தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் அரசின் பொதுமக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அரசின் விதிமுறைகளுக்கு முரணாகவும் தரங்கதாரா ரசாயண ஆலை(DCW) செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையை மூடக் கோரி SDPI கட்சி அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு!-ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு நடைமுறையில் இருந்தும், தொடர்ச்சியாக நிலத்தடி நீரை சட்டவிரோதமாக தனியார் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லும் கொள்ளையர்களை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதனை தடுக்காமல் துணை போகும் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது நல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து SDPI கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சார்ந்த மீரா தம்பி என்பவர் கடந்த மாதம் SRM பேருந்தில் சென்னைக்கு பயணம் செய்த போது தூத்துக்குடியில் வைத்து அதே பேருந்தில் பயணம் செய்த சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையைச் சார்ந்த இருவரால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்த மீரா தம்பி என்பவர், நேற்று (ஆக.27) காயல்பட்டணத்திலிருந்து தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அப்பேருந்தில் முன்பதிவு இல்லாத இரண்டு நபர்களை வரும் வழியில் பேருந்து ஓட்டுனர் ஏற்றியிருக்கிறார். போதையில் இருந்த அவர்கள் பேருந்துக்குள் ஏறியவுடன் கலாட்டாவில் ஈடுபட்டதோடு இருக்கையில் அமர்ந்திருந்த மீரா தம்பியின் மீது வாந்தி எடுத்துள்ளனர். இதனை மீரா தம்பி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் பேருந்தில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் மேலும் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளதோடு மதரீதியாகவும் மீரா தம்பியை பேசியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பேருந்து தூத்துக்குடி அருகே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக இறங்கிய மீரா தம்பியை அந்த இரண்டு போதை நபர்களும் பின்தொடர்ந்து சென்று ஆயுதங்களால் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த கொலை குறித்து காவல்துறை விரைவாக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தப்பியோடிய கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தமிழக காவல்துறை தலைவருக்கு அளித்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும், கொலையாளிகளின் பின்னணி குறித்தும், அவர்கள் ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த காரணம் குறித்தும் ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்த கொலையின் பின்புலத்தில் மதவெறி சக்திகளின் கைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்

தூத்துக்குடி அரசு நிர்வாகத்தின் ஆதரவுடன் தினமும் 10கோடிக்கும் (லிட்டர்) அதிகமான நிலத்தடி நீரை தனியார் நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டித்தும். இதற்கு துணை நிற்கும் மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி வருவாய் துறை, வன காவல்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்தும் 21.08.2017 அன்று நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.

வழிபாட்டு தளங்களில் ஒலி பெருக்கி அகற்ற காவல்துறை கெடுபிடி கொடுத்துவரும் நிலையில் SDPI கட்சி மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகள் சட்டவிழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது!

இந்நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான ஷாஜஹான் அவர்கள் சட்டரீதியான வழிமுறகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை