மாவட்ட செய்திகள்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை தமிழகத்தில் முழுமையாக ரத்து செய்யவேண்டும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும் மாநில அரசும் முழு பொறுப்பேற்க வேண்டும், நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் SDPI கட்சியின் மதுரை வடக்கு தெற்கு தொகுதி சார்பில் வடக்கு தொகுதி தலைவர் சிக்கந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து SDPI கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஓசூரில் ஊடக ஒருங்கிணைப்பாளர் சபீர் அஹமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து SDPI கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஓசூரில் ஊடக ஒருங்கிணைப்பாளர் சபீர் அஹமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சானாவாஸ், கர்நாடக மாநில பெங்களூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மௌலானா சஃபியுல்லா, குரேஜ் பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் முஹம்மது கலீல் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சார்ந்த மீரா தம்பி என்பவர் கடந்த மாதம் SRM பேருந்தில் சென்னைக்கு பயணம் செய்த போது தூத்துக்குடியில் வைத்து அதே பேருந்தில் பயணம் செய்த சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையைச் சார்ந்த இருவரால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி பாளை தொகுதி சார்பாக மேலப்பாளையத்தில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பாளை தொகுதி தலைவர் மின்னத்துல்லாஹ் தலைமையில் சந்தை ரவுண்டானா அருகே நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி நகர SDPI கட்சியின் சார்பாக முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நகர தலைவர் ஷேக் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.மேலும் SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முஹம்மது முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர்கள் முஹைதீன் அப்துல் காதர், அஹமது நவவி ஆகியோரும் உரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழ் உறுப்பினர் கே.கே.ஹபீப் ரஹ்மான் துவக்க உரையாற்றினார்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி நகர SDPI கட்சியின் சார்பாக முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நகர தலைவர் ஷேக் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.
வட சென்னை மாவட்டம் இராயபுரம் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டையில் சென்னை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் சரிவர வழங்கப்படாததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் இராயபுரம் பகுதிக்குட்பட்ட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் SDPI கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி வட சென்னை மாவட்டம் பெரம்பூர் தொகுதி SDPI கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் மாநில செயலாளர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி வட் சென்னை மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் மாவட்ட நேதாஜி ஜமால் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் SDPI கட்சி புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லத்தீப் அவர்கள் புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். முன்னதாக கிளை செயலாளர் முஹம்மது உசேன் வரவேற்புரை ஆற்றினர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை