மாவட்ட செய்திகள்

SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக ஏர்போர்ட் வயர்லஸ்ரோடு பகுதியில் பிரமாண்ட பேரணி மற்றும் கண்டன பரப்புரை நடைபெற்றது.பேரணியை திருச்சி மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து கண்டன பரப்புரை துவங்கியது. இதில் திருச்சி மாவட்ட செயலாளர் ஹஸ்ஸான் வரவேற்புரை ஆற்றினார். திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அமீர் பாட்ஷா தொடக்கவுரை ஆற்றினார்கள்
மத்திய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு இழைத்த துரோக செயலை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக, தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் நெல்லை முஹம்மது முபாரக் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி வீரவநல்லூரில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா மற்றும் இருசக்கர வாகன தலைகவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.30.0000 செலவில் கட்டி முடிக்கப்பட்ட சமுதயாக்கூடம் மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் குப்பைக்கூடமாக மாறிவரும் அவலத்தை தடுத்து நிறுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு வரவைக்க வேண்டி இன்று அனைத்து கட்சிகளின் சார்பில் நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது. இதில் SDPI கட்சியின் சார்பில் ஓசூர் நகர நிர்வாகிகள் பங்கெடுத்து நகராட்சியின் அவலங்களை எடுத்துரைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் SDPI கட்சியின் சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் தெருமுனைக்கூட்டம் ஓசூர், மந்திரிகிரி, கிருஷ்ணகிரி ஆட்டோ நிறுத்தம், காந்தி ரோடு,நேதாஜி ரோடு, சாமாலப்பட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகர SDPI கட்சி சார்பாக பரவி வரும் டெங்கு காய்சலை குணப்படுத்தும் நிலவேம்பு கசாயம் மதுக்கூர் மெலானா தோப்பு, சந்தை பேட்டை பள்ளி, இடையகாடு பள்ளி (ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள்) ஆகிய இடங்களில் விநியோகிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் SDPI கட்சியின் சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் தெருமுனைக்கூட்டம் அம்மாப்பேட்டை, கெங்கனவள்ளி, புதுத்தெரு, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
நாகை வடக்கு மாவட்டம் SDPI கட்சியின் சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் தெருமுனைக்கூட்டம் ஆக்கூர், ஆயப்பட்டி, குத்தாலம், மனல்மேடு, நீடூர், கிளியனூர், எழந்தங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட SDPI கட்சியின் சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் தெருமுனைக்கூட்டம் அம்பை தொகுதி விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட SDPI கட்சியின் சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் தெருமுனைக்கூட்டம் தக்கலையில் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை