்கால நகருக்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றி அதிபர் டிரம்ப் அறிவித்து இருப்பதற்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
மோடி அரசு கடந்த ஆண்டு (நவம்பர் 08, 2016) இரவு 8 மணிக்கு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் பல சொல்லன்னா துயரங்களை சந்தித்தனர். மோடி அரசு அறிவித்தது போன்று எவ்வளவு கருப்பு பணங்களை கைப்பற்றி இருக்கிறார். ஓராண்டு நிறைவு பெற்றும் பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் இந்திய மக்களிடையே நாட்டின் பிரதமர் வாய் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் SDPI கட்சி சார்பாக மோடி அரசே பதில் சொல் என்ற முழக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மராட்டிய மாநிலம் மும்பையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி P.B. சாவந்த், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் துணைத்தலைவர் மௌலானா சஜ்ஜாஜ் நுஃமானி மற்றும் முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சா பட்டேல் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட தேசிய அளவிலான Alliance for Peace and Justice (அமைதி மற்றும் நீதிக்கான கூட்டமைப்பு)ன் கலந்தாய்வு கூட்டம் 15.10.2017 மற்றும் 16.10.2017 ஆகிய இரு தேதிகளில் மும்பை போர்ட் ஆஜாத் மைதான் அருகாமையிலுள்ள, மும்பை மராத்தி பத்ரகார் சங்க் என்ற இடத்தில் நடைபெற்றது.
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதில் இந்திய தேர்தல் ஆணையம் காலதாமதப்படுத்துவதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த விசயத்தில் குஜராத் ஆளும் கட்சிக்கும், மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் ஏதோ சூட்சுமம் இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி சந்தேகப்படுகிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சையத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சாம்ராஜ்நகர் நகராட்சி தலைவர் தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்க மதசார்பற்ற ஜனதாதளம், வாட்டாள் கட்சி ஆகியன பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததோடு, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் கட்சி தாவினார். இதனால் மிக இக்கட்டான சூழலில் SDPI கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து ஒர் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை