DCW ஆலையை மூடக்கோரி கையெழுத்து பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் அரசின் பொதுமக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அரசின் விதிமுறைகளுக்கு முரணாகவும் தரங்கதாரா ரசாயண ஆலை(DCW) செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையை மூடக் கோரி SDPI கட்சி அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மதியம் 2 மணிக்கு காயல்பட்டணத்தில் மாபெரும் கையெழுத்தி பிரச்சாரம் நடைபெற்றது.

முன்னதாக ஜாமிவுல் அஸ்கர், சிறு பள்ளி, TNTJ பள்ளி, சம்சுதீன் பள்ளி, தவ்பா பள்ளி,மொகுதும் பள்ளி ஆகிய பள்ளிகளில் கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த பிரச்சாரத்தில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் மற்றும் காயல்பட்டணத்தின் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உட்பட சுமார் 3000க்கும் மேற்பட்டவர்கள் DCW ஆலையை மூடக் கோரி கையெழுத்திட்டு தங்கள் கண்டனத்தையும், SDPI கட்சியின் தொடர் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவையும் வழங்கினர்.

இந்த விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள் SDPI கட்சி இந்த தொடர் முயற்சியில் DCW ஆலையை இழுத்து மூடும்வரை உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தனர்.

இறுதியாக SDPI கட்சியின் அடுத்தக்கட்ட பிரச்சாரம் குறித்து காயல்பட்டிணம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசித்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை