பன்னாட்டு சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரியும், ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் உடணடியாக வழங்கிட வலியுறுத்தியும், குமரியின் இயற்கையை வளங்களை பாதுகாத்திடக்கோரியும் SDPI கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (25.04.2018) காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் சுல்ஃபிகர் அலி தலைமையில் குமரி மாவட்ட மக்களின் மாபெரும் வாழ்வுரிமை போராட்டம் நடைபெற்றது.

தலித்கள் மீதான தொடர் தாக்குதல்கள், கிறிஸ்தவ ஆலயங்களுக்கான தடை, ஜெபக்கூட்டங்களுக்கான தடை, புனித நூல் எரிப்பு ஆகிய வன்முறை வெறியாட்டங்களை நடத்தும் பாஸிச பயங்கரவாத கும்பலை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் களியக்காவிளையில் கடந்த 12.04.2018 வியாழன் அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் குமரி மாவட்ட தலைவர் சுல்ஃபீகர் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

தமிழக அரசு குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கவும், காணாமல் போன மீனவர்களை உடனே கண்டுபிடித்திடவும், நெல்லை மற்றும் குமரியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் உட்பட அனைவருக்கும் உடனே நிவாரணம் வழங்கிடவும் SDPI கட்சியின் சார்பாக சென்னையில் இன்று (டிச.03) மாபெரும் சாலை மறியல் போராட்டம் மாநில செயலாளர் எஸ். அமீர் ஹம்ஸா தலைமையில் நடைபெற்றது.

குமரி அருகே மையம் கொண்டுள்ள ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, வேர்கிளம்பி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சரிந்து குடியிருப்புகளின் மேல் விழுந்தது. இதனை அறிந்த SDPI கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்ட தலைவர் சுல்ஃபிக்கர் அலி மற்றும் ஃபைஸல் அஹமது தலைமையில் உடனடியாக களமிறங்கி மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் SDPI கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் மாவட்ட தலைவர் சுல்ஃபிகர் அலி தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட SDPI கட்சியின் சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் தெருமுனைக்கூட்டம் தக்கலையில் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்றது.

‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசம் தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாபெரும் மக்கள் திரள் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுல்ஃபிகர் அலி தலைமை தாங்கினார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை