குமரி மாவட்ட மக்களின் வாழ்வுரிமை போராட்டம்

பன்னாட்டு சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரியும், ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் உடணடியாக வழங்கிட வலியுறுத்தியும், குமரியின் இயற்கையை வளங்களை பாதுகாத்திடக்கோரியும் SDPI கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (25.04.2018) காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் சுல்ஃபிகர் அலி தலைமையில் குமரி மாவட்ட மக்களின் மாபெரும் வாழ்வுரிமை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, ஜனநாயக கிருஸ்தவ பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் அருட்திரு ஜார்ஜ் பொண்ணையா, பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர், குமரி பாசனத்துறை தலைவர் வழக்கறிஞர். வின்ஸ் ஆண்றோ, விமன் இந்தியா மூவ்மெண்டின் மாவட்ட தலைவர் நபிலா ஆலிமா, நேஷனல் விமன் ஃபரண்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனூபா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காஜா முகைதீன், மாவட்ட செயலாளர் ஹாஜி ஜாஹிர் ஹுசைன் மற்றும் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள், ஜமாத்தார்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை