மாவட்ட செய்திகள்

தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனது வழக்கமான அநாகரிக போக்கை கையாண்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய இறைத்தூதர் முகமது நபி (ஸல்) பற்றியும் தேவையில்லாமல் பேசி, அந்த விவகாரத்தை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை SDPI கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
நெல்லை மாவட்டம் ரவணசமுத்திரம் பகுதியில் உள்ள குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா. இவர் அமெச்சூர் ஆசியன் யோகா விளையாட்டு ஃபெடரேசன் சார்பாக தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று விரைவில் இவ்வமைப்பின் மூலம் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேர்வாகி உள்ளார். மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா மற்றும் அவரது யோகா ஆசிரியர் கண்ணன் ஆகியோரை நேரில் அழைத்து SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில துணை தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் பாராட்டினார்.
புதுவையில் பள்ளிவாசலை சேதப்படுத்திய ஃபாசிசவாதிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள பெரிய பள்ளிவாசல் வெளியில் செல்லும் கால்வாய் நகராட்சியால் தூர்வாரப்பட்டது. தூர்வாரப்பட்ட கால்வாய் சரியான முறையில் மூடப்பட்டு பாதை அமைத்து தராததால் கடந்த நான்கு நாட்களாக பள்ளிவாசலுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த கள்ளக்குறிச்சி நகர SDPI கட்சியினர் பள்ளிவாசலுக்கு செல்லும் வழியை மீண்டும் ஒரு முறை சுத்தம் செய்து வழி அமைத்து கொடுத்தனர்.
குமரி அருகே மையம் கொண்டுள்ள ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, வேர்கிளம்பி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சரிந்து குடியிருப்புகளின் மேல் விழுந்தது. இதனை அறிந்த SDPI கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்ட தலைவர் சுல்ஃபிக்கர் அலி மற்றும் ஃபைஸல் அஹமது தலைமையில் உடனடியாக களமிறங்கி மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஆலத்துாரான்பட்டியில் நஜ்முதீன் (வயது 20) என்ற இளைஞர் முன் விரோதத்தின் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்களாள் 21.10.2017 அன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்து சம்பந்தப்பட்டவர்களை பிடித்து சென்ற காவல்துறையினர் கொலையாளிகளை கொலை வழக்கில் கைது செய்யாமல் மாறாக கொலையாளியான மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் விரைவில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.
கந்துவட்டியின் பிரச்சனையால் நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்து உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டி இன்று(24.10.2017) மருத்துவமனையில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டார். மேலும் இப்போராட்டத்தில் கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிருக்கு போராடியவர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் மருத்துவமனையில் நேரில் சென்று பார்வையிட்டு. உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்
SDPI கட்சி நடத்தும் டெங்கு ஒழிப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் தொகுதி,47 வட்டத்திற்கு உட்பட்ட கொருக்குபேட்டை பாரதி நகர் அவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் சுத்தம் செய்யும் பணி இன்று (21.10.2017) காலை நடைபெற்றது.இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், வட சென்னை மாவட்ட தலைவர். நேத்தாஜி ஜமால், பொது.செயலாளர்.புஸ்பராஜ், தொகுதி செயலாளர். நியாஸ், து.தலைவர். அப்துல்லாஹ் உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை