மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி 35-வது வார்டில் மக்களின் அன்றாட தேவையான குடிநீரில் கழிவுநீர் கழந்து வருகிறது. இதனை கண்டித்து SDPI கட்சியுடன் பொதுமக்கள் இணைந்து கடந்த வியாழன் (அக்டோபர் 19, 2017) அன்று மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தொடர் இரண்டு நாட்களாக மாநாகராட்சி வேலையை துரிதப்படுத்தி குடிரீல் கழிவுநீர் கழந்து வருவதை சரி செய்து வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் தேவிட்டினத்தில் தூய்மை மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் (PDO) மற்றும் தேவிபட்டினம் அரசு மருத்துவமைனை தலைமை மருத்துவர் டாக்டர் முனீஸ்வரி ஆகியோர் தேவிபட்டினத்தின் குப்பைகள் நிறைந்த பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.
SDPI கட்சியின் மாநில மக்கள் தொடர்புத்துறை(PRO) நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் மதுரையில் இன்று(20.10.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் உட்பட பல்வேறு மாவட்ட மக்கள் தொடர்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி 35-வது வார்டில் மக்களின் அன்றாட தேவையான குடிநீரில் கழிவுநீர் கழந்து வருகிறது. இதனை கண்டித்து SDPI கட்சியுடன் பொதுமக்கள் இணைந்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி 28-வது வார்டு சார்பாக கிளை நிர்வாகிகள் தலைமையில் ஜாமிஆ பள்ளிவாசல் வெளியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகரம் சார்பாக நகர தலைவர் T.J.மாப்பிள்ளை தம்பி தலைமையில் மார்க்கெட் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மருத்துவ அலுவலவர் டாக்டர். பா. விஜயகுமார் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அரவக்குறிச்சி தொகுதி தலைவர் A. ஜாபர் சாதிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.முஹம்மது மிர்ஸா, பள்ளபட்டி நகர செயலாளர் S.காஜாமொய்தீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் T.S.சேக் பரித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதியில் உள்ள மண்ணடி பகுதியில் மாநகராட்சியின் அலட்சியத்தால் குப்பைகள் சாலையில் கொட்டிகிடக்கும் அவலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்தது. இதனை SDPI கட்சியுடன் மண்ணடி பகுதி பொதுமக்கள் ஒருங்கிணைந்து துறை சார்ந்த நிர்வாகிகளிடம் சாலையில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வந்த மழையால் பச்சப்பட்டி பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமித்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சேலம் மாநகராட்சி போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என SDPI கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் முகமது ரபி தலைமையில் மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வின் போது கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி மத்திய சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி தொகுதி 63 வது வட்டம் சார்பாக 4 கிளைகளில் 6-க்கும் மோற்பட்ட இடங்களில் 63-வது வட்ட தலைவர் சலீம் தலைமையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மத்திய சென்னை மாவட்ட செயலாளர் அஹ்மத் அலி முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் சோப்பாக்கம் தொகுதி செயளாலர் சலிம் ஜாபர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் பயனடைந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை