திரிபுராவில் வன்முறை செயல்கள் சென்னையில் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ. போராட்டம்

திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் வன்முறை செயல்கள்-கண்டித்து சென்னையில் தடையை மீறி இரயில் மறியல் போராட்டம்-நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திரிபுராவில் CPI(M) உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள்-தலைவர்களின் நினைவு சின்னங்கள், அலுவலகங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை கண்டித்தும், மத்திய அரசு உடனே அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் சென்னை,தி.நகர். இரயில் நிலையம் முன்பு தடையை மீறி மாபெரும் இரயில் மறியல் போராட்டம் தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் தலைமையில் நடைபெற்றது.

இந்த இரயில் மறியல் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா, மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஃபாரூக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் அன்சாரி, வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், பொதுச்செயலாளர் புஷ்பராஜ், தென் சென்னை மாவட்ட செயலாளர்கள் அப்துல் ரசாக், பைரோஸ் பாபா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இஸ்மாயில், விருகை தொகுதி தலைவர் ஈஸா, தி. நகர் தொகுதி தலைவர் உமர், SDTU தொழிற்சங்க வடசென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் ஷேக், மத்திய சென்னை மாவட்ட தலைவர் காஜா முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். மறியல் போராட்டம் தடையை மீறி நடைபெற்றதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

 

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை