தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் SDPI கட்சியின் சார்பாக தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதுவை மாநிலத்தில் அரசு பணிகளுக்கு, முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 2% தில் இருந்து 5% ஆக உயர்த்தித்தர கோரியும் குரூப்-‘B’ NON GAZETTED பணியிடங்களில் முஸ்லிம்கள், வன்னியர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர்களின் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த கோரியும், கடந்த ஒரு வார காலமாக தொடர் பிரச்சாரங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி செய்துவருகின்றது. அதில் தெருமுனை கூட்டம், நோட்டீஸ் பிரச்சாரம், ஜமாத் சந்திப்பு நிகழ்ச்சி, பத்திரிகையாளர் சந்திப்பு, முக்கியஸ்தர்கள் சந்திப்பு, என பல்வேறு வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் இறுதியாக இன்று (14.11.2017) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் புதுச்சேரி சுதேசி காட்டன் மில் அருகில் துவங்கி புதுவை சட்டமன்றம் வரை பேரணியும், அதனை தொடர்ந்து தலைமை தபால் நிலையம் அருகில் பொதுக்கூட்டமும் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி நகர SDPI கட்சியின் சார்பாக முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நகர தலைவர் ஷேக் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.மேலும் SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முஹம்மது முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர்கள் முஹைதீன் அப்துல் காதர், அஹமது நவவி ஆகியோரும் உரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழ் உறுப்பினர் கே.கே.ஹபீப் ரஹ்மான் துவக்க உரையாற்றினார்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி நகர SDPI கட்சியின் சார்பாக முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நகர தலைவர் ஷேக் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.

இந்தியாவை அடித்துக் கொல்லாதே பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று மேட்டுப்பாளையத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் நிஜாம் முகைதீன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக ஏர்போர்ட் வயர்லஸ்ரோடு பகுதியில் பிரமாண்ட பேரணி மற்றும் கண்டன பரப்புரை நடைபெற்றது.பேரணியை திருச்சி மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து கண்டன பரப்புரை துவங்கியது. இதில் திருச்சி மாவட்ட செயலாளர் ஹஸ்ஸான் வரவேற்புரை ஆற்றினார். திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அமீர் பாட்ஷா தொடக்கவுரை ஆற்றினார்கள்

ஆகஸ்ட் 01 முதல் 25 வரை தேசம் தழுவிய அளவில் நடைபெறும் இந்தியாவை அடித்துக் கொல்லாதே! வீட்டை விட்டு வெளியில் வந்து போராடு என்ற மக்கள் பிரச்சாரத்தின் மாபெரும் மக்கள் திரள் கூட்டம் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத், இஸ்லாம்பூரில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கர்நாடக மாநிலம் ரைச்சூர் மகிலாமந்தல் மைதானத்தில் நடைபெற்ற ‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் கர்நாடக மாநில தலைவர் அப்துல் ஹன்னான் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

கேரள மாநிலம் கொல்லம் சடையமங்கலத்தில் நடைபெற்ற ‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணி-பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பசுகுண்டர்கள் நிகழ்த்தும் அப்பாவிகள் படுகொலைகள் குறித்தும், அதற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் விழித்தெழ வேண்டிய அவசியம் குறித்தும் உரை நிகழ்த்தினார்.

இந்தியாவை அடித்துக் கொல்லாதே! என்ற முழக்கத்துடன் SDPI கட்சியின் தேசிய பரப்புரையின் ஒருபகுதியாக கர்நாடக மாநிலம் #மைசூரில் கொட்டும் மழையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

 
Page 1 of 2

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை